ரயில் டிக்கெட் புக் செய்யும்போது லோயர் பெர்த் கிடைக்கவில்லையா? ஓடும் ரயிலில் வாங்குவது எப்படி?

கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான IRCTC சிறப்பு ஒதுக்கீட்டு விதிகள் இதோ!
லோயர் பெர்த் - lower berth quota eligibility,
லோயர் பெர்த் - lower berth quota eligibility,
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

ரயில்களில் லோயர் பெர்த் எனப்படும் கீழ் இருக்கை என்பது பயணம் செய்யும்பொழுது ஏறி இறங்க சிரமப்படும் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வேயின் ஒருங்கிணைந்த லோயர் பெர்த் கோட்டாவின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.

இது மிக வசதியான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி (IRCTC) விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் லோயர் பெர்த்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கான ஒருங்கிணைந்த சிறப்பு ஒதுக்கீடு (Combined Quota) மற்றும் விதிகள் உள்ளன.

யாரெல்லாம் லோயர் பெர்த் ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள் தெரியுமா?

மூத்த குடிமக்களான 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 58 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள்.

45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் பயணிகள், மூத்த குடிமகன் சலுகை இல்லாவிட்டாலும் இவர்களுக்கு லோயர் பெர்த் முன்னுரிமை உண்டு.

தனியாக அல்லது தகுதியானவர்களுடன் பயணிக்கும் கர்ப்பிணிகள்.

உடல் ரீதியாக சவால்களை எதிர்கொள்ளும் (மாற்றுத்திறனாளிகள்) பயணிகள். இவர்களுக்கென தனியாகவும் லோயர் பெர்த் வசதி உள்ளது.

ஒவ்வொரு பெட்டியிலும் (Coach) எத்தனை லோயர் பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன?

ரயில்களில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த லோயர் பெர்த்களின் எண்ணிக்கை மாறுபடும். ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் இந்தத் தகுதியுடைய பயணிகளுக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான லோயர் பெர்த்கள், பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருக்கும்.

ஸ்லீப்பர் கிளாஸ் வகைகளில் 6 முதல் 7 லோயர் பெர்த்களும், ஏசி 3 டயர் (3AC) கோச்சுகளில் 4 முதல் 5 லோயர் பெர்த்களும், ஏசி 2 டயர் (2AC) கோச்சுகளில் 3 முதல் 4 லோயர் பெர்த்துக்களும் ஒதுக்கப்பட்டிருக்கும்.

லோயர் பெர்த் - lower berth quota eligibility,
லோயர் பெர்த் - lower berth quota eligibility,

முக்கியமான ஒதுக்கீடு விதிகள் மற்றும் மாற்றங்கள்:

தானியங்கி ஒதுக்கீடு (Automatic Allotment):

மூத்த குடிமக்கள் அல்லது 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது, 'லோயர் பெர்த்' என்று பிரத்தியேகமாக தேர்வு செய்யாவிட்டாலும், அவர்களின் வயதை கணக்கிட்டு ரயில்வேயின் கணினி முறை (PRS) தானாகவே லோயர் பெர்த்களை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கிவிடும் (இருக்கைகள் காலியாக இருக்கும் பட்சத்தில்).

கர்ப்பிணிப் பெண்களுக்கான புதிய விதிமுறை:

முன்பெல்லாம் கர்ப்பிணிப் பெண்கள் லோயர் பெர்த் பெற வேண்டுமெனில், ரயில் நிலைய முன்பதிவு மையங்களுக்கு நேரடியாகச் சென்று மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து மட்டுமே புக் செய்ய முடிந்தது.

ஆனால் ரயில்வே வாரியத்தின் தற்போதைய புதிய உத்தரவின்படி, IRCTC இணையதளம் மற்றும் ஆப் மூலமாகவே ஆன்லைனிலும் கர்ப்பிணிகள் லோயர் பெர்த் கோட்டாவை தேர்வு செய்து புக் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் பயணத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை (Medical Certificate) கையில் வைத்திருப்பது அவசியமாகும்.

ஓடும் ரயிலில் மாற்றித் தரும் வசதி (TTEக்கான அதிகாரம்):

முன்பதிவு செய்யும்போது லோயர் பெர்த் கிடைக்காமல் மிடில் அல்லது அப்பர் பெர்த் கிடைத்த தகுதியான பயணிகள் (வயதானவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள்) ரயில் புறப்பட்ட பிறகு ஏதேனும் லோயர் பெர்த் காலியாக இருந்தால், ரயிலில் இருக்கும் டிக்கெட் பரிசோதகரிடம் கோரிக்கை விடுத்து அந்த லோயர் பெர்த்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அதிகாரப்பூர்வ முன்னுரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? உங்களுக்கான 10 அதிமுக்கிய உரிமைகள் இதோ!
லோயர் பெர்த் - lower berth quota eligibility,

லோயர் பெர்த் ஒதுக்கீடு என்பது அந்த ரயிலில் இருக்கைகள் காலியாக இருக்கும் நிலையைப் பொறுத்தது (subject to availability). கோட்டாவில் உள்ள சீட்டுகள் அனைத்தும் முன்பே நிரம்பி விட்டால் பொதுப் பட்டியலிலிருந்தே இருக்கைகள் வழங்கப்படும்.

லோயர் பெர்த் கிடைக்க சில ரகசிய டிப்ஸ்கள்:

IRCTC அல்காரிதம் படி, ஒரு டிக்கெட்டில் (Single PNR) ஒன்று அல்லது அதிகப்பட்சம் இரண்டு மூத்த குடிமக்கள் மட்டும் பயணிக்கும்போதுதான் லோயர் பெர்த் தானாகவே எளிதாக ஒதுங்கும். இளைஞர்களுடன் சேர்த்து புக் செய்யும்போது மிடில் அல்லது அப்பர் பர்த் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

ஆன்லைனில் புக் செய்யும்பொழுது "Book only if at least one lower berth is allotted"என்ற ஆப்ஷனை தேர்வு செய்வது நல்லது.

ரயிலில் ஏறிய பிறகு ஏதேனும் லோயர் பெர்த் காலியாக இருந்தால், அதை மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றித்தரும் அதிகாரம் டிக்கெட் பரிசோதகருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் அப்பர் பெர்த் பெற்று சிரமப்பட்டால் உடனடியாக டிடியை அணுகலாம்.

இதையும் படியுங்கள்:
ரயில் பயணிகளே உஷார்! அக்டோபர் 31 வரை அதிரடி சோதனை... ஒரிஜினல் ID இல்லனா சிக்கல் தான்..!
லோயர் பெர்த் - lower berth quota eligibility,
logo
Kalki Online
kalkionline.com