

நானும் இதுவரைக்கும் ஒரு தடவை கூட ஃபிளைட்ல போனதே இல்லைங்க! ஆனா, சீக்கிரமே என்னோட முதல் ஃபிளைட் டிராவலை (விமானப் பயணம்) எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுவேன். அதுக்காக அப்பப்போ அதபத்தி நெட்ல தேடித் தேடி சர்ச் பண்ணிப்பேன். அப்படிப் படிச்சப்போதான் தெரிஞ்சது, ஃபிளைட்ல போறதுக்கு முன்னாடியே நம்ம ஆர்வம் ஸ்டார்ட் ஆயிடும்னு!
எக்ஸ்பீரியன்ஸ் இருக்குறவங்க என்ன சொல்றாங்கன்னா, பெரிய லக்கேஜ் தூக்கிட்டுப் போறதைவிட 'ஸ்மார்ட்டா' பேக் பண்றதுதான் முக்கியமாம். ஆன்லைன் செக்-இன் (check in), தேவையான மருந்துகள், சார்ஜர், ஐடி கார்டுகளை ஹேண்ட் பேக்ல (Hand bag) வச்சுக்கிறது பயணத்தை ஈஸியாக்குமாம்.
இன்டர்நேஷனல் டிராவல்னா பாஸ்போர்ட், விசா, எமிக்ரேஷன் பேப்பர்ஸ் (immigration documents) எல்லாத்தையும் டபுள் செக் பண்ணனும். அதுவே, உள்நாட்டு டிராவல்னா ‘செக்கிங்’ எல்லாம் டக்குனு முடிஞ்சிடும்.
இப்படி இந்த விஷயங்களா முன்னாடியே பண்ணி வச்சிட்டு தேவையில்லாம டென்ஷன் ஆகாம, ஏர்போர்ட்க்கு ஏத்த மாறி மைண்ட ரெடி பண்ணிக்கிறதுதான் ‘டென்ஷன் இல்லாத ஜாலியான பயணத்தோட மெயின் சீக்ரெட்டாம்!’.
யாரும் சொல்லாத அந்த ஒரு சிலிர்ப்பு!:
ஃபிளைட்ல முதல் தடவையா போறவங்களுக்கு அது மேல ஏறுவதையோ இல்ல இறங்குறதையோவிட, ரொம்ப மெகா ஹிட்டான மொமென்ட் எதுனா அது ஃபிளைட் டேக்-ஆஃப் (Take-off) ஆகுற அந்த ஒரு நிமிஷம்தானாம்!
என்ஜின் செம ஸ்பீடுல சவுண்ட் கொடுத்து , ரன்வேயில் (Run way) நம்ம பிளைட் ஜெட் வேகத்துல பறக்கும்போது நம்ம பாடி அப்படியே சீட்டோட ஒட்டி அமுங்குற மாதிரி ஒரு ஃபீல் கிடைக்குமாம். அடுத்த சில நொடிகளில், வெளிய இருக்கிற பில்டிங்ஸ், ரோடு எல்லாமே நமக்கு கீழே குட்டிக்குட்டியா சுருங்குறத பார்க்கும்போது வர்ற அந்த ஆச்சரியமே தனியாம்!
நாம வானத்துல 35,000 அடி உயரத்துல பறந்தாலும், ஃபிளைட்டுக்குள்ள இருக்குற ஏர் பிரஷர் 8,000 அடிக்கு தாண்டாம இருக்குற மாதிரி அரசாங்க (FAA) விதிமுறைகளின்படி மெயின்டைன் பண்ணுவாங்க. இதனாலதான் அதுல போறவங்களுக்கு மூச்சுத்திணறல் இல்லாம சொகுசா டிராவல் பண்ண முடியுது.
உண்மையான 'WOW!' எக்ஸ்பீரியன்ஸ் வேணுமா?
முதல் முறையா ஃபிளைட்ல போகும்போது நிஜமாவே ஒரு 'வாவ்!' ஃபீலிங் வேணும்னா, ‘ஏர்பஸ் A380 (Airbus A380)’ ஃபிளைட்ல போறதுதான் பலரோட லைஃப்-டைம் கனவாம். எமிரேட்ஸ் (Emirates) மாதிரியான டாப் ஏர்லைன்ஸ் வச்சிருக்கற அந்தப் ஃபிளைட், உலகத்துலயே ரொம்ப பெரிய ‘டபுள் டெக்கர் (ரெண்டு மாடி இருக்குற) ஃபிளைட்‘ இது. பாக்குறதுக்கு ரொம்ப பிரம்மாண்டமா இருந்தாலும், இதோட பாசஞ்சர்(Passenger) கேபின் செம சைலன்ட்டா, அமைதியா இருக்குமாம்.
இன்னும் சூப்பரான ஒரு செம ஃபீலிங் வேணும்னா, ஃபிளைட் கிளம்புறப்போ, இல்லனா சன்செட் (சூரிய அஸ்தமனம்) டைம்ல, அல்லது நைட் டைம்ல ஃபிளைட் லேண்ட் ஆகுறப்போ ஜன்னல் ஓரத்துல (Window Seat) சீட் கிடைக்கனும்னு ட்ரை பண்ணுங்க. ஏன்னா, 35,000 அடி உயரத்துல இருந்து கீழே பாக்குறப்போ பெரிய பெரிய நகரங்கள் எல்லாமே குட்டிக்குட்டி விளக்குகள் மாறி மின்னுறதை பாக்குறதுதான் ஒருத்தரோட முதல் பயணத்துல மறக்கமுடியாத ஒரு மொமெண்ட்டா இருக்குமாம்!
ஃபிளைட் அவ்ளோ குலுங்குமா?:
நாம பொதுவா சினிமாவுல பாக்குறதை வச்சு, ஃபிளைட்னாலே பயங்கரமா குலுங்கும், ஏதோ ‘ரோலர் கோஸ்டர்ல’ போறமாதிரி இருக்கும்னு நினைச்சு பயப்படுவோம்.
ஆனா அதுதான் இல்லை! நிஜத்துல ஒரு ஜெட் பிளைட் அதோட பறக்குற உயரத்தை (Cruising Altitude) ரீச் பண்ண அப்புறம், அது எவ்வளவு ஸ்மூத்தா, சத்தமே இல்லாம, ஏதோ ஒரே இடத்துலேயே நிக்குற மாதிரி பறக்குதுன்னு ஃபர்ஸ்ட் டைம் போறவங்க பீல் பண்ணி ஆச்சரியப்பட்டுப் போயிடுவாங்களாம்.
ஃபிளைட்க்குள்ள சாப்பாடு டேஸ்ட்டா இருக்குமா?:
ஃபிளைட்ல போற பல பேருக்கு இருக்குற பெரிய டவுட், “ஏன் பிளைட் சாப்பாடு சப்புனு இருக்கு?"ங்கிறதுதான். அதுக்கு சமையல்காரங்க காரணம் இல்ல, சயின்ஸ்தான் காரணம்!
ஃபிளைட்க்குள்ள இருக்குற ஏர் பிரஷர், ரொம்ப கம்மியான ஈரப்பதம் (Humidity), அப்புறம் அந்த என்ஜின் சத்தம் இதெல்லாம் சேர்ந்து நம்ம நாக்கோட டேஸ்ட் பட்ஸ் (Taste Buds) மற்றும் மூளையை கொஞ்சம் லாக் பண்ணிடும். இதனால நமக்கு இனிப்பு, உப்புச் சுவை எல்லாம் 15% லிருந்து 30% வரை கம்மியாதான் தெரியுமாம்.
ஆனா, இதுல ஒரு மேஜிக் என்னன்னா, கார்னல் யூனிவர்சிட்டியை (Cornell University) சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் ரிசர்ச்படி. தக்காளி ஜூஸ் (Tomato Juice) மட்டும் பிளைட்ல குடிச்சா செம டேஸ்ட்டா இருக்குமாம்; ஏன்னா ஃபிளைட்க்குள்ள வர்ற அந்த பயங்கரமான இன்ஜின் சத்தம் நம்ம நாக்குல இருக்குற 'உமாமி' (Umami) சுவையை இன்னும் அதிகமா ஏத்திவிடுமாம்!.
ஃபிளைட் டிராவல்ங்கிறது வெறும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போற விஷயம் மட்டும் இல்ல. அது சயின்ஸ், இன்ஜினியரிங், மனிதனோட ஆசை எல்லாமே ஒண்ணா சேர்ந்த ஒரு லைஃப்-டைம் எக்ஸ்பீரியன்ஸ்!