உலகின் கருப்புத் தங்கக் கடல்: சவுதி அரேபியாவின் நம்ப முடியாத எண்ணெய் வளம்!

தோண்டத் தோண்டக் குறையாத கச்சா எண்ணெய் மற்றும் கவவார் எண்ணெய் களம் பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள்.
சவுதி அரேபியா
சவுதி அரேபியாGemini image
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 

உலகின் மிக அதிகமான பெட்ரோலிய வளம் கொண்ட நாடு என்ற பெருமையை மிக நீண்ட காலமாக வைத்திருக்கும் நாடு சவுதி அரேபியா (Saudi Arabia). மேற்கு ஆசியாவில் உள்ள அது அதிகாரப்பூர்வமாக சவூதி அரேபிய இராச்சியம்(Kingdom of Saudi Arabia என்று அழைக்கப்படுகிறது. மத்திய கிழக்கின் நடுவில் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் மிகவும் பெரியது.

அரபுத் தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்துள்ள. இந்நாட்டின் பரப்பளவு சுமார் 21.50 இலட்சம் சதுர கிலோமீட்டர் ஆகும். இது இந்நாட்டை ஆசியாவில் ஐந்தாவது மிகப்பெரிய நாடாகவும், மத்திய கிழக்கில் இருப்பதிலேயே மிகப்பெரிய நாடாகவும, மற்றும் உலகின் பன்னிரெண்டாவது மிகப் பெரிய நாடாகவும் ஆக்குகிறது

உலகின் மொத்த பெட்ரோலிய வளத்தில் 18 சதவீதத்தை தன் வசம் வைத்திருக்கும் நாடு சவுதி அரேபியா. அந்த நாட்டின் மொத்த பொருளாதாரமே அந்த பெட்ரோலிய வளங்களைக் கொண்டுதான். அதன் மொத்த தேசிய வளத்தில் 50 சதவீதம் பெட்ரோலும், எரிவாயுவும் தான்.

சவுதி அரேபியாவில் நதிகள் கிடையாது, காடுகள் கிடையாது. சவுதி அரேபியாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மணப்பாங்கான பாலைவனம் தான். அந்த பாலைவனங்களில் அடியில்தான் அந்நாட்டை வளம் கொழிக்கும் செய்யும் கருப்பு தங்கம் எனும் பெட்ரோலிய சுரங்கங்கள் உள்ளன.

1932 ல் சவூதி அரேபியா தனி நாடாக உருவான பிறகு 6 வருடங்கள் கழித்துதான் அங்கே பெட்ரோலியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரேபியா நாடுகளின் முக்கிய பொருளாதாரமே தோண்ட தோண்ட கிடைக்கும் எண்ணெய் வளங்கள் தான். பெரும்பாலான உலக நாடுகளும் தொழிற்சாலைகளும் இங்கே கிடைக்கும் கச்சா எண்ணெய்களை மூலதனமாக கொண்டுதான் இயங்குகின்றன.

கச்சா எண்ணெய்யை பீப்பாய் கணக்கில்தான் அழைக்கிறார்கள். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் என்பது கிட்டத்தட்ட 159 லிட்டர். இதிலிருந்து தான் பெட்ரோல், டீசல் , மண்ணெண்ணெய் என அனைத்து எரிபொருட்களும் பிரித்தெடுக்கப்படுகின்றன.

1938 ம் ஆண்டுதான் சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெட்ரோலிய கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டது'. தம்மம்' என்ற பகுதியில் 1440 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் பல எண்ணெய் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும். பூமிக்கடியில் 280 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரந்து விரிந்திருக்கும் கருப்புத் தங்கச் சுரங்கம் சவூதி அரேபியாவில் அமைந்துள்ளது.

கவார் (Ghawar) என அழைக்கப்படும் இந்த எண்ணெய்க் களம் உலகின் மிகப்பெரிய எண்ணெய்க் களமாகவும் உலகின் மிகப் பிரம்மாண்டமான எண்ணெய் வளங்களில் ஒன்றாககவும் விளங்குகிறது.1948 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த எண்ணெய்க் களம், இன்றளவும் உலகின் மிக முக்கியமான எண்ணெய் உற்பத்தி மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்த எண்ணெய்க் களத்தின் பிரம்மாண்டத்தை உணர்த்துவது அதன் அளப்பரிய எண்ணெய் வளமாகும். சவூதி அராம்கோ நிறுவனத்தின் தரவுகளின்படி, இதில் 58 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு சுமார் 38 இலட்சம் பீப்பாய்களாகும். இந்த அளவில் ஆண்டு முழுவதும் உற்பத்தி தொடர்ந்தால், ஓராண்டில் சுமார் 140 கோடி பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்ய முடியும்!

சவுதி அரேபியா
சவுதி அரேபியாGemini image

சுமார் 280 கிலோமீட்டர் நீளத்திற்குப் பூமிக்கடியில் பரந்து விரிந்திருக்கும் இந்த எண்ணெய் பிரம்மாண்டம், பாலைவன மணலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் கருப்புத் தங்கக் கடலாகும். உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் இது முக்கியப் பங்காற்றி வருகிறது.

இதையும் படியுங்கள்:
எல்நினோவை உருவாக்கும் பசிபிக் பெருங்கடல் பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள்...!
சவுதி அரேபியா

சவுதி அரேபியாவின் தேசிய விலங்கு பாலைவன கப்பல் என கூறப்படும் ஒட்டகம். விலை உயர்ந்த கார்களை வைத்திருப்பவர்களைவிட சொந்தமாக ஒட்டகங்களை வைத்திருப்பவர்களைத் தான் அங்கே பணக்காரர்களாக ஏற்றுக் கொள்வார்கள். சவுதி அரேபியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ஒட்டகப்பந்தயம் மிகவும் புகழ்பெற்றது.19 கிமீ நீளமுள்ள தூரத்தை கடக்கும் இந்த போட்டியில் சுமார் இரண்டு ஆயிரம் ஒட்டகங்கள் கலந்து கொள்ளும்.

சவுதி அரேபியாவில் தேசியக் கொடியை எக்காரணத்தைக் கொண்டும் அரைக்கம்பத்தில் பறக்க விட மாட்டார்கள். காரணம் அந்த நாட்டின் தேசியக் கொடியில் குரான் வாசகம் இடம் பெற்றிருப்பது தான். சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் மன்னர் அப்துல்லா சதுக்கத்தில் 560 அடி உயரத்தில் பறக்கும் அந்நாட்டு தேசியக் கொடி 2014ம் ஆண்டு செப்டம்பர் 23 ல் நிறுவப்பட்டது. இதுவே உலகின் உயரமான தேசியக் கொடி.

சவுதி அரேபியா ஒரு சமத்துவம் மறுக்கும் நாடு. உறவினர்களைத் தவிர வேறு யாருடனும் பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது. தனியாக கார்கள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது. உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளைத்தான் பெண்கள் அணிய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மத்தியப் பிரதேச ஆன்மிக சுற்றுலா - 5: சாந்தீபனி ஆசிரமம் & அதிகாலை பஸ்ம ஆரத்தி
சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் ஒரே அலுவலகத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்ய அனுமதி இல்லை போன்ற கடுமையான சட்டங்கள் அங்கு உள்ளது. இதில் வேடிக்கையான விஷயம் உலகின் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக்கழகம் இருப்பது சவுதி அரேபியாவில் தான்.

உலகிலேயே கடுமையான தண்டனை வழங்கும் நாடு சவுதி அரேபியா தான். மோட்டார் வாகனத்தை மிகவும் வேகமாக ஓட்டினால் சிறைத்தண்டனையும்,50 சவுக்கடிகளும் தண்டனை தரும் நாடு அது. கடுங்குற்றங்கள் செய்கின்றவர்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

அதில் பெரும்பாலும் தூக்கில் போடுவதுதான், சில நாடுகளில் மின்சார நாற்காலியில் அமரவைத்து மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஆனால் தலையை துண்டித்து மரண தண்டனை வழங்கப்படுவது உலகிலேயே சவூதி அரேபியாவில் மட்டும்தான்.

வாசகர்கள் சவுதி அரேபியாவின் பெட்ரோலிய வளத்தின் பிரம்மாண்ட அளவையும், புகழ்பெற்ற கவவார் எண்ணெய் களத்தின் வரலாியையும் முழுமையாகப் புரிந்துகொள்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com