
சாதாரணமாக குடும்பங்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அமாவாசை அன்று மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வார்கள். அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு என்றால் இன்னும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வார்கள். அப்படி உடல் நிலைக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம், அறிவியல் கூறும் உண்மை என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
கடல் அலையின் தன்மையைப் பற்றி பெரும்பாலும் எல்லோரும் நன்கு அறிவர். கடல் நீர் மட்டும் ஒரு நாளில் இரண்டு முறை உயர்வது போல் இரண்டு முறை தாழ்ந்தும் விடுகிறது.
இது சந்திரனின் ஈர்ப்பு விசையால் ஏற்படுவதாகும். இந்த சந்திரனின் ஈர்ப்பு விசையோடு சில நேரங்களில் சூரியனின் ஈர்ப்பு விசையும் சேர்ந்து கொண்டு கடல் அலைகளை அதிக உயரத்துக்கு எழுப்பும். சந்திரனின் ஈர்ப்பு விசையை இவ்வாறு அதிகரிக்க செய்கின்ற சூரியனால் சில நேரங்களில் சந்திரனுக்கு உள்ள ஈர்ப்பு விசையை குறைக்கவும் முடியும் என்றாலும் கூட, சூரியனை விட சந்திரனே நமக்கு மிக அருகில் இருப்பதால், கடல் அலைகளை அதிக உயரத்துக்கு மேலே எழுப்பி அதை அதிக ஆழத்துக்குக் கீழேயும் கொண்டு செல்லும் சக்தி சந்திரனுக்கு உண்டு. இவ்வாறு உள்ள இந்த சக்தியில் பாதி அளவு சக்தியே சூரியனுக்கு உண்டு.
அமாவாசையில் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டிற்கு வருகின்றன. இதனால் கடலில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. அதிலும் சற்று அதிகமாகவே ஏற்படுகின்றன. அமாவாசையில் சூரிய சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் கடல் நீரில் மாற்றங்கள் ஏற்படுவது போல், நமது உடல் நீரிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
நமது உடல் எடையில் 60 சதவீதம் அளவு நீர் உள்ளது. அமாவாசை அன்று நமது உடல் நீரானது சூரிய, சந்திரரால் ஈர்ப்பு விசைக்கு உள்ளாக்கப்பட்டு வாதநீர், வீச நீர், உப்பு நீர் ஆகியன நம் உடலில் அதிகம் சுரந்து வெளியே வருகின்றன. இதனால் உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு மேலும் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இன்னும் பலருக்கு கை, கால்கள் மற்றும் வயிற்று பகுதிகளில் வீக்கம் ஏற்படுகின்றது. மனித மனநிலை மாறுவதற்கும் இதுவே காரணமாக இருக்கின்றது.
இதனால் தான் அமாவாசை போன்ற தினங்களில் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். நம் வீட்டிலும் வயதானவர்களை மிகவும் கவனமுடன் பார்த்துக் கொள்வதன் காரணமும் இதுதான். இது விஞ்ஞானபூர்வமான கருத்து என்பது உறுதி என்று கூறப்பட்டுள்ளது.