

தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் 13 ஆம் நூற்றாண்டில் பராக்கிரமபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட சிவன் கோவிலாகும். வட இந்தியாவில் உள்ள காசிக்கு நிகராக பேசப்படுவதால் இதற்கு தென்காசி என பெயர் வந்தது. 180 அடி உயரம் உள்ள ராஜகோபுரம் மற்றும் அரிய சிற்பங்களை கொண்டது.
முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்கி வருகிறது. மூலவர் காசி விஸ்வநாதர் அம்பாள் உலகம்மை ஒன்பது நிலைகளைக்கொண்ட ராஜகோபுரம் அமையப் பட்டுள்ளது. தலவிருட்சம் செண்பக மரம். நெல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மாசி மகம் ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது..
பராக்கிரம பாண்டிய மன்னன் கனவில் சிவன் தோன்றி தனக்கு ஒரு கோவில் கட்டும்படி வேண்டிக்கொண்டார். பராக்கிரம பாண்டியன் எந்த இடத்தில் கட்டவேண்டும் என்பதற்கு சிவன் உன் கோட்டையில் இருந்து எறும்புகள் சாரை சாரையாக செல்லும் அவை எந்த இடத்தில் நிற்கிறதோ அந்த இடத்தில் எனக்கு கோவில் கட்ட வேண்டும் எனக் கூறி மறைந்தார்.
மறுநாள் பாண்டிய மன்னனும் எறும்புகள் சாரை சாரையாக செல்வதை கண்டு அதைப் பின் தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் அங்கு எலும்புகள் நின்றுவிட்டது. அந்த இடத்தில் சுயம்புவாக சிவலிங்கமும் அதன் அருகில் நந்தியும் இருப்பதை கண்டார். உடனடியாக மன்னன் அந்த இடத்தில் கோவில் கட்டத் தொடங்கினார். அக்காலத்தில் சிவ பக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம் அவ்வாறு செல்லும் போது அனேகர் பாதி வழியிலேயே இறந்துவிடுவது வழக்கம்
இதனை கருத்தில் கொண்டே சிவபெருமான் மன்னனிடம் தனக்கு தெற்கு பகுதியில் ஒரு கோவில் கட்டவேண்டும் என வேண்டி கொண்டார். தெற்கே இந்த கோவில் அமைந்துள்ளதால் இதற்கு தென்காசி என பெயர் வந்தது. 1445 இல் பராக்கிரம பாண்டிய மன்னனால் இக்கோவில் கட்டப்பட்டு, பின்னர் அவர் இறந்த பிறகு அவரது தம்பி சடையவர்மன் குலசேகர பாண்டியனால் 1505 இல் இந்த பணிகள் நிறைவடைந்தது.
இங்குள்ள சிவனை வழிபட்டால் காசிக்கு சென்று வழிபட்டதற்கு சமம் ஆகும். இங்குள்ள மூலவரை ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கூட பார்க்க முடியும். அந்த அளவிற்கு சுவாமி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் உள்ள காசியில் இறந்தால்தான் முக்தி கிடைக்கும். ஆனால் தென்காசியில் பிறந்தாலும் முக்தி, இறந்தாலும் முக்தி என்கிறது தலபுராணம். மற்ற கோவில்களில் தெற்கு நோக்கி இருக்கும் துர்க்கை இங்கு மேற்கு நோக்கி இருக்கிறார்
சுவாமி முருகன் அம்பாள் மூவரும் ஒருங்கே அமையப்பெற்று இருக்கிறார்கள். இங்குள்ள சிவன் மிகவும் உயரமான தோற்றம் கொண்டவர். எனவே இவரை ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் நேரடியாக பார்க்க முடியும். இங்கு அகஸ்தியர் முனிவரால் நிறுவப்பட்ட ஸ்ரீ சக்கரம் பராசக்தி பீடமாக விளங்கி வருகிறது.
இரு பக்கத்தில் இருந்தும் காற்று வீசும்படி கட்டப்பட்டுள்ளது சிறப்பாக கருதப்படுகிறது. இந்தக் கோவிலை சுற்றி மூன்று மலைகள் சேர்ந்து இருப்பதால் திரிகூடம் என அழைக்கப்படுகிறது. இந்திரன் நாரதர் அகஸ்தியர் மிருகண்டு முனிவர் வாலி ஆகியோர் வழிபட்ட ஸ்தலம் ஆகும். இந்தக் கோவிலை கட்டிய பராக்கிரம பாண்டியன் சிலை உற்சவர் சன்னதியில் உள்ளது.
மாசி மகம் திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசி, நவராத்திரி திருவிழா ஐப்பசி திருக்கல்யாணம் ஆவணி திருவிழா தெப்ப திருவிழா தை அமாவாசை பத்திர தீபம் விழாவும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தக் கோவிலில் நவகிரகங்கள் இரண்டு இடங்களில் இருப்பது சிறப்பாக கருதப்படுகிறது.