

திருவாப்புடையார் கோவில் உருவான சோழாந்தகன் பாண்டிய மன்னனின் பக்தி வரலாறு:
மதுரை மாநகரில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வடக்கே உள்ளது திருவாப்பனூர் திருவாப்புடையார் திருத்தலம். இது சாதாரண சிவதலம் இல்லை. பக்தியின் மதகத்துவத்தையும், அகந்தையின் ஆபத்தையும், இறைவனின் எல்லையற்ற கருணைத் தன்மையையும் எடுத்துரைக்கும் தலம்.
சிவ பூஜையை உயிராகக் கொண்டவன் சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன். எவ்வளவு முக்கிய அரசுப்பணிகள் இருந்தாலும் , எவ்வளவு அவசரமான சூழல் ஏற்பட்டாலும், சிவபெருமானை வணங்காமல் உணவு உண்டதில்லை. சிவபூஜையே அவன் உயிர்.
ஒருநாள் அவன் அமைச்சர்கள் மற்றும் படை வீரர்களுடன் அடர்ந்த காட்டிற்குச் சென்றான். அங்கே அழகிய கண்ணைக் கவரும் மான் ஒன்றைக் கண்டார். அதைப் பிடிக்கும் ஆர்வத்தில் துரத்திச் சென்றான். நீண்டநேரம் சென்றதால் தன் பரிவாரங்களிடமிருந்து பிரிந்து தனிமையில் மாட்டிக்கொண்டான்.
பசி, தாகம், களைப்பு அவனை வாட்டியது. மன்னன் நிலையைப் பார்த்து அமைச்சர் ஒருவர் உணவையும் நீரையும் கொடுத்து உண்ணச் சொன்னான். மன்னரோ மறுத்துவிட்டார் சிவனை வழிபடாமல் உண்ண மாட்டேன் என்றார் மன்னரின் பக்தியை அறிந்த அமைச்சர் ஒரு மரத்துண்டை எடுத்து நிலத்தில் நட்டு இது சுயம்புலிங்கம். இதை வழிபட்டு உண்ணுங்கள் என்றார். கடுமையான பசியில் இருந்த மன்னன் அந்த மரத்துண்டையே சிவலிங்கமாக எண்ணி உருகி வழிபட்டான்.
சில நேரம் கழித்து அது சிவலிங்கம் அல்ல. அது சாதாரண மரத்துண்டு என்று உணர்ந்ததும் அவன் இதயம் உடைந்தது. உடனே சிவபெருமானை நோக்கி இறைவா என்பக்தி உண்மையாக இருந்தால் இந்த மரத்துண்டிலேயே எனக்கு அருள்புரிய வேண்டும் என்று கூறி அழுதான்.
அடுத்த கணமே மரத்துண்டில் தெய்வீக ஒளியுடன் சிவலிங்கம் வடிவம் பெற்றது. மன்னன் ஆனந்தக் கண்ணீரில் நினைத்தான். மரத்தில் காட்சி தந்த இறைவன் திருவாப்புடையார் என்று போற்றப்பட்டார். அந்த ஊர் திருவாப்பூர் என்று அழைக்கப்பட்டது. அம்பாள சுகந்த குந்தளாம்பிகையாக அருள்பாலிக்கிறார். இத்தலத்துடன் குபேரன் பற்றிய கதையும் உள்ளது.
புண்ணிய சேனன என்பவன் சிவபக்தன் அவனுக்கு பெருஞ்செல்வம் மீது ஆசை ஏற்பட்டது. அகத்திய முனிவரின் யோசனைப்படி திருவாப்புடையாரை பக்தியுடன் வழிபடத் தொடங்கினான். நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் ஓடின. இறுதியில் அவன் பக்தி பலித்தது. வாழ்க்கையில் சிவபெருமான் அருளால் அளவற்ற செல்வம் கிடைத்தது.
அகந்தை நீங்கி குபேரன் நற்பேறு பெற்ற திருவாப்புடையார் கோவில் மகிமை:
ஆனால் அகந்தையும் கூடியது. அதனால் பக்தியிலிருந்து விலக ஆரம்பித்தான் அவனுக்குப் பாடம் கற்பிக்க நினைத்த அம்பாள் அவன் பார்வை சக்தியைப் பறித்தாள். செல்வம் இருந்தும் பார்வை பறிபோனதால் அவன் வருந்தி தன் தவறை உணர்ந்தான். கண்ணீர் மல்க இறைவனிடம் மன்னிப்பு கேட்டான். அவரும் நீ வடதிசையின் அதிபதியாக குபேரன் என்ற பெயரில் விளங்குவாய். சங்கநிதி பதுமநிதி ஆகிய தெய்வீக நிதிகளை உமக்கு அளிக்கிறேன் என்றார் குபேரனின் ஒன்பது திதிகளில் சங்கநிதி பத்மநிதி முக்கியமானவை.
அளவற்ற செல்வம், வளம், செழிப்பு, நற்பேறு, அதிர்ஷ்டம் மகிழ்ச்சியை குறிக்கும் தெய்வீக நிதிகள்…
இத்தலத்தில் வழிபட்டால்
வறுமை நீங்கும்
கடன் குறையும்
குடும்ப வளம் அதிகரிக்கும்
தொழில் வியாபாரம்முன்னேற்றம் ஏற்படும்.
அகந்தை நீங்கும்
செல்வ வளம் நிலைத்திருக்கும்.
இக்கட்டுரையின் மூலம் உங்கள் வாழ்வில் சூழ்ந்துள்ள கடுமையான வறுமைப் பிணிகள் நீங்கி, தீராத கடன் தொல்லைகளில் இருந்து முழுமையான விடுதலை பெறலாம். திருவாப்புடையார் திருத்தலத்தின் ஆன்மீக ரகசியங்களை அறிந்துகொள்வதன் மூலம், அகந்தை மறைந்து, தொழிலில் அசுர வளர்ச்சியும், குபேரனுக்கு நிகரான நிலையான செல்வ வளமும், குடும்பத்தில் நிம்மதியும் தேடிவரும் பேரானந்தத்தை நீங்கள் நேரில் காண்பீர்கள்.