பல்லியின் ரகசிய மொழி: உங்களுக்காகக் காத்திருக்கும் அதிர்ஷ்டம்!

Lizard Benefits
Lizard
Published on

வீட்டில் பல்லி ஒலி எழுப்புவதை தமக்கு ஏற்படப்போகும் நன்மை. தீமைக்கான அறிகுறியாக மக்கள் நம்புகின்றனர். பல்லி சொல்லும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஒரு சொல் சொன்னால் துன்பம் ஏற்படும். இரண்டு சொல் சொன்னால் தன லாபம் உண்டாகும். மூன்று சொல் சொன்னால் மரணம் நிகழும். நான்கு சொல் சொன்னால் சௌக்கியம் ஏற்படும். ஐந்து சொல் சொன்னால் உறவினர் வருகை உண்டாகும். ஆறு சொல் சொன்னால் பீடை ஏற்படும். ஏழு, எட்டு சொல் சொன்னால் அகமலிவு உண்டாகும்.

பல்லி எந்த திசையில் இருந்து சொல்கிறதோ அதற்கேற்ப பலன்கள் ஏற்படுவதும் உண்டு. வடக்கு திசை – சுபச் செய்தி வரும். தெற்கு திசை - எதிர்பாராத சுக சௌகரியங்களையும், எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் அளிக்கும். கிழக்கு திசை - உடனடியாக ஏதோ ஒரு கெடுதல் நடக்கப்போவதாக அர்த்தம். மேற்கு திசை - சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கான எச்சரிக்கையாகும். தென்கிழக்கு திசை - உடனடியாக கலகம் உண்டாகும். தென்மேற்கு திசை - உறவினர்கள் வருகை தருவார்கள். மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். சுயமனையில் வலத்திலும், வாசலிலும் உச்சத்திலும் சொன்னால் பண வரவு உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
குலதெய்வ வழிபாடு: அகல் விளக்கு ஏற்றும் போது இப்படி செஞ்சிப் பாருங்க...
Lizard Benefits

அதேபோல், பல்லி தம் மேல் விழுவதை தமக்கு ஏற்படப்போகும் நன்மை, தீமைக்கான அறிகுறியாகவும் மக்கள் நம்புகின்றனர்.

தலையின் இடது பக்கம் விழுந்தால் துன்பம் உண்டாகும். வலது பக்கம் விழுந்தால் கலகம் ஏற்படும்.

நெற்றியின் இடது பக்கம் விழுந்தால் கீர்த்தி உண்டாகும். வலது பக்கம் விழுந்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

வயிற்றின் இடது பக்கம் விழுந்தால் மகிழ்ச்சி அதிகமாகும். வலது பக்கம் விழுந்தால் தானியம் பெருகும்.

முதுகின் இடது பக்கம் விழுந்தால் கவலை அதிகமாகும். வலது பக்கம் விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.

கண்ணின் இடது பக்கம் விழுந்தால் பயம் உண்டாகும். வலது பக்கம் விழுந்தால் சுகம் உண்டாகும்.

தோளின் இடது பக்கம் விழுந்தால் வெற்றி உண்டாகும். வலது பக்கம் விழுந்தால் காரியத் தடை ஏற்படும்.

பிருஷ்டத்தின் இடது பக்கம் விழுந்தால் செல்வம் சேரும். வலது பக்கம் விழுந்தால் சுகம் உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
அதிகாலை எழுதல்: வெறும் பழக்கமல்ல, ஒரு வாழ்க்கை முறை!
Lizard Benefits

கபாலத்தின் இடது பக்கம் விழுந்தால் வரவு உண்டாகும். வலது பக்கம் விழுந்தால் செலவு உண்டாகும்.

கணுக்காலின் இடது பக்கம் விழுந்தால் பயணம் ஏற்படும். வலது பக்கம் விழுந்தால் செலவு உண்டாகும்.

மூக்கின் இடது பக்கம் விழுந்தால் கவலை ஏற்படும். வலது பக்கம் விழுந்தால் வியாதி உண்டாகும்.

மணிக்கட்டின் இடது பக்கம் விழுந்தால் கீர்த்தி உண்டாகும். வலது பக்கம் விழுந்தால் பீடை ஏற்படும்.

தொடையின் இடது பக்கம் விழுந்தால் மன சஞ்சலம் உண்டாகும். வலது பக்கம் விழுந்தால் பிதா அரிஷ்டம் ஏற்படும்.

நகத்தின் இடது பக்கம் விழுந்தால் நஷ்டம் ஏற்படும். வலது பக்கம் விழுந்தால் செலவு உண்டாகும்.

காதின் இடது பக்கம் விழுந்தால் லாபம் உண்டாகும். வலது பக்கம் விழுந்தால் ஆயுள் அதிகமாகும்.

மார்பின் இடது பக்கம் விழுந்தால் சுகம் ஏற்படும். வலது பக்கம் விழுந்தால் லாபம் அதிகமாகும்.

கழுத்தின் இடது பக்கம் விழுந்தால் வெற்றி கிடைக்கும். வலது பக்கம் விழுந்தால் பகை உண்டாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com