இலங்கையில் ஜிக்-ஜாக் கோடுகள்: உயிர் காக்கும் முக்கிய எச்சரிக்கை!

வீதிகளில் இந்த கோடுகளைக் கண்டால் ஓட்டுநர்கள் செய்ய வேண்டியது என்ன?
இலங்கை
இலங்கைGemini image

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இந்தியச் சாலைகளில் வெள்ளைக்கோடுகள் வாகனப் போக்குவரத்தைச் சீரமைக்கவும், ஓட்டுநர்களுக்கு வழிகாட்டவும், விபத்துகளைத் தவிர்க்கவும் பயன்படுகின்றன. கோடுகள் வரையப்பட்டுள்ள முறையைப் பொறுத்து அவற்றின் அர்த்தங்கள் மாறுபடும்:

துண்டுத் துண்டான வெள்ளைக்கோடு (Broken White Line):

இந்தச் சாலையில் நீங்கள் பாதுகாப்பான சூழலில் பாதையை (Lane) மாற்றலாம் அல்லது முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்லலாம்.

தொடர்ச்சியான வெள்ளைக் கோடு (Solid White Line):

நீங்கள் செல்லும் பாதையிலேயே தொடர்ந்து செல்ல வேண்டும். வழியை மாற்றுவதோ அல்லது முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்வதோ கூடாது.

இரட்டை வெள்ளைக்கோடு (Double Solid White Lines): இக்கோடு இருந்தால், எக்காரணத்தைக் கொண்டும் பாதையைக் கடக்கவோ, முந்திச் செல்லவோ முடியாது. ஆபத்தான வளைவுகள் மற்றும் மலைப் பாதைகளில் இது காணப்படும்.

சாலையின் ஓரங்களில் உள்ள கோடு (Edge Line):

சாலையின் விளிம்பைக் குறிக்கிறது. இரவு நேரம் மற்றும் பனிமூட்டமான காலங்களில் ஓட்டுநர்கள் சாலையை விட்டு விலகிச் செல்லாமல் இருக்க இது உதவுகிறது.

பாதசாரி கடவை (Zebra Crossing): பாதசாரிகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடப்பதற்காக வரையப்படும் அகலமான வெள்ளைக் கோடுகள். சுருக்கமாகச் சொன்னால், வெள்ளைக் கோடுகள் சாலைப் போக்குவரத்தின் ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அமைதியான வழிகாட்டிகளாகச் செயல்படுகின்றன.

ஆனால் இலங்கையின் வீதிகளில் காணப்படும் 'ஜிக்-ஜாக்' வெள்ளை கோடுகளின் முக்கியத்துவமும் பாதுகாப்பும்

இலங்கையின் பிரதான வீதிகளில் பயணம் செய்யும்போது, பாதசாரி கடவைகளுக்கு (Zebra Crossings) அருகிலும், வீதிகளின் ஓரங்களிலும் வெள்ள நிறத்தில் வளைந்து நெளிந்த (Zig-Zag) கோடுகள் வரையப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். இவை வெறும் சாதாரண வீதி வடிவமைப்பு அல்ல; மாறாக, வீதிப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், விபத்துகளைத் தவிர்க்கவும் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக அமைக்கப்பட்ட மிக முக்கியமான வீதி போக்குவரத்து அடையாளங்களாகும்.

எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு

இவ்வகை ஜிக்-ஜாக் கோடுகளின் முதன்மை நோக்கம் ஓட்டுநர்களை விழிப்புணர்வுடன் வைப்பதாகும். ஒரு வாகன ஓட்டுநர் வீதியில் செல்லும்போது இக்கோடுகளைக் கண்டால், அங்கு சற்றுத் தொலைவில் பாதசாரிகள் வீதியைக் கடக்கும் இடம் (Pedestrian Crossing) வரப்போகிறது என்பதை முன்கூட்டியே புரிந்துகொள்ள வேண்டும். இது ஓட்டுநருக்குத் திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்தாமல், இயல்பாகவே வாகனத்தின் வேகத்தைக் குறைத்துக்கொள்ள ஒரு முன்-எச்சரிக்கையாகச் செயல்படுகிறது.

முந்திச் செல்வதற்கான தடை (No Overtaking Zone)

ஜிக்-ஜாக் கோடுகள் வரையப்பட்டிருக்கும் பிராந்தியம் ஒரு 'முந்திச் செல்லக்கூடாத மண்டலமாக' (No Overtaking Zone) சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

இலங்கை
இலங்கைGemini image

பாதசாரி கடவையை நெருங்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல முயலும்போது, குறுக்கே நடந்து செல்லும் பாதசாரிகள் பின்னால் வரும் ஓட்டுநரின் பார்வைக்குத் தெரியாமல்போக வாய்ப்புள்ளது. இது கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும். எனவே, இந்த ஜிக்-ஜாக் கோடுகள் இருக்கும் எல்லைக்குள் எந்தவொரு வாகனமும் முந்திச் செல்ல அனுமதி இல்லை.

இதையும் படியுங்கள்:
காட்டு விலங்குகளின் இரவுக் கச்சேரி: சஃபாரியில் உயிருடன் தப்பிக்கவும் ரசிக்கவும் வழிகள்!
இலங்கை

வாகனங்களை நிறுத்தக் கடுமையான தடை (No Parking / Stopping Zone)

இக்கோடுகள் காணப்படும் பகுதிகளில் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதோ (Parking) அல்லது சிறிது நேரத்திற்கு நிப்பாட்டி வைப்பதோ (Stopping) முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பேருந்துகள் அல்லது டாக்சிகள் இப்பகுதியில் பயணிகளை ஏற்றி இறக்குவது சட்டப்படி குற்றமாகும். வாகனங்களை இப்பகுதியில் நிறுத்துவதால், பாதசாரிகள் வீதியைக் கடக்க முயலும்போது ஓட்டுநர்களின் பார்வை மறைக்கப்பட்டு (Blind Spot) பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும்.

பார்வைத் தெளிவு மற்றும் பார்வை புலன் (Visibility)

நேர்க்கோடுகளைவிட வளைந்து நெளிந்து செல்லும் ஜிக்-ஜாக் கோடுகள் ஓட்டுநர்களின் கவனத்தை விரைவாக ஈர்க்கும் தன்மையுடையவை. தூரத்தில் இருந்தே ஓட்டுநரின் கண்ணில் தெளிவாகப் புலப்படுவதால், அவர் உடனடியாகத் தனது கவனத்தை வீதியின் இருபுறமும் செலுத்தி, பாதசாரிகள் யாரேனும் கடக்கிறார்களா என்பதை அவதானிக்க முடிகிறது.

இதையும் படியுங்கள்:
ஆப்கானிஸ்தான் முதல் வடகொரியா வரை: சுற்றுலா பயணிகள் செல்லக்கூடாத 5 ஆபத்தான நாடுகள்!
இலங்கை

வீதி பாதுகாப்பில் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளின் பொறுப்பு

இலங்கையின் வீதிப் போக்குவரத்துத் திணைக்களம் இத்தகைய அமைப்புகளைப் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவே அமைத்துள்ளது.

ஓட்டுநர்களின் கடமை

ஜிக்-ஜாக் கோடுகளைக் கண்டதும் வேகத்தைக் குறைத்து, பிரேக் செய்யத் தயாராக இருக்க வேண்டும். பாதசாரிகள் கடவையில் கால் வைத்தால் வாகனத்தை முழுமையாக நிறுத்த வேண்டும்.

பாதசாரிகளின் கடமை

பாதசாரிகளும் இந்த ஜிக்-ஜாக் கோடுகள் மற்றும் மஞ்சள் கோடுகள் உள்ள பகுதிகளை மட்டுமே வீதியைக் கடப்பதற்குப் பயன்படுத்த வேண்டும்.

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்துவதிலும், பாதசாரிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் இந்த ஜிக்-ஜாக் கோடுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. வீதி விதிகளை உணர்ந்து, இந்த அடையாளங்களை மதித்து வாகனங்களை இயக்குவது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகக் கருதப்படுகிறது.

விபத்துகளைத் தவிர்க்கவும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஜிக்-ஜாக் கோடுகளின் சட்டப்பூர்வ அவசியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

logo
Kalki Online
kalkionline.com