அண்ணன் ராவணனுக்காக தம்பி கும்பகர்ணன் செய்த உள்ளத்தை உருகச் செய்யும் உயிர் தியாகம்!

Kumbhakarna sacrificed his life for a debt of gratitude
vibhishanan, kumbakarnan
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ராமாயணம், மகாபாரதம் என்ற இரு பெரும் காப்பியங்களை எடுத்துக்கொண்டால், செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக கும்பகர்ணனும், கர்ணனும் பட்டபாடு அனைவர் இதயத்தையும் வசீகரிக்கும். இதில் கர்ணனின் கதாபாத்திரத்தை அனைவரும் வெளிப்படுத்திப் பேசியதைப் போல், கும்பகர்ணனின் கதாபாத்திரத்தை யாரும் பேசி அவ்வளவாகக் கேட்டிருக்க மாட்டோம். அதில் கும்பகர்ணனின் தியாகம் பற்றி படிக்கும்பொழுது மனதை நெகிழ வைக்கும். அது குறித்து இப்பதிவில் காண்போம்.

கும்பகர்ணனின் தம்பி வீடணன், “அண்ணா! நீயும் என்னுடன் வந்து ஸ்ரீராமருடன் சேர்ந்துகொள். மாபாதக செயலைச் செய்யும் அண்ணன் ராவணனுடன் இருப்பதை விட, அறத்தில் சிறந்த ஸ்ரீராமருடன் இருப்பதுதான் நம்மை நல்வழிப்படுத்தும் செயலாகும். நம்முடன் பிறந்த அண்ணன் ராவணனே ஆனாலும், அவன் செய்யும் இழிச்செயலுக்கு நாம் துணை போகலாமா? நம் உடலில் ஏதாவது ஒரு இடத்தில் கட்டி வந்து விட்டால் அது நம் உடம்பில் தோன்றியது என்பதற்காக, அதை அப்படியே விட்டு வைத்திருக்க விரும்ப மாட்டோம் அல்லவா?

இதையும் படியுங்கள்:
திருமண மாதம் கார்த்திகை ஞாயிறு விரத வழிபாட்டின் பலன்கள்!
Kumbhakarna sacrificed his life for a debt of gratitude

உயிரை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பில் தோன்றிய அந்தக் கட்டியை அகற்ற சிகிச்சை செய்துகொள்ள பயப்பட மாட்டோம்; மாறாக துணிவோம். அதற்கு எங்கோ ஒரு மாமலையில்  தோன்றிய பச்சிலைகளை பறித்து அரைத்து அந்த மருந்தைத்தான் பற்றாகப் போடுவோம். அது போல்தான் இதுவும்.

என்னதான் அண்ணன் ராவணன் நமது உடன் பிறப்பாக இருந்தாலும், தகாத செயலை செய்யும் அவனோடு சேர்ந்து இருப்பதை விட்டு விலகி, மாமலையில் தோன்றும் மருந்து நம் காயங்களை ஆற்ற உதவுவது போல், நல்லதே செய்யும் ஸ்ரீராமபிரானிடம் வந்து சேர்வதுதான் நாம் சிறக்க, செய்த பாவங்கள் எல்லாம் அழிய, சிறந்த வழி. ஆதலால், அண்ணன் ராவணனை விட்டு விலகி ஸ்ரீராமனுடன் வந்து சேர்” என்று  அழைப்பான்.

இதையும் படியுங்கள்:
கார்த்திகை சோமவார சிவ வழிபாட்டில் சங்காபிஷேக பூஜையின் பலன்கள்!
Kumbhakarna sacrificed his life for a debt of gratitude

அதற்கு கும்பகர்ணன், “தம்பி! நான் ஆறு மாதம் உறங்குபவன். ஆறு மாதம் உண்பவன். ஆறு மாத காலத்திற்கு வேண்டிய உணவுகளை வண்டி வண்டியாக அனுப்புபவன் நம் அண்ணன் ராவணன். இவ்வளவு உணவு வகைகளை ஒருவனுக்காக அனுப்புகிறோமே என்று எந்தவிதமான மன வருத்தமும் படாமல் என்னைக் காப்பாற்றி வருபவன் அண்ணன் ராவணன்தான். ஆதலால், நான் அண்ணனுக்கு செஞ்சோற்றுக்கடன் அடைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் அண்ணன் தீய வழியில் செல்கிறான் என்பதை அறிந்து இருந்தாலும், அவனை விடுத்து உன்னுடன் வர என் மனம் ஒப்புக் கொள்ளாது. ஆதலால் நான் உன்னுடன் வர இயலாது.

நீயாவது நாங்கள் இறந்த பிறகு எங்களுக்கு எள்ளும் நீரும் தெளித்து இறுதிக்கடன் செய்ய, உயிரோடு உயர்ந்த இடத்தில்  அடைக்கலம் புகுந்திருப்பதைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நேரத்தில் அந்த ராமபிரானை விட்டு நீ ஏன் இங்கு வந்தாய்? நான் உன்னுடன் வர மாட்டேன். நீ அவரிடம் சென்று சேர்” என்று கும்பகர்ணன், தம்பி வீடணனிடம் கூறுவதாக வரும் இந்தப் படலம் அனைவர் மனதையும் நெகழ்ச்சியுறச் செய்யும்.

logo
Kalki Online
kalkionline.com