குரு பூர்ணிமா 2026: வாழ்வின் இருளை அகற்றும் அற்புத ஆன்மீக நாள்!

சிவபெருமான் முதல் புத்தர் வரை; இந்த புனித நாளின் அரிய பின்னணியும் சிறப்புகளும்!
குரு பூர்ணிமா - Vyasa Purnima
குரு பூர்ணிமா - Vyasa PurnimaAI Image
Updated on

குரு பூர்ணிமா ஜூலை 29 அன்று கொண்டாடப்படும் இந்து, புத்த மரபுகளின் முக்கிய ஆன்மீக திருநாளாகும். இருளை நீக்கி ஒளி தரும் குருவை, பௌர்ணமி சந்திரனைப்போல அறியாமையை அகற்றும் தெய்வீக வழிகாட்டியாக போற்றுகிறது. சிவபெருமான் ஆதி குருவாக சப்தரிஷிகளுக்கு ஞானம் அருளிய பௌர்ணமி நாளும், வேத வியாசரின் பிறந்தநாளும், புத்தரின் முதல் போதனையும் இந்நாளோடு இணைகின்றன.

குரு என்பவர் கடவுளின் அவதாரமாகத் திகழ்கிறாரென்றே சொல்லலாம். குரு என்றால் வெறும் ரிஷிகளையும், முனிவர்களையும், பண்டிதர்களையும், மற்றும் ஆசிரியர்களையும் தான் குறிக்கும் என்று கிடையாது. நம்முடைய நலன் கருதி நல்லதை எடுத்துரைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் நம்முடைய குரு தான்.

நம்முடைய இந்து கலாச்சாரத்தில் இந்த குருவை கடவுளுக்கும் மேலாகவே வைத்திருக்கிறார்கள். ஏனென்றால், இறை உணர்வைத் தேடுபவர்களுக்கு ஒரு குரு தான அதற்கான ஆன்மீகப் பயிற்சிகளைக் கற்பிப்பதோடு மட்டுமல்லாமல் அதை பெற்றும் தருகிறார், மேலும் கடவுளை உணரவும் உதவுகிறார்.

ஒரு குருவின் கடனைத் திருப்பிச் செலுத்துவது என்பது இயலாத காரியம், ஆனால், நாம் குருவுக்குப் பணிவுடன் நன்றி செலுத்தி அதை நிறைவேற்றலாம்.

குருவிற்கு நன்றி செலுத்தும் தினத்தை ஏன் பூர்ணிமா என்று வைத்திருக்கிறார்கள்?

குரு என்றால் இருளை நீக்கி ஒளியைத் தருபவர் என்று பொருளாகும். பௌர்ணமி அன்றும் இருள் நீங்கி பிரகாசம் அடைகிறது. ஆகவே இந்த பௌர்ணமியே ஒரு முக்கிய குறியீடாக நம் வாழ்வில் அமைகிறது. பௌர்ணமி அன்று எப்படி சந்திரன் பிரகாசித்து, இருளை அகற்றி ஒளிரச் செய்கிறதோ அதைப் போலவே, ஒரு உண்மையான குருவும் நம்முடைய வாழ்வில் உள்ள அறியாமை என்னும் இருளை அகற்றி ஒளியை தருகிறார். ஆகவேதான் அவருக்கும் நன்றி செலுத்தும் தினத்தை பூர்ணிமா என்று வைத்தார்கள்.

இதையும் படியுங்கள்:
வைகாசி விசாக விரத பலன்கள்: ஞானமும் நீண்ட ஆயுளும் தரும் ஆறுமுகனின் அற்புத வழிபாடு!
குரு பூர்ணிமா - Vyasa Purnima

புராணங்களின் படி குரு பூர்ணிமா உருவான கதை:

இந்துப் புராணங்களில், சிவபெருமான் ஆதி குருவாக அதாவது ஆதி அல்லது முதல் ஆசிரியராக கருதப்படுகிறார்.

இமயமலையில் அவரை தரிசிக்க பல்லாயிர கணக்கான மக்கள் வந்த போதிலும், வெறும் ஏழு சாதகர்கள் தான் சிவபெருமானோடு தங்கினார்கள். சிவபெருமான் அவர்களை ஏற்றுக்கொள்ளும் நாளுக்காக காத்துக் கொண்டே இருந்தார்கள். கிட்டதட்ட 84 ஆண்டுகள் தீவிரக் பயிற்சிக்கு பிறகு, ஒரு பௌர்ணமி நாளில் சிவன் அவர்களின் குருவாக மாறத் தீர்மானித்தார். இந்த நாளைத் தான் நாம் இப்போது குரு பூர்ணிமா என்றழைக்கிறோம்.

இந்த ஏழு ஞானிகளும் பிற்காலத்தில் சப்தரிஷிகள் என்று அழைக்கப்பட்டார்கள். இந்த நாளில், சிவன் தனது புனிதமான ஞானத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது, ஆதி குரு பிறந்தார். இதுவே குரு பூர்ணிமாவின் தோற்றத்தைக் குறிக்கிறது.

வேத வியாசரின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், இந்த குரு பூர்ணிமா வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது.

குரு பூர்ணிமா - Vyasa Purnima
குரு பூர்ணிமா - Vyasa PurnimaAI Image

வியாசர்தான் ஆன்மீக அறிவை நம் அனைவருக்கும் கிடைக்கச் செய்தார். இந்த நாளில் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு கோவில்களில் வியாச பூஜையும் நடைபெறுகிறது.

அடுத்தபடியாக, புத்த மதத்திலும், இந்த குரு பூர்ணிமா முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சாரநாத்தில் புத்தர் தனது முதல் போதனையை வழங்கிய நாளை நினைவு கூறும் வகையில், கௌதம புத்தருக்கு மரியாதை செலுத்தும் விதமாக குரு பூர்ணிமா கொண்டாடப் படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஏகாதசி விரதம் பிறந்த கதை: முரனை அழித்த ஓங்கார சக்தியும் விட்டலனின் அருளும்!
குரு பூர்ணிமா - Vyasa Purnima

நாமும் நமக்கு ஒளியை தந்த நம்முடைய குருமார்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நல்லெண்ணத்தோடும் நற்பண்போடும் வாழ்ந்து அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல் வாழ்வோமாக!

இந்த வழிகாட்டியின் மூலம் குரு பூர்ணிமாவின் உண்மையான ஆன்மீகத் தன்மையைப் புரிந்து கொண்டு, உங்கள் வாழ்வில் அறிவையும் தெளிவையும் பெற்று, உங்களை நல்வழிப்படுத்தும் குருமார்களுக்குச் சரியான முறையில் நன்றி செலுத்தும் நற்பண்பை அடைவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com