
வெள்ளிக்கிழமை என்பது இந்து மதத்தில் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. அதிலும், முக்கியமாக மகாலட்சுமி தேவிக்கு உகந்த நாளாக இது இருக்கிறது. அன்றைய நாளில் மகாலட்சுமி தாயாருக்குப் பிடித்தது போல் நடந்து கொண்டால், அவரது நல்லாசிகள் நமக்குக் கிடைக்கும். செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியின் அருள் இருந்தால்தான் ஒருவரின் வாழ்க்கையில் செல்வமும், செழிப்பும், வளமும் இருக்கும்.
வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு பிடித்த மூன்று நிறங்களில் ஏதேனும் ஒரு நிறத்தில் அல்லது இரண்டு நிறத்தில் உடைகளை அணிவது அவரது மனதை குளிர்விக்க செய்யும். இதனால் ஒருவரது வாழ்வில் மகிழ்ச்சியும் நல்ல அதிர்ஷ்டமும் கிடைக்கும். வெள்ளிக்கிழமை நாம் அணிய வேண்டிய 3 நிறங்களைப் பற்றி இந்தப் பதிவில் அறிந்துக் கொள்வோம்.
வண்ணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்களுடன் தொடர்புடையவை. சில வண்ணங்களின் தாக்கம் அவர்களின் நல் வாய்ப்பிலும் அன்று நடக்கக்கூடிய செயல்களிலும் பிரதிபலிக்கிறது. சில நிறங்கள் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக இருக்கின்றன. சில நிறங்கள் மனிதர்களின் கவலைகளையும் துக்கங்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. நிறங்கள் ஒருவரின் மனநிலையை பிரதிபலிப்பதாகவும், அவருக்கு வரவேண்டிய அதிர்ஷ்டத்தையும் பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றன.
ஒவ்வொரு கிழமைக்கும் ஏற்ப வண்ண ஆடைகளை அணிவது அந்த கிழமையின் கடவுளுக்கு அடிபணிவதாகப் பொருள்படுகிறது. அன்றைய நாளின் ஆதிக்கத்திற்கு உரிய கடவுள், அவருக்குப் பிடித்த வண்ணங்களை கண்டு மனமகிழ்ந்து ஆசீர்வாதங்களை வாரி வழங்குவார். அதுபோல, அன்று அவர்கள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவார். அன்று அவர்களுக்கு சங்கடப்படுத்தக்கூடிய கெடுபலன்களை தடுத்து நிறுத்துவார்.
வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமியின் ஆதிக்கம் மிகுந்த நாளாக இருக்கிறது. இன்றைய நாளில் மகாலட்சுமிக்கு பிடித்த வண்ணம் கொண்ட உடைகளை அணிந்து, அவரை வழிபட்டால் அவரது ஆசிகள் நமக்குப் பூரணமாகக் கிடைக்கும். செல்வத்திற்கும் செழிப்பிற்கும் அதிபதியான பூர்ண லட்சுமி, அன்றைய தினத்தில் உங்களுக்கு நிறைய பண வரவு வருமாறு செய்வார். அன்றைய தினம் உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும்.
உங்கள் வாழ்க்கையில் நல்ல மற்றும் நேர்மறையான பலன்களைப் பெற விரும்பினால், வெள்ளிக்கிழமையில் இந்த 3 நிறங்களில் ஆடைகளை அணியுங்கள். சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய
நிறங்கள் மகாலட்சுமி தேவியின் மிகவும் விருப்பமான நிறங்களாக உள்ளன. இதனால் வெள்ளிக்கிழமை இந்த 3 வண்ணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கும்.
சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ஆடைகள் அணிவதன் பலன்: வெள்ளிக்கிழமை காலையில் குளித்துவிட்டு மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான சிவப்பு நிற ஆடைகளை அணிந்து கொண்டு, சிறிது நேரம் அவரை வழிபாடு செய்யுங்கள். இந்த நிறத்தை அணிந்து வழிபடுவதன் மூலம், மகாலட்சுமி தாயார் உங்களுக்கு மகத்தான ஆசீர்வாதங்களை வழங்குவார்.
அது போலவே, இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறம் மென்மை, கருணை மற்றும் அன்பைக் குறிக்கிறது. வெள்ளிக்கிழமை இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிபவர் மன அமைதி, ஏராளமான அன்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.
வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை ஆடைகளை அணிவதும் மிகவும் மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது. இதுவும் மகாலட்சுமி தாயாரின் விருப்பமான நிறம் என்பதால் அவரது ஆசிகளைப் பெற உதவும். மேலும், வெள்ளை நிற ஆடைகளை அணிவது மன அமைதியைத் தரும். வெள்ளிக்கிழமையானது மகாலக்ஷ்மிக்கு மட்டுமின்றி, சுக்ர பகவானுக்கும் உரிய நாளாகும். இவருக்கும் மகாலஷ்மி தேவிக்கு பிடித்த சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறம் பிடிக்கும் என்பதால் அன்றைய நாளில் சுக்ரனையும் வழிபட்டு இரட்டை அதிர்ஷ்டம் கிடைக்கும் வாய்ப்பைப் பெறலாம்.