நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தரும் ஆயுஷ் ஹோமம்: எப்போது, எப்படி செய்ய வேண்டும்?

நோய்கள் தீர்ந்து உடலும் மனமும் பலம்பெற போதாயனார் கூறும் பூரண ஆயுள் பரிகாரத்தின் அற்புதப் பலன்கள்!
ஆயுஷ் ஹோமம்- Ayush Homam Benefits
ஆயுஷ் ஹோமம்- Ayush Homam Benefits
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on: 

ஆயுள், ஆரோக்கியம், சௌபாக்கியம் கிடைக்கவேண்டும் என ஒவ்வொரு முறை கடவுளை வேண்டும்போதும் ஆயுளை முதன்மையானதாக வைத்தே வழிபடுகிறோம். பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆயிரம் பிறைகளைக் கண்டு பேரன், பேத்தி சகிதமாக அறுபதாம் கல்யாணம், உக்ரரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் செய்து வாழ்க்கையை பூர்த்தி செய்து ஆனந்தம் அடையவேண்டும் என்பது ஒவ்வொருவரின் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் பூரண ஆயுள் கிடைக்க செய்யப்படும் ஆயுஷ் ஹோமம் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஆயுஷ் ஹோமம் செய்யப்படுவதன் காரணம்

ஞான நூல்கள் ஒருவரது ஜனன கால ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் ஸ்தான பலன்களையும், அடிப்படையில் ஆயுள் பலத்தை அறிந்து உரிய வழிபாடுகளை செய்யவேண்டும் என கூறுகின்றன.

பழங்கால ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதை, "எவ்வளவு பெரிய காரியத்தை செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி! உடம்பை மட்டும் பாதுகாக்க மறக்க கூடாது என அறிவுரை கூறியுள்ளது. அந்த வகையில் ஆயுளை காக்கவும், உடலை காக்கவும் சிறந்த வழிபாடு ஆயுஸ் ஹோமம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுஷ் ஹோமம் குறித்து போதாயனார் கருத்து

மருந்துகளால் தீர்க்கப்படாத நோய்களிலிருந்து விடுபடவும், சொல்ல முடியாத தீராத மனவேதனைக்கு தீர்வாகவும், தற்போதைய நிலையை விட மேன்மையான சுகமான வாழ்க்கையை பெறவும், ஆயுள் தேவதையின் அருளால் உடல் மற்றும் மனநலம் பெற்று வாழவும், உடல் ஆரோக்கியம் பெற்று ஆயுளை அபிவிருத்தி செய்யவும், திதி, வார, நட்சத்திர, யோக கரணங்களால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாகவும் ஒருவரது ஜென்ம நட்சத்திர நாளில் ஆயுஷ் ஹோமத்தை செய்யவேண்டும் என விளக்கம் அளித்துள்ளார்.

ஆயுஷ் ஹோமம்- Ayush Homam Benefits
ஆயுஷ் ஹோமம்- Ayush Homam BenefitsImage credit: Gemini

ஆயுஷ் ஹோமம் செய்வது எப்போது?

அவரவர் வசதியை பொறுத்து ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திர நாளில் ஆயுஷ் ஹோமம் செய்வது விசேஷமாக கருதப்படுகிறது. வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் வருடத்திற்கு ஒருமுறை அவரவர்களது ஜென்ம நட்சத்திர நாளில் அல்லது உடல் நலிவுற்றால் ஆயுஷ் ஹோமம் செய்து வழிபடுவது சிறந்தது.

முக்கியமாக 60-ம் கல்யாணம், உக்ரரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் போன்ற வாழ்வின் முத்தான தருணங்களில் ஆயுஷ் ஹோமம் செய்வது சிறப்பானதாகும்.

குழந்தைகளுக்கு ஆயுஷ் ஹோமம்

குழந்தை பிறந்த பிறகு ஒரு வருடம் கழித்து அடுத்த வருடமான `அப்த பூர்த்தி`யில் முதல் ஹோமமாக குழந்தையின் பெயரில் ஆயுஷ் ஹோமம் செய்வார்கள். ஒரு வயது வரை குழந்தையை கடவுள் காப்பாற்றுவார் என்பது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கையாகும்.

ஆயுஷ் ஹோமத்தின் முக்கிய அம்சங்கள்

* ஆயுஷ் ஹோமத்தை ஆரம்பிக்கும்போது மார்க்கண்டேயனை நினைத்து பிரார்த்தனை ஆரம்பிக்கவேண்டும்.

* `போதாயனரிஷி` ஆயுளை விருத்தி கேட்பதற்காக செய்யப்படும் ஆயுஷ் ஹோமத்தின் மந்திரங்களை உருவாக்கினார்.

* உலகத்திற்கே அம்மா அப்பாவாக விளங்கும் பார்வதி,பரமேஸ்வரனை திருப்தி செய்வதே ஆயுஷ் ஹோமத்தின் முக்கியமான அம்சமாகும்.

இதையும் படியுங்கள்:
நவராத்திரி கொலு: பொம்மைகளை படிமுறையாக அடுக்குவது ஏன்? ஒளிந்துள்ள ஆன்மீக அறிவியல்!
ஆயுஷ் ஹோமம்- Ayush Homam Benefits

கரு உருவாகி, நல்ல முறையில் வளர்ந்து, உரிய சமயத்தில் உலகைப் பார்த்து அழகோடும், அறிவோடும், ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளுடன் வாழ வைப்பது இறைவனின் செயலாகும். அந்த இறைவனுக்கு நன்றி கூறுவதோடு ஆயுளை பலமாக்கிக்கொள்ள ஆயுஷ் ஹோமம் செய்யப்படுகிறது. இதனால் இறைவன் மகிழ்ச்சி அடைந்து குழந்தையின் ஆயுளை அதிகரிப்பார். அந்த வகையில் ஆயுஷ்ய சூக்த மந்திரங்கள் இறைவனை புகழ்ந்து நன்றி தெரிவிக்கின்றன.

ஆயுள் நீட்டிப்பு செய்யும் இரண்டு வரி ஆயுள் தேவதை பிரார்த்தனை!

ஆயுர்தேஹி தனம்தேஹி வித்யாம்தேஹி மகேஸ்வரி

சமஸ்தம் அகிலான்தேஹி தேவிமே பரமேஸ்வரி

என்ற ஆயுள் தேவதையின் மந்திரத்தை அவரை மனதில் நினைத்துக்கொண்டு தினமும் கூறினால் ஆயுஷ்ய ஹோமம் செய்த அளவு பலன் கிடைக்கும்.

ஆயுள், செல்வத்தை கொடுப்பதோடு தவறான வழியில் செல்வத்தை செலவழிக்காமல் இருக்க நல்ல வழிகளை அறிந்துகொள்ள அறிவைக்கொடு என்ற கருத்துள்ள மேற்கூறிய பாடலை தினமும் உச்சரித்து வந்தால் நூற்றாண்டு காலம் நலமாகவும் வளமாகவும் வாழ சகல தேவதைகளும் அருள்புரிவார்கள்.

இதையும் படியுங்கள்:
பரம்பொருள் என்பது என்ன? பஞ்சபூதங்களின் ரகசியமும் செயற்கை நுண்ணறிவின் எழுச்சியும்!
ஆயுஷ் ஹோமம்- Ayush Homam Benefits
logo
Kalki Online
kalkionline.com