கேப் டவுன் பயணம்: சொர்க்கத்தை பூமியில் காணத் தயாரா?

தென்னாப்பிரிக்காவின் அழகிய நகரமான கேப் டவுனில் நீங்கள் தவறவிடக்கூடாத 5 முக்கிய இடங்கள்.
கேப் டவுன்
கேப் டவுன்AI image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தென்னாப்பிரிக்காவின் அழகிய நகரமான கேப் டவுனில் இயற்கை எழில் கடற்கரைகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பல இடங்கள் நிறைந்துள்ளன. அங்கு முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்கள் சில:

தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் அமைந்துள்ள டேபிள் மலை என்பது இயற்கையின் புதிய 7 அதிசயங்களில் ஒன்றாகும். இது ஒரு தட்டையான மேசை போன்ற வடிவம் கொண்ட மலையாகும். இதன் உச்சியை அடைய மலையேற்றப் பாதைகள் மற்றும் கேபிள் கார்கள் உள்ளன.

உலகப் புகழ் பெற்ற இயற்கை அதிசயமான இதன் உச்சிப் பகுதி மேஜையைப்போல தட்டையாக இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. மலையின் மேல் மினுமினுப்பான வெள்ளை மேகங்கள் படரும் பொழுது, அது மேஜை மீது விரிப்பை விரித்தது போல மிக அழகாக காட்சியளிக்கும்.

1. இயற்கை அதிசயமான கேப் டவுன் டேபிள் மலை (Table Mountain):

சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு தட்டையான பாறை மேடையைப் போல காட்சியளிக்கும் இந்த மலை நகரத்தின் பிரதான அடையாளமாகும். இதன் மிக உயரமான பகுதி மேக்லியர்ஸ் பெக்கன் (Maclear's Beacon) என்று அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,086 மீட்டர்கள் (3,500 அடி) உயரம் கொண்டது. அடிவாரத்தில் இருந்து மலையின் உச்சிக்குச் செல்ல சுழலும் கேபிள் கார்கள் உள்ளன.

இது வெறும் ஐந்து நிமிடங்களில் உச்சியை அடைந்துவிடும். இது டேபிள் மவுண்டன் தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும். இங்கு உலகின் வேறு எங்கும் காணமுடியாத அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக இந்த மலையில் 2,285 தாவர இனங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. அவற்றில் சுமார் 80% ஃபைன்போஸ் (ஆப்பிரிக்கன் மொழியில் 'அழகான புதர்' என்று அர்த்தம்) உள்ளது.

2. மலையேற்றம்:

சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் பல மலையேற்றப் பாதைகள் உள்ளன. மிகவும் எளிமையான பாதைகள் முதல் கடுமையான பாதைகள் வரை பல வழிகள் உள்ளன. பாறைகள் நிறைந்த பாதைகளில் மேலே செல்லும் மலையேற்றத்திற்கு உடற்தகுதி மற்றும் மலையேற்ற உபகரணங்கள் அவசியம் தேவை.

இதில் பிளாட்டெக்ளிஃப் (Platteklip Gorge) மிகவும் எளிதான மற்றும் பிரபலமான பாதையாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மலையேற்ற வீரர்களின் சொர்க்கமாக இது விளங்குகிறது.

3. பார்வை முனை:

மலையின் உச்சியில் இருந்து கேப் டவுன் நகரம், அட்லாண்டிக் பெருங்கடல், கடற்கரைகள் மற்றும் தொலைவில் உள்ள ராபன் தீவு (Robben Island) ஆகியவற்றின் 360 டிகிரி அழகிய காட்சிகளைப் பார்க்கலாம்.

4. சூரிய அஸ்தமனம்:

மலையின் உச்சியில் சூரியன் மறையும் காட்சியைப் பார்ப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான அனுபவமாகும். வானிலை விரைவாக மாறக்கூடியது. மோசமான வானிலை அல்லது அதிகக் காற்று வீசினால் கேபிள் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.

மலை உச்சியில் வானிலை திடீரென மாறும் என்பதால் பயணத்திற்கு முன்பு அதிகாரப்பூர்வ செயலி மூலம் வானிலை நிலவரத்தை அறிந்து கொள்வது நல்லது. சுற்றுலாப் பயணிகள் கேபிள் கார் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்வது நல்லது.

கேப் டவுன்
கேப் டவுன்AI image

5. போ-காப் (Bo-Kaap):

வண்ணமயமான வீடுகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தெருக்களுக்கு பெயர் பெற்றது இப்பகுதி. முன்னர் மலாய் காலா என்று அழைக்கப்பட்ட போ காப், மலேசியா அடிமைகள் வாழ்ந்த நகரமாகும். போ காப்பில் தென்னாப்பிரிக்காவின் முதல் மசூதி, கேப் மலாய் உணவு மற்றும் இஸிகோ போ காப் அருங்காட்சியகம் (Iziko Bo-Kaap Museum) ஆகியவற்றைக் காணலாம்.

6. போல்டர்ஸ் கடற்கரை (Boulders Beach):

சிமன்ஸ் டவுன் (Simon's Town) அருகே அமைந்துள்ள இந்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கா பென்குவின்கள் சுதந்திரமாக உலாவுவதைக் கண்குளிரக் காணலாம்.

7. கேப் ஆஃப் குட் ஹோப் (Cape of Good Hope):

நகர மையத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த இடம் அழகிய பாறைகள் மற்றும் கடலோர இயற்கை காட்சிகளுடன் கூடிய பார்வையிட வேண்டிய முக்கிய இடமாகும். ஆப்பிரிக்க கண்டத்தின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ள இந்த இயற்கைக் காட்சிப் பகுதி மிகவும் பிரபலமானது. இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க கலங்கரை விளக்கத்தையும், அட்லாண்டிக் மற்றும் இந்திய பெருங்கடல்கள் சந்திக்கும் பிரம்மாண்ட காட்சியையும் கண்டு ரசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ ஒரு வழி: உங்கள் சுற்றுலா திட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள்!
கேப் டவுன்

8. ராபன் தீவு (Robben Island):

இந்தத் தீவு 400 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை நாடு கடத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டது. மேலும் நெல்சன் மண்டேலா பல ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இப்பகுதிக்கு படகு மூலம் செல்லலாம். நெல்சன் மண்டேலா விடுதலையானதிலிருந்து ராபன் தீவு ஒரு உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த சோகமான வரலாற்றை நினைவூட்டுவதாகவும், சுதந்திரத்தின் சின்னமாகும் விளங்குகிறது. நெல்சன் மண்டேலாவின் பழைய சிறை அறையை நேரில் பார்வையிட தினசரி சுற்றுப்பயணங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

9. எங்கு உள்ளது? எப்படி செல்வது?

அருகிலுள்ள விமான நிலையம் கேப் டவுன் சர்வதேச விமான நிலையம். இது நகர மையத்திலிருந்து சுமார் 18- 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் எத்தியோப்பியா, துபாய் அல்லது கத்தார் வழியாக இந்த விமான நிலையத்திற்கு வந்து சேரும். பயண நேரம் தோராயமாக 12 முதல் 16 மணி நேரம் வரை ஆகும்.

இதையும் படியுங்கள்:
புனே சுற்றுலா: வரலாறும் இயற்கையும் இணையும் ஒரு சொர்க்கப் பயணம்!
கேப் டவுன்

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் கடற்கரையிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் டேபிள் விரிகுடாவில் ராபன் தீவு அமைந்துள்ளது. கேப்டன் டவுன் துறைமுகத்திலிருந்து படகு மூலம் இந்த தீவிற்கு செல்லலாம்.

இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் தென்னாப்பிரிக்கப் பயணத்தை ஒரு மறக்க முடியாத சாகசமாக மாற்றி, உலகின் மிகச்சிறந்த இயற்கை மற்றும் வரலாற்றுத் தளங்களை நேர்த்தியாகக் கண்டுகளிக்கும் அனுபவத்தைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com