என்னது..! பெண்களும் பூணூல் அணிந்திருந்தார்களா?!

Women poonool culture
poonool culture
Published on

பூணூலில் மூன்று பட்டைகள் இருக்கின்றன...

பிரம்மசாரிக்கு – ஒற்றை பட்டை (மூன்று இழை)

திருமணமாகும் போது – இரட்டை பட்டை (ஆறு இழை)

சீமந்தம் ஆகும் போது – மூன்று பட்டை (ஒன்பது இழை)

இந்த விதியில் தான் பூணூலை ஆண்களுக்கு அணிவிப்பது வழக்கம்.

இந்த பூணூலை அணிவதால் தீய பழக்கங்கள் அண்டாமல் ஆன்மீக வழியில் மனதை செலுத்தி சுத்தமாக வைத்து கொள்ளலாம் என்ற ஒரு ஜதீகத்தில் காலம் காலமாக இந்த வழக்கத்தை நாம் கடைப்பிடித்து வருகிறோம்.

அது மட்டுமில்லாமல் ஒரு ஆண் அணிந்திருக்கும் பூணூல் பட்டைகளை வைத்து திருமணமாகி விட்டதா இல்லையா என்று கண்டுபிடித்து விடலாம். எப்படி பெண்களின் கழுத்தில் தாலியை பார்த்தால் நமக்கு திருமணமானவள் என்று தெரிந்துவிடுமோ அதைப் போலத் தான் இந்த பூணூல் இழைகளை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.

வருடா வருடம் ஆவணி அவிட்டம் அன்று தான் இந்த பூணூலை மாற்றி புதியதாக அணிந்து கொள்வது வழக்கம். ரிக் மற்றும் யஜூர் வேதத்தை சேர்ந்தவர்கள் இந்த நாளில் தான் மாற்றிக் கொள்கிறார்கள்.

ஏன், இந்த குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் பூணூலை மாற்றிக் கொள்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு?? காரணத்தை பார்க்கலாமா..

இதையும் படியுங்கள்:
ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழும் 10 அதிசய விலங்குகள்!
Women poonool culture

பண்டைய காலத்தில் எல்லோருமே அதாவது சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் கல்வி கற்க குருகுலத்திற்கு தான் செல்வார்கள். குருகுலம் செல்வதற்கு முன்னால் சிறுவர்களும் சிறுமியர்களும் பூணூல் அணிந்து கொள்ளவேண்டும் என்ற நியதி இருந்தது. காமம் மனதில் புகும் வயதிற்கு முன்பே இதனைச் செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. கல்வியை பயில தொடங்கும் முன்னால் சிறுவர்களும் சிறுமியர்களும் குருவிடம் முறைப்படி பூணூல் அணிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இருந்ததாக கூறப்படுகிறது.

ஒரு நாளில் மூன்று முறை சூரியனை நோக்கி வழிபாடு செய்து பின்னர் தியானம் செய்யவேண்டும். தினமும் பிராணாயாமம் செய்வதும் அவசியம். இதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் மனமும் ஒருமுகப்படுத்தப்படுகிறது. மாணவப் பருவத்தில் கவனம் சிதறாமல் இருக்கவும் கற்கும் கல்வியில் அதிக ஈடுபாடு கொள்ளவும் இத்தகைய பயிற்சிகள் அவசியம் எனவும் கருதப்பட்டது. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அந்த நாட்களில் குழந்தைகளுக்கு பூணூலை அணிவித்தார்கள்.

சிறுவனோ சிறுமியோ பூணூல் அணிந்திருந்தால் அவர்கள் வேதத்தையும் கல்வியையும் பயிலுகிறார்கள் என்று எடுத்து கொள்ளப்பட்டது. கல்வி கற்ற மற்றும் கற்பவரின் (ஆண் பெண் இருவருக்கும்) அடையாள சின்னமாக பூணூல் கருதப்பட்டது.

இதையும் படியுங்கள்:
தங்கத்தில் முதலீடு... எந்த தேர்வு சிறந்தது?
Women poonool culture

பண்டைய காலத்தில் ஒரு சிறுவனையோ அல்லது சிறுமியையோ கல்வி பயில இந்து மாத லூனார் நாட்காட்டியின்படி ஷ்ராவண் மாதத்தில் தான் பூணூலை அணிவித்து குருகுலத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

நாளடைவில் காலத்தின் மாற்றத்தால் இந்த பூணூலை பெண்கள் அணிவது மறைந்து போய் விட்டது. ஆண்கள் மட்டுமே அணிந்து கொள்ளும் வழக்கமாகி விட்டது.

ஷ்ராவண் மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதம் என்பதால் அந்த மாதத்தில் கல்வியை கற்பிக்க ஆரம்பித்தாலோ அல்லது வேறு எதையாவது புதியதாக தொடங்கினாலோ சிறப்பாக இருக்கும் என்றும் அவர்கள் கருதினார்கள்.

பொதுவாகவே இந்துக்கள் எல்லோருமே இந்த ஷ்ராவண் மாதத்தில் மாமிசத்தை உண்ண மாட்டார்கள்.

ஆகவே தான் அன்று முதல் இன்று வரை ஆவணி அவிட்டம் அன்று தான் பூணூலை ஆண்கள் மாற்றிக் கொள்கிறார்கள். அதாவது ஆவணி மாதம் அல்லது ஷ்ராவண் மாதத்தில், பௌர்ணமி திதி மற்றும் அவிட்டம் நட்சத்திரம் இரண்டும் இணைந்த நாளை தான் ஆவணி அவிட்டம் என்று கூறுகிறோம். ஆனால் ஷ்ராவண் மாத பெளர்ணமி சில சமயம் ஆடி மாதத்திலேயே அவிட்டம் நட்சத்திரத்தோடு சேர்ந்து வந்து விடும்.

இதையும் படியுங்கள்:
ரக்ஷாபந்தன்: எல்லா நாளுமே போற்றப் பட வேண்டிய உறவு...
Women poonool culture

ஷ்ராவண் மாத பௌர்ணமி ஆடி மாதத்திலேயே வந்தாலும் அன்று தான் பூணூலை மாற்றிக் கொள்வார்கள். இந்த வருடம் கூட ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 9. தமிழ் மாதத்தின் படி அன்று ஆடி மாதம் 24ந் தேதி பௌர்ணமி திதி, ஆனால் லூனார் நாட்காட்டியின் படி அன்று ஷ்ராவண் மாத பௌர்ணமி திதி ஆகும். ஷ்ராவண் மாத பௌர்ணமி அன்று தான் ரக்ஷாபந்தன் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com