தேவதை உலக கதைகளில் வருவது போன்ற வீடுகள்! உலகில் இப்படி ஒரு அதிசய கிராமங்களா?

ஜப்பான் முதல் அயர்லாந்து வரை பழங்கால கூரை வீடுகளுடன் மிளிரும் உலகின் மிக அழகிய கிராமங்களின் தொகுப்பு.
கூரை வீடுகள்
கூரை வீடுகள்Gemini image
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

நீப்ளம் – Nieblum, ஜெர்மனி

சரித்திர கால அமைப்பின் கூறை வடிவம் உள்ள வீடாகச் ஜெர்மனி ஃபோர் தீவில் உள்ளது.‌ இங்கு சுமார் 500 பேர்கள் வாழ்கிறார்கள். இந்த தீவில் மிகப்பெரிய தேவாலயம் உள்ளது.

மில்டன் அப்பாஸ் - milton abbas, இங்கிலாந்து

இந்த கிராமத்தில் 46 காட்டேஜுகள் வைக்கோல் கூறை வேயப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் ஏர்ல் டார்செஸ்டர் நகர்ப்புற அமைப்பிலிருந்து அமைதிக்காக இந்த கிராமத்தில் இப்படிப்பட்ட அமைப்பை ஏற்படுத்தினார்.‌ ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் பெயிண்ட் அடிக்கப்பட்டு ஹார்ஸ்செஸ்ட்நட் மரம் மற்றும் புல்வெளியும் இருக்கும். இங்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை 18ம் நூற்றாண்டு தெரு விழா நடத்தப்படும்

அடரே - Adare, அயர்லாந்து

இது 13ம் நூற்றாண்டில் அயர்லாந்தின் மெய்க்யூ ஆறு நோக்கிய நிலையில் அமைக்கப்பட்டது‌. இந்த கிராமத்தில் அதிக அளவில் கூறை வேயப்பட்ட தோற்றத்தோடு இடங்களைக் காணலாம்.

ப்ராட் காம்ப்டென் - Brad Compton, இங்கிலாந்து

இங்கு கூறை வேயப்பட்ட தோற்ற அமைப்பிலும் தேன் நிறத்தில் கற்களையும் காணலாம்.‌ இது க்ளூசெஸ்டர் ஷயர் என்று கூறப்படுகிறது.

ஒகிமாசி - Okimachi, ஜப்பான்

ஜப்பானில் ஷோகாவா ஆறு அருகில் காஸோ ஸ்டைல் வயல் வீடுகள் கூறை வேயப்பட்ட அமைப்பில் இரு கை கூப்பி வணங்கும் அமைப்பில் காணப்படும். இங்கு குளிர்காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும்‌. இங்கு பட்டுப்புழு உற்பத்தி அதிக அளவில் நடைபேறுகிறது. யுனெஸ்கோவால் அங்கீகாரம் பெற்றது.

சொண்டெர்கோ பானோ - sonderho Fano, டென்மார்க்

இது மிக அழகிய கிராமமாகும்.‌ இங்கு கூறை போன்ற அமைப்பு வீடுகளும் மற்றும் அழகிய தோட்டங்களும் நிறைந்தது.

ஜாம்பேசி ஸ்ட்ரிப் - Zambezi Strip, நமீபியா

இங்குள்ள கிராமங்களில் வீடுகள் மேல் கூம்பு வடிவில் கூறை வேயப்பட்ட அமைப்பில் காணப்படும். ‌இது நமீபியா முழுக்க காணப்படும் கட்டடக்கலையாகும்.

கூரை வீடுகள்
கூரை வீடுகள்Gemini image

சண்டான - Santana, போர்ச்சுகல்

இங்கு கூறை வேயப்பட்ட நிலையில் காட்சி தரும் வீடுகள் மரத்தால் கட்டப்பட்டும், மேலும் இதன் கூரைகள் அங்குள்ள கோதுமை மற்றும் கம்புகளால் அமைக்கப்பட்டிருக்கும்.‌ வெளிப்புறம் வெள்ளை, நீலம், சிவப்பு வண்ணங்களால் பெயிண்ட் செய்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
வீக்கெண்ட் ட்ரிப் போகணுமா? அமைதியைத் தேடி மயிலாடுதுறை கூழையார் கடற்கரைக்கு வாங்க!
கூரை வீடுகள்

மச்சுகா - Machuca, சிலி

சிலியில் உள்ள சிறிய கிராமமான மச்சுகாவில் கூறை வேயப்பட்ட அமைப்பில் வீடுகளைக் காணலாம். இங்கு வாய்க்குள் என்ற விலங்கினங்களை மக்கள் பராமரிக்கிறார்கள்.

கியாரனன் ப்ளாக் வீடுகள் - Ciaran Bligh, ஸ்காட்லாந்து

இது பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தியதாகும். இது இரண்டடுக்கு கற்கள் கொண்டு கட்டப்பட்டதாகும். இங்கு டூரிஸ்டுகள் தங்குகிறார்கள்.

கெர்ஹிநெட் - Kerhinet, ஃப்ரான்ஸ்

மிக அழகாக கூறை வேயப்பட்ட வீடுகளைக் கொண்டது. இது ஒரு திறந்த வெளி காட்சியகமாகும். இங்கு 18 கல் காட்டேஜுகள் உள்ளன. இங்கு தேன், சிடார் உப்பு போன்றவற்றைக் காணலாம்.

நகெனெப்காங் - Naganeu peseong, தென் கொரியா

இது சரித்திரக் கால் நன்கு பாதுகாகாகப்பட்ட இடமாக விளங்குகிறது. இது ஜோசென் வம்சாவழியினர் காலத்தியது. இங்கு 231 வீடுகள் உள்ளன. பழைய காலத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன.

ஜெட் தூண் - Djed Pillars, நெதர்லாந்து

இதைக் காணும்போது தேவதை உலகக்கதையில் வரும் இடம் போல் காட்சி தருகிறது. சிறிய தீவுகள் கையால் வெட்டப்பட்ட கனால்கள் நிறைந்த இது 19ம் நூற்றாண்டு காலத்தியதாகும். இங்குள்ள தீவுகளுக்குப் படகில் சென்று பயணித்து இயற்கை அழகை ரசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சென்னை டு ஸ்ரீலங்கா: நான்காம் பகுதி!
கூரை வீடுகள்

தொன்தா - Thon Tha Village, வியட்நாம்

இங்கு அதிகமான நெல் வயல்கள் உள்ளதால் இங்குள்ள வீடுகள் முட்டுக்கால் கொடுக்கப்பட்டும் கூறை வேய்ந்த நிலையிலும் கட்டப்பட்டிருக்கும். இங்கு வாழும் மக்கள் டூரிஸ்டுகளை வரவேற்று தங்கள் கலாசாரத்தைப் பரப்புவதற்கு இது ஒரு முக்கியமாக கருதுகிறார்கள்.

மேலே கூறப்பட்டுள்ள கூறை போன்ற அமைப்புகள் உள்ள உலகின் அழகிய கிராமங்கள் டூரிஸ்டுகளை வெகுவாகக் கவர்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் இன்றும் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வரும் அழகிய பாரம்பரிய கூரை வீடுகள் மற்றும் அந்தந்த ஊர்களின் தனித்துவமான கலாச்சார பின்னணியை வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com