இன்றைய இந்தியாவில் எல்லா இன, மொழி, மத மக்களிடையே பரவி இருப்பது பயணங்கள். பெரும்பாலான பயணங்கள் ஆன்மீகப் பயணங்கள் ஆகும். கால் நடையாகவோ, காவடிகள் தூக்கியோ, காவி வேட்டியணிந்தோ ஒரு குறிப்பிட்ட இடைவெளியில், ஆண்டுதோறும், குறைந்த பட்சம் ஒரு பயணம் என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் கட்டாயம் இருக்கும். அணியும் ஆடைகள் மாறுபட்டிருக்கலாம் ஆனால் பிராத்தனையில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மதத்தினருமே தன் வாழ்நாளின் கடமையாக ஒரு குறிப்பிட்ட ஆலயத்தில் தொழுவதை வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அவரவர் மதத்தில் இயேசு கிறிஸ்து மேரி மாதா மரியன்னை, அல்லா, முகமது நபி, சீக்கியர், ஜைனர், புத்தம் என அடிக்கடி அதுவும் அவரவர் சூழ்ந்து வாழும் இடம் அதிக எண்ணிக்கையில் இருக்குமேயானில் அங்கே வழிபாடு கொண்டாட்டங்கள் ஏராளம், தாராளம். இந்தியாவில் மதத்தினரிடையே மக்களிடையே ஒற்றுமையுணர்வு புரிதல் அதிகமாக இருக்கின்றன. அதன் காரணமாக அவர்களுக்குள் கலவரங்கள் மிக மிகக் குறைவு. ஒரு மதத்தினருக்குச் சொந்தமான இடங்களில் மற்றொரு மதத்தினர் வாழ்வதும், வியாபாரம் செய்வதும், வழிபடுவதும் வாடிக்கையாக இருக்கின்றன. இவையெல்லாம் நாம் நன்முறையில் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளங்கள்.
அந்தந்த ஊர்களில், அய்ந்தாறு கிலோ மீட்டர் சுற்றளவு என விரிந்து அய்ம்பது கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் என எடுத்துக் கொண்டால் மக்களின் நகர்வு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கென மாறும் போது அவை ஒரு நாளாகவும் இருக்கலாம், அதற்கு குறைவாகவும் இருக்கலாம்.... அவை மன மகிழ்விற்கு இடமளிக்கின்றன. கூடிப் பேசுதலும், உறவுகளை சந்திப்பதிலும் என உள்ளத்தில் உற்சாகம் பிறக்கின்றன.
இன்னும் சற்றே ஐம்பது கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் என ஒரு நாளைத் தாண்டி பயணம் செய்யும்போது அந்தச் சுற்றுலா மகிழ்வின் எல்லைக்குச் செல்கின்றன. நான்கு மணி நேர பேருந்துப் பயணத்தில் சேர்ந்தடைய வேண்டிய இடத்தை மக்களில் சிலர் கூட்டமாக, குழுவாக கால் நடைப் பயணமாக மேற்கொள்கின்றனர். ஆங்காங்கே முகாமிடுகின்றனர், இரவில் தங்குகின்றனர், விடியற்காலை கால்நடைப் பயணத்தைத் தொடர்கின்றனர்.
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், எடப்பாடி பொதுமக்கள் பழனிக்கு பாதயாத்திரையாக செல்வதும், அதே பழனிக்கு நாற்பது கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஊர்களிலிருந்தும் குறைந்தது மூன்று நாட்கள் பயணிப்பதும் இன்றும் உள்ளன. அதுபோன்றே அன்னை வேளாங்கண்ணி, சென்னை திருத்துறைப்பூண்டி பூண்டி மாதா, நாகூர் தர்கா, திருச்செந்தூர் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றன.
பயணங்கள் காசி, கயா, கைலாயம், மெக்கா, மெதீனா, ஜெருசலம் என பல நாட்கள் நீடிக்கின்றன. ஆன்மீகப் பயணங்கள் சுற்றுலாக்கள் மட்டுமின்றி ஆங்காங்கே இயற்கையின் அழகை அனுபவிக்கச் செல்லும் சுற்றுலாக்களும் நிரம்பவே மகிழ்ச்சியைத் தருகின்றன. ஒருவர் தன் வாழ்நாளை நீடிக்கச் செய்ய விரும்பினால், ஆண்டிற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறையென மூன்று நாட்களாவது இல்லத்தை சொந்த ஊரை விட்டு, சுற்றுலா செல்வதைக் கடைபிடிக்க வேண்டும். சுற்றுலா செல்வதன் மூலம் நம் மகிழ்ச்சி கூடும், மகிழ்ச்சி கூடுவதன் மூலம் நம் உடல்நலம், ஆரோக்கியம் மேம்படும்.
சுற்றுலாவின் மூலம் வரும் வருவாயை மட்டுமே நம்பி பல நாடுகள் உள்ளன. அவைகள் சுற்றுலா வரும் பயணிகளை நம்பிக் காத்திருக்கின்றன. இன்று சுற்றுலா என்பது பல்வகைப் பொருள்களில் ஆன்மீகம், விஞ்ஞானம், வியாபாரம், ஆரோக்கியம், மலைஏற்றம், விளையாட்டு, இயற்கை மலைகள், வனங்கள், நதிகள் என பரந்து விரிந்து பயணிக்கின்றன. எந்த வகை சுற்றுலாக்கள் என்றாலும் அவை மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. மகிழ்ச்சி பெறுவதன் மூலம் நம் உடல்நலம் மேம்படும். நம் உடல் நலம் மேம்படுவதன் மூலம் நாம் வாழும் காலம் கூடும். எனவே நாம் அடிக்கடி சுற்றுலா செல்வோம்.