

பிலிப்பைன்ஸ் சுற்றுலா பயணிகளை மயக்கும் தீவுகளும் கடலடி சாகசங்களும்
பிலிப்பைன்ஸ் நாடு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு பெரிய தீவுக்கூட்டமாகும் இங்கு 7000 மேற்பட்ட தீவுகள் உள்ளன. லுகோன் விசாயாஸ் மற்றும் மின்டநோவா என மூன்று பிரிவாக உள்ளது. அழகிய கடற்கரைகள் பவளப்பாறைகள் மற்றும் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக உள்ளது. லுகோன் நாட்டின் தலைநகரான மணிலாவில் உள்ளது பெரிய தீவாக கருதப்படுகிறது.
விசாயாஸ் இந்த தீவுகள் நடுப்பகுதிகளில் அமைந்துள்ளன. பல்வாங் கொரோன் போன்ற தீவுகள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாகும். சியார்கால் என்ற தீவு சாகசங்களுக்கு பெயர் பெற்றது. அழகிய வெள்ளை நிற மணல் கடற்கரைகள் நீர்வாழ் உயிரினங்கள் நீர்வீழ்ச்சிகள் இரவு விடுதிகள் ஷாப்பிங் என்ன சகல வசதிகள் உள்ளது.
மணிலாவில் சிறந்த சாலை வசதிகள் உயர்ந்த கட்டிடங்கள் என அழகு வாய்ந்த பல இடங்களை காணலாம். சாண்டியாகோ கோட்டை சான் அகஸ்டின் தேவாலயம் என தேவாலயங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்குள்ள மால் ஆப் ஏசியா தோற்றம் மிரள வைக்கிறது. ஷாப்பிங் பிடிக்காதவர்கள் கூட இந்த மாலுக்குள் சென்றால் எதையும் வாங்காமல் திரும்பி வர மாட்டார்கள். இங்கு எல்லாமே மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்.
நிறைய கடைகள் தெருவோரங்களில் சிறந்த உணவகங்கள் உள்ளன. பெரும்பாலான உணவகங்கள் ஸ்பானிஷ் முறையில் செயல்பட்டு வருகிறது. சைனா டவுன் என்ற இடம் மிகவும் பழமையானது. மணிலாவின் இரவு வாழ்க்கை அற்புதமானது.
எங்கு திரும்பினாலும் மதுபானக்கூடங்கள், நடன கிளப்புகள், மசாஜ் சென்டர்கள் அதிகம் உள்ளன. வரிசை கட்டி நிற்கும் பெண்கள் நம்மளை வரவேற்கிறார்கள்.
மணிலாவில் நைட் கிளப் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இங்குள்ள டாக்ஸி டிரைவர்கள் பணம் பிடுங்குவது இல்லை நியாயமாக நடந்து கொள்கிறார்கள். எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சிகள் கண்களை கவர்கிறது. எரிமலை சுற்றுலா செல்வது ஒரு திகில் நிறைந்த அனுபவமாக இருக்கும். எரிமலை பகுதிகள் திகில் மற்றும் அழகு நிறைந்த பகுதிகளாக காணப்படுகிறது.
தால் ஏரிக்கரையில் இருந்து படகு மலம் சவாரி செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். இங்கு சவாரி செய்ய குதிரைகள் வரிசையாக நிற்கும். குதிரை சவாரி செய்வது என்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். குதிரையில் ஏறி அமர்ந்ததும் சமதளத்திலிருந்து கரடு முரடான பாதைகளுக்கு சென்று மலை உச்சியை அடைகிறது.
இங்கிருந்து எரிமலை பகுதிகளையும் ஏரிகளையும் இயற்கை காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம். வரிசையாக குதிரைகள் செல்வதே தனி அழகு. அந்த மலைப்பகுதியை விட்டு வரவே மனசு வராது. அந்த அந்த அளவிற்கு சுகமான அனுபவமாக இருக்கும். பலர் அங்கேயே உறைந்து போய் நிற்பார்கள். அவ்வளவு கொள்ளை அழகு நிறைந்த பகுதிகளை இந்த இடங்களில் காணலாம். ஏரிகளில் படகு மூலம் சவாரி செய்பவர்கள் அருகில் உள்ள மூங்கில் உணவகத்தில் சுடச்சுட மீன் சாப்பாடு கிடைக்கும். இங்குள்ள மீன் சாப்பாடு மிகவும் சுவையாக இருக்கும்.
இங்குள்ள 7000 தீவுகளையும் மாத கணக்கில் தங்கி இருந்து பார்வையிட்டு வரலாம். இந்த தீவில் உள்ள வெண் மணல் கடற்கரைகள் பார்க்க அழகாக இருக்கும். இந்த இடங்களில் இரவு நேரத்தில் நம்மை தங்க வைத்து விடுகிறது. இங்கிருந்து சூரிய உதயம் சூரிய அஸ்தமனம் இவற்றை காணலாம்.
பொரொகோவில் உள்ள நீச்சல் குளங்களில் டைவ் அடித்து மகிழலாம். இங்குள்ள ஆழமான கடல் பகுதிக்கு நம்மை ஆக்சிஜன் நிரம்பிய ஹெல்மெட் உடன் நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.
20 அடி ஆழம் வரை சென்று கடலில் வாழும் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகளை அருகே சென்று பார்க்கலாம். கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாகவும் அற்புதமாகவும் இருக்கும்.
சுமார் 20 நிமிடங்கள் வேற்றுக்கிரகவாசிகள் போல் நாம் செயல்பட வேண்டி இருக்கும். மேலும் புக்காஷெல் பீச் முதலைத்தீவு புல்லிங் ஹாய் போன்ற இடங்களையும் பார்த்து ரசிக்கலாம். கிரிஸ்டல் கோல் தீவு கடல் குகைகள் விதவிதமான நிறங்களில் உள்ள பாறைகள் மற்றும் புக்கா செல் பீச் போன்றவை அழகிய ரம்யமான இடங்களாகும். குறைந்த பட்ஜெட்டில் மேற்கண்ட இடங்களை சுற்றி பார்வையிட்டு வரலாம்.
குறைந்த பட்ஜெட்டில் சர்வதேச நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கான முழுமையான திட்டமிடலைப் பெற்று, உங்கள் அடுத்த வெளிநாட்டுப் பயணத்தை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றலாம்