தமிழ்நாடு சம்மர் ஸ்பெஷல்: உங்கள் ட்ரிப்பை 'கூல்' ஆக்கும் 5 மேஜிக் கேட்ஜெட்ஸ்!

Summer Trip Gadgets
Summer Trip Gadgets
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

தமிழ்நாட்டில் கோடைகால கத்திரி வெயிலில் இருந்து தப்பிக்க கொடைக்கானல், ஊட்டி என மலைப் பிரதேசங்களுக்கோ அல்லது மாமல்லபுரம் போன்ற பீச்களுக்கோ ட்ரிப் செல்ல பலரும் பிளான் செய்வார்கள். ஆனால் சாதாரணமாக துணிகளை மட்டும் பேக் செய்துகொண்டு இந்த சம்மரில் ஊர் சுற்றுவது ரொம்பவே கஷ்டமான காரியம். 

வெயிலின் தாக்கத்தை சமாளிக்கவும், உங்களின் பயணத்தை ரொம்பவே ஜாலியாகவும் மாற்றுவதற்கு சில ஸ்மார்ட்டான கேட்ஜெட்டுகள் உங்கள் கையில் இருப்பது அவசியம். அந்த அட்டகாசமான பொருட்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

போர்ட்டபிள் நெக் ஃபேன் (Portable Neck Fan)

வெளியே சுற்றும்போது முகத்தில் வடியும் வியர்வையைத் துடைப்பதே ஒரு பெரிய வேலையாக இருக்கும். இதற்கு ஒரு சூப்பரான தீர்வுதான் போர்ட்டபிள் நெக் ஃபேன். ஹெட்போன் போல கழுத்தில் மாட்டிக்கொள்ளும் வகையில் இருக்கும் இந்த குட்டி ஃபேன், உங்கள் முகத்திற்குத் தொடர்ந்து ஜில்லென்ற காற்றைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். சார்ஜ் செய்து பயன்படுத்தும் இந்த ஃபேன் அமேசானில் பல வண்ணங்களில் மிக மலிவாகக் கிடைக்கிறது.

ஸ்மார்ட் தெர்மல் பிளாஸ்க் (Smart Thermal Flask)!

வெயிலில் சுற்றும்போது உடலை எப்போதும் ஹைட்ரேட்டடாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம். சாதாரண பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கொண்டு சென்றால் அது சில நிமிடங்களிலேயே வெந்நீர் போல கொதிக்க ஆரம்பித்துவிடும். இதற்குப் பதிலாக ஒரு நல்ல ஸ்மார்ட் தெர்மல் பாட்டிலை இணையத்தில் ஆர்டர் செய்து வாங்குங்கள். இதில் ஊற்றி வைக்கும் குளிர்ந்த நீர் இருபத்தி நான்கு மணி நேரம் வரை அப்படியே ஜில்லென்று இருக்கும். சில பாட்டில்களின் மூடியில் வெப்பநிலையைக் காட்டும் LED சென்சார் கூட உள்ளது.

பவர் பேங்க் (Power Bank)

பயணத்தின்போது லொகேஷன் பார்க்க மேப் பயன்படுத்துவது, ரீல்ஸ் பார்ப்பது மற்றும் நிறைய புகைப்படங்கள் எடுப்பது என மொபைலைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருப்போம். அதிக வெப்பம் காரணமாக மொபைல் பேட்டரி மிக சீக்கிரமாகவே காலியாகிவிடும். அதனால் குறைந்தது 20000mAh திறன் கொண்ட ஒரு தரமான ஃபாஸ்ட் சார்ஜிங் பவர் பேங்க் உங்கள் பேக்கில் கட்டாயம் இருக்க வேண்டும். இது அவசர நேரங்களில் ஒரு பெரிய ஆபத்பாந்தவனாகச் செயல்படும்.

இதையும் படியுங்கள்:
ஜப்பானின் 'WOTA BOX' மேஜிக் - இனி வாட்டர் கனெக்ஷன் தேவையில்லை!
Summer Trip Gadgets

வாட்டர் ப்ரூஃப் ப்ளூடூத் ஸ்பீக்கர் (Waterproof Bluetooth Speaker)!

நண்பர்களுடன் ட்ரிப் செல்லும்போது பாட்டு இல்லாமல் பயணம் முழுமையடையாது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தனுஷ்கோடி அல்லது கன்னியாகுமரி போன்ற பீச்களுக்குச் செல்லும்போது, அலைகளின் சத்தத்தோடு சேர்ந்து இசையையும் ரசிக்க ஒரு நல்ல ப்ளூடூத் ஸ்பீக்கர் தேவை. தண்ணீர் பட்டாலும் வீணாகாத வாட்டர் ப்ரூஃப் ஸ்பீக்கர்கள் இப்போது அமேசானில் நிறையவே கிடைக்கின்றன. இது உங்களின் கேம்ப்ஃபயர், இரவு நேர பார்ட்டிகளை ரொம்பவே உற்சாகமாக மாற்றிவிடும்.

மினி பிரிட்ஜ் (Mini Fridge)

நீங்கள் காரில் நீண்ட தூரம் பயணம் செய்பவராக இருந்தால், ஒரு போர்ட்டபிள் மினி பிரிட்ஜ் வாங்குவது ரொம்பவே புத்திசாலித்தனம். இதை காரின் சார்ஜிங் போர்ட்டில் கனெக்ட் செய்து, உங்களுக்குப் பிடித்த ஜூஸ் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ்களை வைத்துக்கொள்ளலாம். அதேபோல, வெயிலில் நடந்து சுற்றும் போது கழுத்தில் போட்டுக்கொள்ள ஐஸ் கூலிங் டவல்களும் ஆன்லைனில் கிடைக்கின்றன. இதை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கழுத்தில் போட்டால் ஏசியில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர் போறீங்களா? அப்படின்னா இந்த 7 விஷயத்தை கண்டிப்பா செய்யாதீங்க!
Summer Trip Gadgets

இந்த கேட்ஜெட்டுகள் உங்களின் கோடைகாலப் பயணத்தின் சுமையை பெருமளவு குறைத்துவிடும். வழியில் தண்ணீர் சூடாகிவிட்டதே என்றோ, மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டதே என்றோ எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல் உங்களால் நிம்மதியாக ஊர் சுற்ற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com