கொடைக்கானல் 'கிறுக்கு காடு'... உள்ளே சென்றால் ஆபத்தா? 20 பேருக்கு என்ன ஆனது?

7000 அடி உயரத்தில் உள்ள மதிகெட்டான் சோலையில் அனுமதி மறுக்கப்படுவதன் பின்னணியில் உள்ள மர்மம்.
மதிகெட்டான் சோலை
மதிகெட்டான் சோலைGemini image
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on: 

இந்தியாவில் கொடைக்கானல் பகுதியில் சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு. அந்த வகையில் குணா குகைக்கு அருகில் பேரிஜம் என்ற ஏரி 100 வருடங்களாக இருந்து வருகிறது. இந்த ஏரியை சுற்றியுள்ள மதிக்கெட்டான் சோலை இந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை. இந்தச் சோலைக்கு அனுமதி இல்லாமல் மீறி சென்றால் அவர்களுக்கு மரணம் நிச்சயம் அல்லது அவர்கள் யார் என்று அவர்களுக்கே தெரியாத நிலை ஏற்படும்.

அவர்கள் மதி மயங்கிய நிலையில் இருப்பார்கள். தன்னை யார் என்று அவர்களுக்கு உணரமுடியாது என இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

மதிகெட்டான் சோலை எந்த வகை சூரிய ஒளியையும் உள்ளே விடாமல் மரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து அடர்த்தியாக காணப்படும். இந்த இடங்களில் சூரிய வெளிச்சத்தையே காண முடியாது அவ்வளவு அடர்ந்த இருளாக இருக்கும். இங்குள்ள மக்கள் இந்தச் சோலையை 'கிறுக்கு காடு' என செல்லமாக அழைக்கிறார்கள்.

இந்த மதிகெட்டான் சோலையை சுற்றி உள்ள மக்கள் சுற்றுச்சூழல் காரணமாகவும் சிக்னல் கிடைக்காத காரணத்தாலும் பல வகைகளிலும் அல்லல் பட்டு வருகின்றனர். இவர்களின் அன்றாட தேவைகள் கூட முடக்கப்பட்டு வருகிறது. இதனால் மனிதர்கள் பைத்தியம் பிடிக்கும் சூழ்நிலைக்கு வருகிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சோலையில் உதிரும் பூக்கள் நல்ல நறுமணமாகவும் மிகவும் வலிமை வாய்ந்ததாகவும் உள்ளது. இந்த மனம் முழுவதும் இந்த காட்டை சுற்றிக்கொண்டே இருக்கும். இங்கு செல்பவர்களுக்கு இந்த நறுமணம் ஒருவித போதையை உண்டாக்கி அவர்களை மதி மயங்க செய்கிறது. இந்தச் சோலைக்கு செல்பவர்கள் மரணம் அடைந்தோ அல்லது மதி மயங்கி வருவது வாடிக்கையாக உள்ளது.

மதிகெட்டான் சோலை
மதிகெட்டான் சோலைGemini image

இதனால் இந்த சோலைக்குச் செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். இந்த சோலைக்கு சென்று இதுவரை 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் உள்ளது. இவை தவிர கொடைக்கானல் பகுதியில் பிரியண்ட் பூங்கா, ரோஸ் கார்டன், குணா குகை, கோக்கர்ஸ் வாக் போன்ற இடங்கள் உள்ளன. மோயர் பாயின்டிலிருந்து இந்தப் பேரிஜம் ஏரி 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த ஏரியை சுற்றிச் செல்லும் வழியில் தொப்பி தூக்கி பாறை, மதிக்கட்டான் சோலை, அமைதி பள்ளத்தாக்கு, வியூ பாயிண்ட் போன்ற இடங்களை பார்க்கலாம். ஆனால் மதிகெட்டான் சோலைக்கு மட்டும் அனுமதி இல்லை. வனத்துறை அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும். அதற்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேரிஜம் ஏரி 24 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஏரியாகும்.

மதிக்கட்டான் சோலையில் ஏராளமான மூலிகை மரங்கள் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படுகிறது.

இந்தச் சோலை 115 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலிகைகளும் பூக்களின் நறுமணமும் நம் மதியை மயங்கச் செய்வதாக கூறுகிறார்கள்

இங்கு 250 வகையான தாவரங்கள் உள்ளன. உலகிலேயே விலை உயர்ந்த ஆர்கிட் மலர்கள் இங்கு தான் காணப்படுகிறது. அடர்த்தியான மரங்கள் இருப்பதால் எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரிதான் தெரியும். வடக்கு எது கிழக்கு எது தெற்கு எது என்று கண்டுபிடிக்க முடியாது.

இதையும் படியுங்கள்:
வீக்கெண்ட் ட்ரிப் போகணுமா? அமைதியைத் தேடி மயிலாடுதுறை கூழையார் கடற்கரைக்கு வாங்க!
மதிகெட்டான் சோலை

இந்த காட்டில் ஆறு அங்குல உயரத்திற்கு இலை செருகுகள் அனைத்து இடங்களிலும் நிறைந்து காணப்படும். சில இடங்களில் இலை சருகுகளின் அடியில் நீர் செல்வதால் நாம் நடக்கும்போது ஒரு வித பய உணர்வு ஏற்படும். மதிகெட்டான் சோலையில் திசைகளை தெரியாது. பேரிஜியம் ஏரிக்கு செல்லும் வழியில் இந்த மதிகெட்டான் சோலையின் அழகை கண்டு ரசிக்கலாம்.

இந்த சோலையில் சித்தர் போகர் உருவாக்கிய சிலை ஒன்று உள்ளது. எனவே இந்த காட்டுப்பகுதியில் சித்தர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சோலை முழுவதும் பகலிலும் இருட்டாகவே காணப்படும்.

இந்த சோலையில் ஏராளமான வனவிலங்குகளும் வண்டு இனங்களும் நிறைந்து காணப்படுகிறது. இந்த சோலைக்கு செல்லும் நபர்கள் சித்தர்கள் தயாரித்த ஒரு நறுமணப் பொடிக்கு மயங்குவதாக கூறுவதும் உண்டு.

இதையும் படியுங்கள்:
ஏன் இதற்கு 'மதிகெட்டான் சோலை' என்று பெயர்? கொடைக்கானல் குணா குகையின் மர்மங்களும் உண்மைகளும்!
மதிகெட்டான் சோலை

அக்காலத்தில் ஆங்கிலேயர்கள் கூட இந்த சோலைக்கு செல்ல பயப்படுவார்கள்.

இந்தக் காடு 1897 இல் திருவிதாங்கூர் ஆட்சி காலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. தற்போது அரசாங்கமே இந்த வேலியை தாண்டி உள்ளே சென்றால் மரணம் ஏற்படும் என எச்சரிக்கை போட்டு வைத்துள்ளது. மதிகெட்டான் சோலை கதையைப் படிக்கும் போது நமக்கே மதி மயங்கிதான் போகிறது.

கொடைக்கானல் மதிகெட்டான் சோலையின் இயற்கை அமைப்பு, மூலிகை வாசம், திசை தெரியாத அடர்ந்த மரங்கள் மற்றும் வனத்துறையின் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் பற்றிய தெளிவான புரிதல் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com