
பெரும்பாலும் நவீன நகர மயமாக்கலுக்கு மத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளை இணைக்கும் ஒரு அழகான பயண அனுபவத்தை இந்த டிராம்கள் வழங்குகின்றன.
இந்தியாவில் டிராம் வண்டி பயன்பாட்டில் இருக்கும் ஒரே நகரமாக கொல்கத்தா திகழ்கிறது. இது ஆசியாவிலேயே மிகவும் பழமையான எலக்டிரிக் டிராம் அமைப்பாகும். இது 1873 -ல் தொடங்கிய இந்த சேவை தற்போது 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
ஹாங்காங்கில் உலகின் மிகப்பெரிய டபுள் டெக்கர் டிராம் வண்டிகளை காணமுடியும். ஹாங்காங்கில் தனித்துவமான அனுபவத்தை பெறவேண்டும் எனில் இந்த டிராமில் கட்டாயம் பயணம் செய்யலாம்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சுமார் 250 கி.மீ வரை கவர் செய்திடும் உலகின் மிகப்பெரிய டிராம் நெட் ஒர்க் உள்ளது. அதிலும் City Circle tram -ல் பயணிக்க எவ்வித கட்டணமும் கிடையாது.
போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் வண்ணமயமான மற்றும் அதிக சத்தம் கொண்ட டிராம் வண்டிகளைக் காணமுடியும். பட்ஜெட்டில் லிஸ்பன் நகரை சுற்றிப் பார்க்க டிராம் சிறந்த வழியாகும்.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இங்கு உள்ளூர் வாசிகளின் முக்கிய போக்குவரத்தாக டிராம் திகழ்கிறது. இங்கு உலகின் மிக நீளமான டிராம் சேவைகளும் உள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் டிராம் வண்டிகள் முதன்மையான போக்குவரத்து ஆகும். சூரிச்சை குறைவான பணத்தில் சுற்றி வரசிறந்த வழிகளில் டிராம் பயணமும் ஒன்றாகும்.
செக் குடியரசு நாட்டிற்கு சுற்றுலா செல்லில் பிராக் நகரில் இந்த விண்டேஜ் டிராம் அனுபவத்தை மிஸ் செய்யாதீர்கள். இந்த நகரில் மொத்தம் 45 டிராம் வண்டிகள் உள்ளது. மெட்ரோ ஸ்டைல் டிராம்களை கட்டாயம் பயணம் செய்ய மிஸ் பண்ணாதீர்கள்.
அர்ஜென்டினாவின் புவெனஸ் ஹையர் நகரில் 1960 ன் காலகட்டத்தில் டிராம் சேவை நிறுத்தப்பட்டது. பிறகு படிப்படியாக டிராம் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் வரலாற்றை பாதுகாத்து வருகின்றனர்.
ஜப்பானின் ஹிரோஷிமா மிகப்பெரிய டிராம் நெட்வொர்க் 1945 குண்டுவெடிப்பில் இருந்து மீண்டு வந்தவரலாற்று சிறப்புமிக்க பெரிய அமைப்பு ஆகும்.
டோக்கியோ சகுரா என்று அழைக்கப்படும். இது டோக்கியோவில் எஞ்சியிருக்கும் ஒரே பொது டிராம் பின் பாதையாகும்.
ஜப்பானில் டிராம்கள் ஹிரோஷிமா, நாகசாகி, டோக்கியோ சப்போரா மற்றும் கியோட்டோ போன்ற முக்கிய நகரங்களில் கலாச்சார மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய பொது போக்குவரத்து முறையாக டிராம் இன்றும் இயங்கி வருகின்றன.