

குமரகம் கேரளாவின் குட்டநாட்டில் அமைந்துள்ள, சதுப்பு நிலங்கள், வேம்பநாடு ஏரி, பறவைகள் சரணாலயம், பத்திர மணல் தீவு, உப்பம் கழி போன்ற இயற்கை அழகுகளால் சூழப்பட்ட சுற்றுலா சொர்க்கம். படகு சவாரி, மிதக்கும் உணவகம், ஐந்து நட்சத்திர படகு வீடுகள், ஆயுர்வேத மசாஜ், தேன் நிலவு சுற்றுலா போன்ற வசதிகளால் உலக சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
குமரகம் சதுப்பு நிலங்கள் நிரம்பிய ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு பார்க்க வேண்டிய இடங்கள், குமரகம் பறவைகள் சரணாலயம், வேம்ப நாடு ஏரி மற்றும் பத்திர மணல் தீவு ஆகிய இடங்கள் ஆகும். இது கோட்டையம் நகரத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பறவைகள் சரணாலயம் மட்டும் 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் பல வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. வேம்ப நாடு ஏரி இந்தியாவின் மிக நீண்ட ஏரியாக கருதப்படுகிறது.
படகு சவாரி செய்ய ஏற்ற இடமாக உள்ளது. பத்திர மணல் தீவு ஏரியில் உள்ள ஒரு அழகிய தீவாக உள்ளது. உப்பம் கழியில் பாரம்பரிய படகு சவாரி செய்து மகிழலாம். இங்கு ஆயுர்வேத மசாஜ் மையங்கள் உள்ளன. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை வானிலை நன்றாக இருக்கும். கோட்டயத்தில் இருந்து 14 கிலோமீட்டர் கொச்சி விமான நிலையத்திலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
கண்ணை கவரும் செழிப்பான சதுப்பு நிலக்காடுகள் வரிசையாக நிற்கும் தென்னை மரங்கள் என ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இங்கு தேங்காய் நார் தயாரித்தல் மீன் பிடித்தல் பனை ஓலை பின்னுதல் தாழம்பூ பின்னுதல் போன்ற வேலைகள் நடைபெறுகிறது. 2000 ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்த இடத்திற்கு வருகை தந்தது மூலம் இந்த இடம் சர்வதேச முக்கியத்துவம் பெற்றது. இது குட்ட நாட்டின் ஒரு பகுதியாகும்.
குட்டநாடு என்பது காயல் நீர் நிரம்பிய பல தீவுகளை கொண்ட அற்புத பூமி. குமரகம் 5160 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்டது. இதில் 2413 ஹெக்டர் ஏரிப்பகுதி ஆகும். 1500 ஹெக்டர் வயல்களாகவும் 1250 ஹெக்டர் மானாவாரி நிலப்பகுதி ஆகவும் உள்ளது.
குமரகம் ஒரு நம்ப முடியாத சொர்க்க பூமி ஆகும். நீர் வழி செல்லும் இடங்கள் எல்லாம் வெள்ளைப் பூக்கள் நிரம்பிய அழகிய செடிகள் நம்மை வரவேற்கின்றன. ஏராளமான நாட்டுப் படகுகள் தோணிகள் நம்மை ஏரியின் மையப்பகுதிக்கு அழைத்துச் செல்கின்றன. இங்கு நிறைய ரிசார்ட்கள் தங்குமிடங்கள் உள்ளன.
கடந்த நூற்றாண்டில் ஹென்றி பேக்கர் என்று ஆங்கிலேயர் இதன் அழகில் மயங்கி அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா அவர்களிடம் இருந்து 104 ஏக்கர் வாங்கி அந்த இடத்தில் அழகான பங்களா பூந்தோட்டங்கள் ரப்பர் தோட்டங்கள் இவற்றை அமைத்தார். இப்போது இந்த இடம் தாஜ் கார்டன்
ரீட் ரீட் என்ற தங்கும் இடமாக உள்ளது. கேரள சுற்றுலா வளர்ச்சிகழகம் இதனை பராமரித்து வருகிறது.
கேரள டூரிசம் இங்கு குளிரூட்டப்பட்ட குடிசைகளையும் மிதக்கும் உணவகம் மற்றும் படகு சவாரிகளை நடத்தி வருகிறது. ஆரம்ப காலத்தில் இந்த இடம் மீனவர்களின் தாயகமாக விளங்கியது. இங்குள்ள வேம்பநாடு ஏரி இந்தியாவில் மிகப்பெரிய ஏரியாக உள்ளது. அக்காலத்தில் இந்த ஏரி மசாலா பொருட்கள் கொண்டு செல்ல முக்கிய வழித்தடமாக செயல்பட்டது.
இங்கு ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. ஏராளமான படகு சொகுசு வீடுகள் காணப்படுகிறது. இந்த இடங்களில் கோக்கனட் லாகூன் ரிசார்ட் குமரகம் லேக் ரிசார்ட் போன்ற தங்கும் இடங்கள் உள்ளன. ஆலப்புழா, கோட்டையம், எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களுக்கு படகு மூலம் தான் செல்ல வேண்டும்.
இங்குள்ள படகு வீடுகள் ஐந்து நட்சத்திர வசதிகள் கொண்டவை. இங்குள்ள பறவைகள் சரணாலயத்தில் ஆண்டு முழுவதும் பறவைகள் வந்து கொண்டே இருக்கும். குமரகம் சிறந்த சுற்றுலா தலமாக வழங்கி வருகிறது.
மேலும் தேன் நிலவுக்கு செல்லும் தம்பதிகள் இங்குள்ள சுற்றுலா படகு வீட்டில் தங்கி தேன்நிலவு கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இவை ஐந்து நட்சத்திர வசதி கொண்டவை.
கேரளா டூரிசம் இதற்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது. குமரகத்தில் ஏராளமான மசாஜ் சென்டர்கள மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த வழிகாட்டியை வாசிப்பதன் மூலம், உங்கள் குமரகம் சுற்றுலா பயணத்தை மிகக் குறைந்த செலவில், அதிக அனுபவங்களுடன் எவ்வாறு திட்டமிடுவது என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்வதோடு, தேன்நிலவு மற்றும் குடும்பப் பயணத்திற்கான சிறந்த இடங்களை நொடியில் தேர்வு செய்ய முடியும்.