சந்தியா வந்தனம் செய்வதின் மகத்தான பலன்கள்!

சந்தியா வந்தனம்...
சந்தியா வந்தனம்...
Updated on

1. முதலில் விடியற்காலையில் எழுந்திருக்கும் பழக்கம் உண்டாகும். 

2. இதனால் உடல் ஆரோக்கியம், புத்தி தெளிவு உண்டாகும். இக்கருத்தை தர்மசாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

3. ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் இதே கருத்தை வலியுறுத்துகின்றன. 

4. காலையில் ஸ்னானம் செய்வதால் புத்துணர்ச்சி உண்டாகும். ஆசமனம் செய்வதால் ஜலத்தினால் உண்டாகும் ஆரோக்கிய குறைவு நீங்கும்.

5. மார் ஜானம் செய்வதால் நீரைப் பற்றிய சிந்தனையும் அதை மாசுபடுத்தக் கூடாது என்ற எண்ணமும் ஏற்படும். அது வாழ்வாதாரம் என்பதும் உணரப்படும். 

6. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான ஞானம் பிறக்கும். 

7. நியாசங்கள் செய்வதால் உடலில் பலவிதமான நோய்கள் வராமல் ஆரோக்கியமாக வாழலாம். 

8. தினமும் சந்தியா வந்தனம் தவறாமல் செய்யும் பலர் 70,  80 வயது தாண்டியும் ஆரோக்கியத்தோடும் திடகாத்திரத்திரமாக  வாழ்ந்து வருவதை காண முடிகிறது.

9. விரல்களை தடவுவதால் தலைவலி, காது வலி போன்ற நோய்கள் தீரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றன. 

10. சந்தியா வந்தனம் செய்வதால் முழுமையான ஆயுளும் நல்ல புத்தியும், புகழும், செல்வமும் அடையலாம். பிரம்ம ஞானம் எனும் இறைவனை அடையும் தன்மையும் உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
அழகர் மலையின் அதிசய நாவல் மரம் தெரியுமா?
சந்தியா வந்தனம்...

11. யாகங்கள் செய்வதால் செல்வம் உண்டாகும். தியாகம் செய்வதால் புகழ் அடையலாம். இவற்றை சந்தியா வந்தனம் செய்வதாலேயே அடைய முடியும்.

12. எமனை துதிப்பதால் மரண பயம் நீங்கும்.  கண்ணெதிரில் காணும் சூரியனிடம் தெய்வங்கள் இருக்கின்றன என்ற உணர்வால் பலம் பெறலாம்.

13. பிரணாயாமம் இதுவும் ஒரு வகையில் யோகப் பயிற்சியாகும்.  பிராணாயமம் செய்வதாலேயே மனோபலம் உண்டாகும். வீண் கோபம் ஆத்திரம் வராது. முகப்பொலிவு கூடும். மனமது செம்மையானால் மற்றது யாவும் கைகூடும்.

logo
Kalki Online
kalkionline.com