டான்சானியா ஷின்யன்கா பயண அனுபவம்: வைர சுரங்கங்களும் விசித்திர கலாச்சாரமும்!

பல்லில் வைரத்தை கவ்வி வந்த வியாபாரி முதல் விசித்திர திருமண சடங்குகள் வரை!
டான்சானியா ஷின்யன்கா - Tanzania travelogue
டான்சானியா ஷின்யன்கா - Tanzania travelogue
வி.ரத்தினா

I am V Rathina . Born and brought up in Madurai. I did BSc ( special maths) from Lady Doak college Madurai . Soon after completion of my graduation joined Telecom Department at Hyderabad and Worked as Chief Accounts Officer Writing Tamil script, short stores and jokes are my passion right from the school days. Written few scripts in school/college competition and won prizes. My articles/stories are published in various Magazines.. I got more encouragement and inspiration when started writing for Kalki Group. My sincere thanks to Kalki Group. I also sincerely hope to continue writing very useful and beneficial articles for the readers.

Updated on: 

டான்சானியாவில் ( கிழக்கு ஆப்பிரிக்கா ) உள்ள ஷின்யன்கா என்ற ஊருக்கு பணி நிமித்தமாக சென்ற கணவருடன் நானும் சென்று சில மாதங்கள் தங்கி இருந்தேன். அது ஒரு மாறுபட்ட சுவையான அனுபவம் டான்சானியா ஷின்யன்கா அமைதியான, அழகான, மிதமான சீதோஷண நிலை உள்ள நகரம். மக்கள் தொகை மிகவும் குறைவு. கேரளாவைப் போன்று தென்னை மரங்கள் நிறைந்து எங்கும் பசுமையாகக் காட்சி அளிக்கும். கிளிமஞ்சாரோ எரிமலை மிக அருகிலேயே இருப்பினும் இங்கு நிலங்கள் வளமானதாகவும் இயற்கையாக விளையும் காய் கனிகள் மிகவும் ருசியாகவும் இருக்கும்..

ஷின்யன்காவில் உள்ள பழங்குடியினர் சுகுமா (Sukuma) மற்றும், நியம்வேசி (Nyamwezi) என்ற இனத்தை சேர்ந்தவர்கள். இங்குள்ள மக்கள் வாட்டசாட்டமாக மிக வலிமையானவர்களாக தோற்றமளிப்பார்கள். அவர்கள் பேசும் மொழி ஸ்வஹேலி (SWAHILI) .நமது சமஸ்கிருதம் கலந்திருக்கும். ஷின்யன்காவின் கரன்ஸி ‘ஷில்லிங்’ ஆகும். ஒரு ஷில்லிங் என்பது நம் இந்திய 35 பைசாவிற்கு சமம்.

இதையும் படியுங்கள்:
யூரோப் சுற்றுலா (9) - விழுந்து எழுந்த அனுபவமும், வேறு பல இடையூறுகளும்...
டான்சானியா ஷின்யன்கா - Tanzania travelogue

இங்கு திருட்டு, கொள்ளைகள் அதிகம். நான் ஒரு நாள் வாக்கிங் சென்றபோது ஒருவன் வழியில் இடைமறித்துப் பணம் கேட்டான். என்னிடமிருந்த 100 ஷில்லிங் நாணயங்களை கொடுத்துவிட்டு வந்தேன். பணம் நம்மிடம் இல்லையென்றால் நம்மை தாக்கி விட்டுப் போவார்கள்.

தங்க, வைர சுரங்கங்கள் நிறைந்த இந்த ஊரில் நாம் நகைகள் அணிந்து வெளியே செல்ல முடியாது. இங்கு அரேபியர்களுக்கு சொந்தமான வைர சுரங்கங்கள் உள்ளன. ஒரு நாள் ஒருவன் வைரக் கல் ஒன்றை பல்லில் இடுக்கிக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்து வைரத்தை குறைந்த விலையில் தருகிறேன் என்று சொன்னான். நான் வாங்கவில்லை ஏனென்றால் அவனே மறுபடியும் வந்து திருடிக் கொண்டுபோய் விடுவான் எனத் தெரிந்தது.

வீட்டுப் பணிப்பெண்கள் மிகக் குறைவான சம்பளத்திற்கு வேலை செய்வார்கள். எங்கள் வீட்டில் பணிபுரிந்த பெண் பல்லி, கரப்பான், எலி என்று வீட்டினுள் எது ஊர்ந்தாலும் அப்படியே கையில் பிடித்து வெளியே எறிவார். டைனிங் டேபிளில் நம்முடன் அமர்ந்து உணவை நிதானமாக ருசித்து சாப்பிடுவார்.

ஷின்யன்காவில் மக்கள் பொதுவாக அரிசி மற்றும் வெள்ளை சோளத்தை சமையலில் பயன்படுத்துவர். இங்கு பருத்தி அதிகமாக பயிரிடப்படுகிறது. அதிக பருத்தி உற்பத்தியால் பருத்தி ஆலைகளும் நிறைய உண்டு பருத்தி விதைகளை அரசாங்கமே விநியோகிக்கிறது. பருத்தி. பிற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இங்கு தென்னை மரங்கள் அதிகமாக இருக்கின்றன. இளநீர் குடித்தால் குண்டாகி விடுவோம் என்றொரு நம்பிக்கை. இந்த ஊரில் இளநீரை குடிக்காமல் கீழே கொட்டி விடுவார்கள்

இங்கு மொய் பணம் கொடுப்பவர்களுக்குத் தான் திருமண அழைப்பிதழ் கொடுப்பார்கள். மணமகன் பசுக்களை வரதட்சணையாக பெண்ணுக்கு கொடுத்து திருமணம் செய்துகொள்வான். திருமணத்தில் குளிர் பானங்கள் மட்டுமே வழங்குவார்கள். அதுவே யாராவது இறந்தால் அன்று விதம் விதமாக சமைத்து விருந்து படைப்பார்கள். இங்குள்ள மாசாயி இனத்தவர்கள் மாட்டின் இரத்தத்தைக் குடிப்பார்கள்.

சேமிப்பு என்பது அறவே இல்லை. சம்பாதிக்கும் பணத்தை கேளிக்கைகளில் செலவழித்து விடுவார்கள். இங்கு வங்கிகள் மிகக் குறைவு.

இதையும் படியுங்கள்:
உணவகத்தில் தட்டில் மீதம் வைத்த இளைஞர்களுக்குக் கிடைத்த அதிர்ச்சி தண்டனை!
டான்சானியா ஷின்யன்கா - Tanzania travelogue

விடுமுறை நாட்களில் அருகில் உள்ள ஏரிகள், மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருவோம். குஜராத்திகள் வணங்கும் ஜாலாராம் பாபா கோயில் இங்கு உள்ளது. கோயிலில் பஜனைகள், ஹோமங்கள் நடைபெறும். முக்கிய பண்டிகைகளான தசரா, தீபாவளி, குஜராத்தி புத்தாண்டு தினம் ஆகியவை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

ஷின்யன்காவில் இருந்த அந்த இனிமையான இயற்கை சூழலில் இருந்த நாட்கள் மறக்க முடியாத ஒன்று.