பார்வதியை விடுத்து சிவனை மட்டும் வழிபட்ட பிரிங்கி முனிவர்: மூன்று கால் பெற்ற சுவாரசிய பின்னணி!

சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்திய கைலாயத்தின் திருவிளையாடல்.
பிரிங்கி முனிவர் - Bhringi Sage
பிரிங்கி முனிவர் - Bhringi Sage
Updated on

சிவபக்தரான பிரிங்கி முனிவர், பார்வதி தேவியை வணங்க மறுத்து சிவனை மட்டுமே சுற்றி வணங்க முயன்றபோது, சக்தியை ஏற்காத பக்திக்கு பார்வதி சாபம் வழங்குகிறார். உடல் வலிமை இழந்த முனிவருக்கு சிவன் மூன்றாவது காலை அருளி மீண்டும் நிலை நிறுத்துகிறார். இதனால் கணவன்–மனைவி, சிவன்–சக்தி பிரிக்க முடியாத புனித உறவென்று புரிந்த முனிவர், தன் ஆணவத்தை துறந்து சிவசக்தி ஒருமைப்பாட்டை போற்றுகிறார்.

பிரிங்கி முனிவர் இவர் தீவிரமான சிவபக்தர் ஆவார். இவர் சிவபெருமானை மட்டுமே வணங்கி மற்ற தெய்வங்களை வணங்கக் கூடாது என்ற வைராக்கியம் கொண்ட முனிவர் பிரிங்கி முனிவர்.

ஆனால் சிவபெருமானுக்கு அருகில் இருக்கும் பார்வதி தேதியை வணங்கமாட்டார். முனிவர் இதை வழக்கமாகவே வைத்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். இதனால் பார்வதிதேவி மிகுந்த மனவேதனை அடைந்திருந்தார் முனிவருக்கு அவர் ஓர் பாடம் கற்றுத் தரவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்.

இதையும் படியுங்கள்:
பசுக்களின் கண்ணீர் துடைக்க கூடு விட்டு கூடு பாய்ந்த கைலாய சித்தர்! யார் இந்த திருமூலர்?
பிரிங்கி முனிவர் - Bhringi Sage

அதேபோல் ஒரு நாள் பிரிங்கி முனிவர் கைலாயத்தில் சிவபெருமானை வணங்க சென்றிருந்தபோது அவர் சிவபெருமானை மட்டுமே வளம் வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் . இதனை அறிந்த பார்வதி தேவி சிவபெருமானின் உடல் உடன் இறுக்கமாக அமர்ந்துகொண்டார்.

இதனைப் பார்த்த பிரிங்கி முனிவர் ஒரு வண்டு உருவம் எடுத்து சிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் இருக்கும் சிறு இடைவெளியில் சிவனை மட்டுமே மூன்று முறை வலம் வந்தார். இந்த நிகழ்வை பார்த்து கடும் கோபம் கொண்ட பார்வதி தேவி கணவன் மனைவியை பிரித்துப் பார்க்கும் உன்னுடை எண்ணத்தை கண்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன் சிவனும் சக்தியும் ஒன்று என்று அறியாத உன்னுடைய பக்திக்கு நான் ஒரு சாபம் விடுகிறேன் சக்தியின் அம்சத்தை ஏற்க மறுத்த நீ "சக்தியினால் கிடைக்கும் உடல் வலிமை இல்லாமல் போவாய்" என்று பார்வதி தேவி பிரிங்கி முனிவருக்கு சாபம் விட்டார்.

பிரிங்கி முனிவர் - Bhringi Sage
பிரிங்கி முனிவர் - Bhringi SageAI Image

சாபத்தை பெற்ற அந்த ஜனமே பிரிங்கி முனிவரின் உடலில் இருக்கும் சதை மற்றும் ரத்தம் இல்லாமல் அவர் எலும்பு கூடாக மாறினார். நிற்கக்கூட முடியாமல் அவர் எலும்புக்கூடுடன் தரையில் விழுந்தார். அந்த ஜனமும் அவர் சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான் மீது பிரிங்கி முனிவர் கொண்ட பக்தியினால் சிவபெருமான் அவருக்கு ஊண்டுகோலாக மூன்றாவது காளை கொடுத்தார்.

பிரிங்கி முனிவர் அந்த மூன்றாவது காலைக் கொண்டு எழுந்து நின்றார். அந்த நொடியே பிரிங்கி முனிவர் தன்னுடைய ஆணவத்தை விடுத்து சிவனும் சக்தியும் ஒன்று என்று உணரத்தொடங்கினார். பிரிங்கி முனிவர் பார்வதி தேவியிடம் மன்னிப்பு கூறினார். கணவன் மனைவி என்ற உறவே ஏழு ஜென்மங்களுக்கும் தொடரக்கூடிய புனிதமான உறவாகும்.

இதையும் படியுங்கள்:
ஒரு மாதம் ஆண், ஒரு மாதம் பெண்! சிவபெருமான் கொடுத்த விசித்திர சாபத்தின் பின்னணியில் உள்ள மர்மம்?
பிரிங்கி முனிவர் - Bhringi Sage

எம்பெருமானையும் பார்வதி தேவியையும் பிரித்துப் பார்த்த என்னுடைய சிந்தனையை இந்த நொடியில் இருந்து விட்டொழிக்கின்றேன். சிவனும் சக்தியும் ஒன்று என்று உணர்ந்த பிரிங்கி முனிவர் சிவசக்தி வழிபாடு சிறந்தது என்று உணர்ந்தார்.

இந்த ஆன்மீக வரலாற்றை வாசிப்பதன் மூலம், சிவனும் சக்தியும் ஒன்றிணைந்த வாழ்வின் தத்துவத்தையும், கணவன்-மனைவி பந்தத்தின் புனிதத்தையும் உணர்ந்து உங்கள் வாழ்க்கையில் ஆன்மீகத் தெளிவைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com