கோயில் திருவீதி உலா ஏன்?பக்தரைக்காண வரும் உற்சவரின் ஆன்மிக அர்த்தம்!

கோயிலில் உள்ள மூலவரை அல்ல, செம்பு கலந்த உலோக உற்சவரை வீதியுலாவிற்கு அழைத்து வருவதின் பின்னணி என்ன? மின்சார ஓட்டம் போல இறைசக்தி பக்தரிடம் சென்று சேரும் ஆன்மிக, அறிவியல் விளக்கம்.
temple-thiruveethi-ula
temple-thiruveethi-ula
வி. சுவாமிநாதன்

எனது தந்தை நிறைய சமூக சிறுகதைகள் எழுதியுள்ளார். குறிப்பாக கல்கியில் எழுதிய 'பிரமை!' மற்றும் 'அவர்கள் காத்திருக்கிறார்கள்!' சிறுகதைகள் கல்கி பரிசு போட்டியில் பரிசு வாங்கியது குறுப்பிடத்தக்கது. தற்போது மங்கையர் மலரில் பிரசுரமான எனது சிறுகதை 'கூண்டு கிளி அல்ல நான்!' என்னுடைய முதல் படைப்பு. தினமலர் வாரமலரில் கவிதைச்சோலை பகுதியில் கவிதைகளூம், தினத்தந்தி குடும்ப மலரில் புதுக்கவிதைகளும் மற்றும் தொகுப்பு நூலில் தன்முனைக் கவிதைகளும் பிரசுரமாகி உள்ளன. நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசை உள்ளது.

Updated on

பொதுவாக எல்லா ஊர்களிலும் பண்டிகை நாட்களில் இறைவன் திருவீதி உலா வருவது தொன்று தொட்டு வழக்கமான ஒன்று. இப்படி ஏன் நடக்கிறது என்று பார்த்தால் அதில் ஒரு அர்த்தம் பொதிந்து கிடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இதை பற்றி அறிவியல் மற்றும் ஆன்மிகம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

கோயில் திருவிழா நடைபெறும் அன்றுதான் இந்த இறைவன் புறப்பாடு நடைபெறுகிறது. கோயிலில் இருக்கும் மூலவரை திருவீதி உலாவிற்கு சப்பர பவனியாக அழைத்து வருவது இல்லை. அதற்க்கு உற்ச்சவர் தனியாக உலோகத்தினால் செய்த விக்ரகத்தைதான் பயன் படுத்துவார்கள். செப்பு கலந்து பிற உலோகங்களை கொண்டு செய்த விக்ரகங்கள் பயன்படுத்தி வருவது வழக்கம்.

நாம் பயன்படுத்தும் மின்சார வயருக்குள் செப்பு கம்பி இருக்கிறது அல்லவா. இது அதிவேகத்தில் மின்சாரத்தை கடத்தி, மின்விளக்குகளை எரியவைக்கிறது. மற்றும் இயந்திரங்களை இயக்குகிறது. செம்பை தேய்க்க தேய்க்க எப்படி பளபளவென்று மின்னுகிறதோ, அதேபோலதான் இறைசக்தி என்னும் மின்சாரம் பக்த கோடிகளை அடைய பக்தன் பேரின்ப நிலையை அடைகிறான். இதற்காகதான் இறைவனை வீதி உலா பவனி வருவதை உருவாக்கினார்கள் என்று கூறுகிறார்கள்.

இதையே ஆன்மிக பெரியோர்கள் கூறுவது என்ன என்பதை பார்ப்போம்.

முதியவர்கள் தங்கள் தள்ளாத வயதில் கோயிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியாது என்பதற்காகவும், தீட்டுபட்ட பெண்கள் கோயிலுக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாலும். மரணம் போன்ற தீட்டு இருக்கும் குடும்பம் தரிசனம் செய்வதற்காகவும் இறைவனின் திருவீதி உலா நடை பெறுவதாக நம் பெரியோர்கள் சொல்கிறார்கள்.

மற்றும் நோயாளிகள், கர்பகாலம் போன்ற காரணங்களால் கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள், இப்படி பல காரணங்களால் கோயிலுக்கு செல்ல முடியாதவர்களுக்காக இறைவன் திருவீதி உலா நடைபெறுகிறது. தீட்டு பட்டவர்களும் திருவீதி உலா வரும் இறைவனை தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. 

இதையும் படியுங்கள்:
ஒரே சங்கு வடிவ ஸ்ரீ வல்லப சேத்திரம்: திருவாழ் மார்பன், இரட்டை கொடிமரம், மழலை பாக்கியம் அருளும் அதிசய தலம்!
temple-thiruveethi-ula

இதற்கு பரிகாரம் செய்வதற்கு, இறைவன் திருவீதி உலா நிறைவு செய்தவுடன். இறைவனுக்கு திருஷ்டியை நிவர்த்தி செய்த பிறகே இறைவனை திரும்பவும் ஆலயத்தில் எழுந்தருளச் செய்வர். இதனால் பகாதர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் திருவீதி உலா வரும் உற்ச்சவரை யார் வேண்டுமானாலும் வீட்டில் இருந்த படியே தரிசனம் செய்யலாம். அப்படி செய்பவர்களுக்கு எந்த தடையும் கிடையாது. அதனால் எந்த பாவமும் வராது. இது எந்த விதத்திலும் தெய்வ குற்றமும் ஆகாது என்பதை எல்லாரும் நினைவில் வைத்துக்கொண்டு, வீடு தேடி வரும் உற்ச்சவமூர்த்தியை மனதார வேண்டி வணங்கி, தெய்வத்தின் அருளை பெற்று மகிழுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com