

ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் ஏழு எண்ணிற்கும் பிரிக்க முடியாத அளவிற்கு பல சிறப்புமிக்க தொடர்புகள் உள்ளன. 108 திவ்ய தேசங்களில் முதன்மையான திவ்ய தேசம் என்று கொண்டாடப் படும் தலமாகும். பெருமாள் வைகுண்டத்தில் எப்படி இருப்பாரோ அதே திருக்கோலத்தில் ரங்கநாதராக இங்கு காட்சி அளிக்கிறார்.
கோபுரங்கள் தூங்கி திருமேனி வரை அளவில்லாத சிறப்புகள் கொண்டது சீரங்கம். பல ஆன்மிக சிறப்புகளையும் ஆச்சர்யங்களையும் கொண்டது இவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய தலம் என்ற பொருளில் ஏழு பிராகாரங்களுடன் ஏழு திருமதில்களைக்கொண்டது ஸ்ரீரங்கம்.
2.பெரிய கோவில்,பெரிய பெருமாள்,பெரிய பிராட்டியார், பெரிய கருடன், பெரிய வசரம், பெரிய திருமதில், பெரிய கோபுரம் என்ற ஏழு பெருமைகள் உடையது
3. பெருமாளுக்கு 7 நாச்சியார்கள்
சீதபேதி
பூதேவி
துலுக்க நாச்சியார்
சேரகுலவல்லிநாச்சியார்
கமலவல்லி நாச்சியார்
கோதை நாச்சியார்
ரெங்க நாச்சியார்
4. இக்கோவிலில் வருடத்திற்கு ஏழுமுறை தங்க குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவார்.
விருப்பன் திருநாள்
வசந்த உத்சவம்
விஜயதசமி
பூபதி திருநாள்
பாரி வேட்டை
ஆதிபிரம்மேத்சவம்
வேடுபறி
5. இப்பெருமாள் வருடத்திற்கு ஏழுமுறை கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.
6. சீரங்கம் கோவிலில் நடைபெறும் உத்சவத்தின் ஏழாம் நாளன்று வருடத்திற்கு ஏழுமுறை நெல்லளவு கண்டறுள்வார் அவை,
சித்திரை
வைகாசி
ஆவணி
ஐப்பசி
தை
மாசி
பங்குனி.
7.இக்கோவிலில் நடைபெறும் நவராத்திரி உத்சவத்தின் ஏழாம் நாள் அன்று சீரங்க நாச்சியாரின் திருவடி சேவை நடைபெறும்.
8. தமிழ் ஏழாவதுமாதமான ஐப்பசியில் 30நாட்களும் காவிரியிலிருந்து தங்கக் குடத்தில் நீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து எடுத்து வந்து ரங்கநாதருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
9.ராமரால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது சீரங்கம் கோவில் ராமாவதாரம் ஏழாவது அவதாரமாகும்.
10. இராப் பத்து ஏழாம் நாளன்று நம் பெருமாள் கைத்தலம் சேவை நடைபெறும்.
11.சீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உத்சவங்கள் நடைபெறும். அவை,
வசந்த உத்சவம்
ஜ்யேஷ்டாபிஷேகம்
திருப்பாவாடை
நவராத்திரி
ஊஞ்சல்
அத்யயன உத்சவம்
பங்குனி உத்திரம்
12. பன்னிரண்டு ஆழ்வார்களும் ஏழு சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்கள்.
1. பொய்கை ஆழ்வார்,பூதத்தாழ்வார்,பேயாழ்வார்
2. நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்
3. குலசேகர ஆழ் வார் 4 திருப்பாணாழ்வார்
5. தொண்டரடிப் பொடியாழ்வார்
6. திருமழிசை ஆழ்வார்
7. பெரியாழ்வார்,ஆண்டாள்.
13. இராப்பத்து ஏழாம் நாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியாக சேவை சாதிப்பார்.
14. பெரிய பெருமாள் திருமுகம் உள்ள தென் திசையில் ஏழு கோபுரங்கள் உள்ளன.
நாழி கேட்டான் கோபுரம்
ஆர்யபடாள் கோபுரம்
கார்த்திகை கோபுரம்
ரெங்கா ரெங்கா கோபுரம்
தெற்கு கட்டை கோபுரம 2
ராஜகோபுரம்.
15. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும்
அவை
பூச்சாண்டி சேவை
கற்பூரம் படி சேவை
மோகினி அலங்காரம் ரத்னாங்கி சேவை
வெள்ளி கருடன், குதிரை வாகனம்
உறையூர் சீராக்கும் மற்றும்
ராமநவமி சேர்த்தி சேவை
ஜாலி அலஙாகாரம்.
எண்ணற்ற ஆச்சர்யங்களை உள்ளடக்கிய சீராக்கும் பெருமாளை சேவித்து அவர் அருளைப் பெறுவோம்.