

இந்திய ரயில்வேயில டிக்கெட் கேன்சல் பண்ணா ரயில்வே ரீஃபண்ட் பணம் எப்படி வரும்? இதைப் பத்திதான் இன்னைக்கு நாம ரொம்ப சிம்பிளா, கேஷுவலா பார்க்கப் போறோம். ஆரம்பத்துல எனக்கும் இதெல்லாம் சுத்தமா தெரியாது. ஏன்னா, நான் ட்ரெயின் அதிகமா யூஸ் பண்ண மாட்டேன். பட் இந்த ஆர்டிகிள் படிக்கிற உங்களுக்காக இது சம்பந்தமான IRCTC Cancellation Rules, இந்திய ரயில்வேயோடRefund Rules வெப்சைட்டுகளைப் படிச்சுப் பார்த்தேன்.
டிக்கெட் கேன்சல் பண்ணா ஏதோ ஒரு குறிப்பிட்ட தொகை போயிடும்னு நாம நினைக்கிறோம், ஆனா விஷயம் அப்படி இல்ல. ரீஃபண்ட் ரூல்ஸ் எல்லாமே டைம், நாம புக் பண்ணின கிளாஸை வச்சுதான் மாறுது.
ஸ்லீப்பர், ஏசி 3 டயர், ஏசி 2 டயர், 1st ஏசி, எக்ஸிகியூட்டிவ் கிளாஸ்னு (Executive class) ஒவ்வொரு பெட்டிக்கும் கேன்சலேஷன் சார்ஜஸ் (Cancellation charges) தனித்தனியா இருக்கும்னு IRCTC Cancellation Rules (irctc.co.in) ஆன்லைன் பக்கத்துல தெளிவா சொல்லிருக்காங்க.
வண்டி கிளம்புறதுக்கு 48 மணி நேரத்துக்கு முன்னாடி கன்ஃபார்ம் டிக்கெட்டை கேன்சல் பண்ணா ஒரு ‘குறிப்பிட்ட காச’ பிடிப்பாங்க.
உதாரணத்துக்கு, ஸ்லீப்பரைவிட, 1st ஏசி மற்றும் எக்ஸிகியூட்டிவ் கிளாஸுக்கு அதிகமா பிடிப்பாங்க, ஏன்னா இதோட ‘ஆரம்ப விலை’, இல்ல டிக்கெட் விலையே ரொம்ப அதிகம். அதுவே ட்ரெயின் கிளம்ப 48 மணி நேரத்துல இருந்து 12 மணி நேரத்துக்குள்ள கேன்சல் பண்ணா டிக்கெட் விலையில 25% வரைக்கும் பிடிப்பாங்க. வண்டி எடுக்க 12 மணி நேரத்துல இருந்து 4 மணி நேரத்துக்குள்ள பண்ணா 50% வரைக்கும் காசு போயிடும் பாஸ்!
இதுவே 4 மணி நேரத்துக்குள்ள பண்ணா கன்ஃபார்ம் டிக்கெட்டுக்கு ரீஃபண்ட் கிடைக்காது. ஆனா, இ-டிக்கெட் வச்சிருக்கவங்களுக்கு ஒரு சூப்பர் விஷயம் இருக்கு. Indian Railways Refund Rules (indianrail.gov.in) வெப்சைட்ல சொல்றபடி, சார்ட் ரெடி பண்ணின பிறகும் உங்க டிக்கெட் ‘வெயிட்டிங் லிஸ்ட்லேயே’ (WL) இருந்தா, ரயில்வே சிஸ்டமே அதை ஆட்டோமேட்டிக்கா கேன்சல் பண்ணிடும்.
அப்படி சிஸ்டம் தானா கேன்சல் பண்ணும்போது எந்த ஒரு கிளெரிக்கல் சார்ஜும் (Clerkage) பிடிக்காமல் முழுப் பணமும் அப்படியே உங்க அக்கவுண்ட்டுக்கே வந்துடும்.
ஆனா, அதே வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை சார்ட் போடுறதுக்கு முன்னாடி நாமளா ஆன்லைன்ல போய் மேனுவலா கேன்சல் பண்ணினா மட்டும் ஒரு பயணியருக்கு 60 ரூபாய் கிளெர்க் சார்ஜ் பிடிப்பாங்க, அவ்வளவுதான்!
அதேபோல, ரயில்வே சைடுல இருந்தே ட்ரெயின கேன்சல் பண்ணிட்டா, நாம டிடிஆர் ((Ticket Deposit Receipt (TDR) கூட ஃபைல் பண்ணத் தேவையில்லை, காசு ஆட்டோமேட்டிக்கா நமக்கு வந்துடும்னு Railway Refund Manual (indianrailways.gov.in) ரூல்ஸ்ல தெளிவா சொல்லியிருக்காங்க. வெள்ளம், போராட்டம் காரணமா வண்டி 3 மணி நேரத்துக்கு மேல லேட்டா வந்தா, நாம ட்ரெயின்ல போகலனா கூட (டிடிஆர்) போட்டு முழுப் பணத்தையும் திரும்ப வாங்கிக்கலாம்.
இப்போ ஒரு சுவாரசியமான விஷயம் என்னனா, ஒரே ட்ரெயின்ல ஒருத்தர் ஸ்லீப்பர்லயும், இன்னொருத்தர் ஏசி கோச்லயும் டிக்கெட் புக் பண்ணி இருந்தா, சாதாரணமா நீங்க வேற வேற பெட்டில உட்கார்ந்து ட்ராவல் பண்ற மாறி இருக்கும்.
பட், ஒருவேளை ரெண்டு பெரும் டிக்கெட்டை ஒரே டைம்ல லேட்டா கேன்சல் பண்ணா, உங்களுக்குளேயே வர்ற ரீஃபண்ட் அமௌன்ட் பயங்கரமா வித்தியாசப்படும்.
காரணம் ஒண்ணு ஏசி, இன்னொன்னு non ஏசி சுருக்கமா சொன்னா, சும்மா சோசியல் மீடியா வதந்திகளை நம்பாம, நாம எப்போ டிக்கெட்டை கேன்சல் பண்றோம், என்ன கோச்ல புக் பண்ணியிருக்கோம் அப்படிங்கிறதை பொறுத்துதான் ரீஃபண்ட் காசு இருக்கும் மக்களே!