
சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளலாம்.
1. குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகி விடுவீர்கள் என்பதை உணர்த்தும் - கௌரவர்கள் வாழ்வு.
2. எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும் என்பதை உணர்த்தும் - கர்ணனின் வாழ்வு.
3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியமாக இருக்கக்கூடாது என்பதை உணர்த்தும் - அஸ்வத்தாமனின் வாழ்க்கை முறை.
4. அறமற்ற அநியாயக்காரர்களின் அதிகாரத்திற்கு பணிந்து அவர் இட்ட ஆணைகளை ஏற்க வேண்டும் என்பதாக ஆழ்ந்த - பீஷ்மரின் வாழ்க்கை முறை.
5. செல்வம், பதவி, அதிகாரம் மற்றும் தவறு செய்பவர்களின் ஆதரவுடன் செய்யும் துஷ்பிரயோகம் இறுதியில் மொத்த அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்த்தும் - துரியோதனின் வாழ்வு.
6. ஒரு குருடனிடம் அதிகாரக் கடிவாளத்தை ஒருபோதும் ஒப்படைக்ககூடாது. அது அழிவுக்கு வழி வகுக்கும் என்பதை உணர்த்தும் - திரிதராஷ்டிரன் வாழ்வு.
7. அறிவுடன் ஞானமும் இறைவன் துணையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதை உணர்த்தும் - அர்ஜுனன் வாழ்வு.
8. வஞ்சகமும் , சூதும் எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் வெற்றிக்கு அழைத்துச் செல்லாது என்பதை உணர்த்தும் - சகுனி வாழ்வு.
9. நீதி நெறிமுறைகள், மற்றும் கடமையை வெற்றிகரமாக நிலைநிறுத்தினால் மட்டுமே, உலகில் எந்த சக்தியும் தீங்கு செய்யாது என்பதை உணர்த்தும் - யுதிஷ்டிரர் வாழ்வு.
இதுவே மகாபாரதம் இதை புரிந்து கொள்பவர்கள் மொத்த மகாபாரதத்தையுமே புரிந்து கொள்ளலாம்.