ஆடிக்கிருத்திகை: ஆகஸ்ட் 6-ம் தேதியா? 7-ம்தேதியா? குழப்பம் வேண்டாம், சரியான விரத நாள் இதோ!

ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானை வேண்டி, விரதம் இருப்பது மிக விரைவாக பலனை தரும்.
ஆடிக்கிருத்திகை 2026
aadi krithigai worshipAI Image
Updated on

ஆடிக் கிருத்திகை என்பது முருகப்பெருமானுக்கு உகந்த சிறப்பான விரத நாளாகும். இது தமிழ் மாதமான ஆடி மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறும்.

கார்த்திகை என்பது முருகனின் பெயர்களுள் ஒன்றான கார்த்திகேயன் என்ற பெயரை குறிக்கும். அதுவே காலப்போக்கில் கிருத்திகை என்று மாறியுள்ளது. கிருத்திகை முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்த நாளாக இது நம்பப்படுகிறது. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் விதமாக இந்த நாள் வழிபடப்படுகிறது. அறுபடை வீடுகளில் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

இந்த ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை 2026 திருவிழா வரும் ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 7 ஆகிய தேதிகளில் வருகிறது. கிருத்திகை நட்சத்திரம் தொடங்கும் நேரத்தைப் பொறுத்து இந்த இரண்டு நாள்களும் பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது.

ஆடி மாதம் முழுவதுமே அம்மனுக்கு மிகவும் விசேஷமான நாட்களாக கருதப்பட்டாலும் முருகப்பெருமானுக்கும் ஆடி மாதம் விசேஷமாக கருதப்படுகிறது. முருகப் பெருமானுக்கு கிருத்திகை, தைப்பூசம், தை கிருக்திகை, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் போன்ற நாட்கள் விசேஷகமாக கொண்டாடப்பட்டுகிறது.

அதிலும் முருகனின் முக்கிய விசேஷ நாட்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தைக்கிருத்திகையை விட ஆடிக் கிருத்திகை சிறப்பு வாய்ந்தது. அதுவும் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானை வேண்டி, விரதம் இருப்பது மிக விரைவாக பலனை தரும்.

அப்பேர்ப்பட்ட ஆடிக்கிருத்திகை இந்த ஆண்டு இரண்டு நாட்கள் ஒன்றுப்பட்டு வருவதால் எந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அதாவது ஆடிக்கிருத்திகை ஆகஸ்ட் 6-ம்தேதி இரவு 6.19 மணிக்கு தொடங்கி மறுநாள் ஆகஸ்ட் 7-ம்தேதி மாலை 5.52 மணிக்கு நிறைவடைகிறது. ஆகஸ்ட் 6ம் தேதியன்று மாலைக்கு பிறகே கார்த்திகை நட்சத்திரம் தொடங்குகிறது. ஆனால் ஆகஸ்ட் 7ம் தேதி அன்றுதான் நாள் முழுவதும் கார்த்திகை நட்சத்திரம் உள்ளது. அதனால் முருகப்பெருமானுக்கு விரதம் அனுஷ்டிப்பவர்கள் ஆகஸ்ட் 7ம் தேதியை தான் ஆடி கிருத்திகையாக எடுத்துக் கொண்டு பக்தர்கள் விரதம் கடைபிடிக்க வேண்டும்.

இந்த ஆண்டு ஆடி வெள்ளியில் ஆடிக் கிருத்திகை விரதம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. இந்த நாளில் அம்மன் மற்றும் முருகனின் அருளை பெற விரதம் இருந்தால் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். முடிந்தவர்கள் முருகனுக்கு பால்குடம் எடுக்கலாம்.

மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் விசேஷமானதாகும். பொதுவாக குழந்தை பாக்கியம், வேலை, திருமணம் ஆகியவற்றிற்காக முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்பவர்கள் கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

ஆடிக்கிருத்திகை 2026
ஆடிக்கிருத்திகை 2026AI Image

அதிலும் ஆடிக் கிருத்திகையன்று விரதம் இருந்தால், எல்லாவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும்.

உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள், பிரச்னைகள் அனைத்திற்கும் உடனடித் தீர்வு கிடைக்க, முருகப் பெருமானை அன்றைய தினம் தவறாமல் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். ஆடிக்கிருத்திகை நாளான்று அதிகாலையில் எழுந்து நீராடிய பின்னர் வீட்டையும், பூஜை அறையையும் முழுமையாகத் துடைத்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பூஜையறையில் முருகப் பெருமானின் திருவுருவப் படத்திற்குப் செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து, முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறுகோண கோலம் இடவேண்டும்.

பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பழங்களை நிவேதனம் வைத்து, பூஜையறையில் அமர்ந்து உணவு, நீர் என எதுவும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை மனமொன்றி படிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆடி கிருத்திகை தினத்தில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும் சில முருகன் கோயில்கள்!
ஆடிக்கிருத்திகை 2026

விரதத்தைக் காலையில் தொடங்கி அன்றைய நாள் முழுவதும் ‘ஓம் முருகா ஓம்’ அல்லது ‘ஓம் சரவணபவ ஓம்’ என்ற மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும். மாலை 6 மணிக்குப் பூஜை அறையில் முருகப்பெருமானுக்குச் சர்க்கரை பொங்கல், பால், பழம், பஞ்சாமிர்தம் நிவேதனமாக வைக்கலாம்.

இறுதியாகப் பெருமானுக்குத் தீப தூப, கற்பூர ஆராதனைக் காட்டி பூஜையை நிறைவு செய்து, இறைவனுக்கு நிவேதனமாக வைத்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

ஆடிக்கிருத்தை அன்று உங்கள் வேண்டுதல்களை முருகப்பெருமானிடம் மனமுருகிச் சொல்லி, கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து முருகப்பெருமான் வழிபாடு மேற்கொள்வது பல மடங்கு பலனைத்தரும்.

அதேபோல் குழந்தை வரம் வேண்டுபவர்கள் ஆடிக் கிருத்திகையில் கார்த்திகை விரதம் இருக்க துவங்கி, தை கிருத்திகையில் நிறைவு செய்யவேண்டும். இப்படி விரதம் இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
ஆடிக் கிருத்திகை விரதம் - ஒரு சூப்பர் பவர்!
ஆடிக்கிருத்திகை 2026

ஆடிக் கிருத்திகை நாளில் விரதம் இருப்பவர்கள் அசைவ உணவுகள் உண்பது, கோபப்படுவது மற்றும் பகலில் தூங்குவது போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com