

மூன்று
எண் மூன்று என்பது ஆன்மீகத்தில் இலக்கியம் மற்றும் எண் கணிதத்தில் மிகவும் மகத்துவமான ஒன்றாகும். கோவில்களில் நாம் வலம் வரும் போதும் “மூன்று” முறையே வலம் வருவார்கள் பக்தர்கள். இந்து சமயத்தில் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் “பிரம்மா,விஷ்ணு, சிவன்”ஆகியோர் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களைச் செய்கின்றனர்.
தமிழ் இலக்கியத்தில் முத்தமிழ் என்று போற்றப்படும் “இயல், இசை, நாடகம்” முக்கியத்துவம் வாய்ந்தவை. முத்தமிழ் சங்கங்கள் “தலை, இடை, கடை” சங்கம் சிறப்பானவை. உலகின் அடிப்படையாக விளங்கும் முக்காலங்கள் என்று அழைக்கப்படும் “இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம்” ஆகியவை மனித வாழ்வின் முக்கியத்துவம் வாய்ந்தவை.
முக்கனிகள் என்று போற்றப்படும் “மா, பலா, வாழை” ஆகியவை சுவை மணம் மற்றும் சத்துக்கள் நிறைந்தப் பாரம்பரியம் வாய்ந்தவை. திருமணத்தின்போது மணப்பெண்ணிற்கு மூன்று முடிச்சுகளை போடப்படுகிறது. தமிழ் கலாச்சாரத்தின் மூன்று என்ற எண் மங்களகரமானதாக் கருதப்படுகிறது.
ஐந்து
ஐந்து என்ற எண் ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாக் கருதப்படுகிறது. பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படும் “நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்” ஐந்தும் பிரபஞ்சத்தின் அடிப்படையாகக் கருதப்படுகிறது.
ஐம்புலன்கள் என்று போற்றப்படும் “பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல்” ஆகியவை மனித வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவை. மகாபாரத புராணத்தில் பஞ்சபாண்டவர்கள் என்று அழைக்கப்படும் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய ஐவரும் தர்மத்தின் அடையாளமாகப் போற்றப்பட்டன.
அழிக்கும் கடவுள் என்று போற்றப்படும் ஈசனுடைய சக்தி வாய்ந்த ஐந்தெழுத்து மந்திரமாக “நமசிவாய” மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மற்றும் புனிதமான சொல்லாகும். ஐந்திணைகள் என்று போற்றப்படும் “குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை” ஆகிய ஐந்து நிலங்களும் மனித வாழ்வாதாரமாக அமைகின்றன. மேலும் தமிழ் இலக்கியத்தில் பா வகைகள் என்று போற்றப்படும் ஐந்தும் “வெண்பா, ஆசிரியர்ப்பா, களிப்பா, வஞ்சிப்பா, மறுப்பா” ஆகும். ஐம்பால் என்று போற்றப்படும் “ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்”ஆகும்.
ஏழு
எண் ஏழு என்பது பரிபூரண மற்றும் சக்திவாய்ந்த எண்ணாகக் கருதப்படுகிறது. ஆன்மீகத்தின்படி சப்த்த ரிஷிகள் என்று அழைக்கப்படும் “அகத்தியர், அந்திராசர், கௌதமர், காசிபர், குலத்தியர் வசிஷ்டர், மார்க்கண்டேயர்” என்ற ஏழு முனிவர்கள் உள்ளனர். வாரத்தின் ஏழு நாட்கள் என்று அழைக்கப்படும் “திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு” உள்ளது. வானவில்லின் ஏழு நிறங்கள் “ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு” உள்ளன.
ஒன்பது
ஒன்பது என்ற எண் தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பானதாகவும் மகத்துவம் வாய்ந்ததாகவும் விளங்குகிறது. ஆக்கத்தை உருவாக்கும் அம்பிகைக்கு கொண்டாடப்படும் நவராத்திரி ஒன்பது நாட்கள் (9 இரவுகள்) கொண்டாடப்படும் ஒரு பிரசித்திப் பெற்ற விழாவாகும். நவதானியங்கள் என்று கூறப்படும் (நெல், கோதுமை, பாசிப்பருப்பு, மொச்சை, உளுந்து, எள், துவரை, கடலை, கொள்ளு) ஒன்பது கருதப்படுகிறது.
ஜோதிடத்தில் வாழ்வை நிர்ணயிக்கும் கிரகங்கள் ஒன்பது (சந்திரன், சூரியன், குரு, சுக்கிரன், ராகு, கேது, செவ்வாய், புதன், சனி). படைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வாழ்வின் மிகவும் முக்கியமான பெண்களின் கர்ப்பம் பூரணமடைவது ஒன்பதாவது மாதத்தில்தான். இது படைப்பின் முக்கியத்துவத்தை கூறுகிறது.
நவரசம் என்று கூறப்படும் மனிதர்களின் உணர்வுகளான (இன்பம், அழுகை, கோபம், கருணை, சாந்தம், அருவருப்பு, வீரம், பயம், அற்புதம்) ஆகிய ஒன்பதும் குறிப்பிடப் படுகிறது. ரத்தினங்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது கற்கள் ஒன்பது கிரகங்களுக்குத் தொடர்புடைய மிகவும் விலைமதிப்பற்ற (மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், வைரம், நீளம், கோமேதகம், வைடூரியம்) கற்கள் ஆகும்.