செய்வினை கோளாறு கண்டறிவது எப்படி? குலதெய்வ கட்டு உடைக்கும் ஆன்மீக ரகசியங்கள்!

தொடர் தோல்விகளுக்கும் உடல்நலக் குறைபாட்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் சக்திவாய்ந்த பரிகாரங்கள்.
செய்வினை கோளாறு - Kuladeivam Worship
செய்வினை கோளாறு - Kuladeivam Worship
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on: 

ஒருவரின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், தீமை செய்யவும் ஏவப்படும் பில்லி சூனியம் செய்வினை போன்ற எதிர்மறை ஆற்றல்களை செய்வினை கோளாறு என ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. மருத்துவர்கள் கண்டறிய முடியாத மர்ம நோய்கள் மற்றும் தொடர்ச்சியான உடல்நல குறைபாடுகள் தொழில் அல்லது வியாபார நஷ்டம் பண இழப்பு குடும்பத்தில் காரணம் இல்லாத சண்டை சச்சரவுகள் மன அமைதி இல்லாமை மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்றவை இந்த செய்வினையின் அறிகுறிகளாக உள்ளது.

சிலருக்கு துர் சொப்பனம், கெட்ட கனவுகள், காரணம் இல்லாத பயம் இதன் அறிகுறிகளாக உள்ளது. செய்வினை தோஷங்களை நீக்கும் சக்தி குலதெய்வத்திற்கு உண்டு. குலதெய்வ வழிபாடு தடைகளை தகர்க்கும். எனவே ஒருவருக்கு செய்வினை வைப்பவர்கள் முதலில் அவர்களது குலதெய்வத்தை கட்டிவிடுவார்கள்.

செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழம் தீபம் ஏற்றி வழிபடலாம். தினமும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது ஆஞ்சநேயர் பைரவர் வழிபாடு ஆகியவை நல்ல பலன்களை தரும். இவை தீயசக்திகளை விரட்டி விடும்.

தினமும் காலை மாலை திருநீர் அணிவது மற்றும் வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளிப்பது போன்றவை தீயசக்திகளை விரட்டி அடிக்கும்.

ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் பலன் தராது. குலதெய்வம் அருள் இல்லை என்றால் எதுவும் செய்யமுடியாது. எனவே செய்வினை செய்பவர்கள் குல தெய்வத்தை முதலில் கட்டி விட்டு துஷ்ட சக்திகளை ஏவி விடுவது எந்திரத்தில் சக்கரம் வரைந்து சுடுகாட்டில் வேலைகள் செய்து பலவகை பிரச்னைகள் இதன் மூலம் உருவாகலாம்.

செய்வினை கோளாறு - Kuladeivam Worship
செய்வினை கோளாறு - Kuladeivam Worship

இவ்வாறு செய்யும்போது வீட்டில் கணவன் மனைவி சண்டை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது வீட்டில் நிம்மதி இல்லாமல் இருப்பது பொருட்செலவு தீராத நோய்கள் போன்றவை ஏற்படும். தீராத வலி மனக்குழப்பம் கெட்ட கனவுகள் வரும். எதிரிகள் தொல்லை கடன் சுமை பசி தூக்கம், இல்லாமல் இருப்பது எந்த வேலையையும் நிம்மதியாக செய்ய முடியாது தொழிலில் நஷ்டம் ஏற்படும் இவை பில்லி சூனியம் செய்வினைகளின் அறிகுறிகள் ஆகும்.

குலதெய்வம் கட்டப்பட்டு இருந்தால் நமக்கு சாதகமாக எதுவும் நடக்காது. குலதெய்வம் கூட ஒதுங்கி நிற்கும். குலதெய்வம் கட்டை உடைக்காமல் எதுவும் செய்ய முடியாது.

இத்தகைய பில்லி சூனியம் 12 வருடம் வரை பவர் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கெல்லாம் பரிகாரம் குலதெய்வ கட்டை நீக்கிவிட்டு பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். செய்வினை என்பது பண்டைய காலம் தொட்டே இருந்து வருகிறது.

துஷ்ட சக்திகளை ஏவி விடுவது எந்திர தகடுகள் மூலம் உச்சாடனம் செய்து வைப்பார்கள். செய்வினை பழைய காலத்தில் மட்டுமல்ல தற்போதும் இருந்து வருகிறது. இதற்கு வீட்டிலேயே சில எளிய பரிகாரங்கள் மூலம் செய்யலாம். ஒரு மண்பானையில் சில துளசி இலைகளை போட்டு மூடி வைக்கவேண்டும். வீட்டில் செய்வினை இருந்தால் இலைகள் வாடிவிடும். அவ்வாறு இல்லை என்றால் இலைகள் வாடாமல் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வீட்ல ஊதுபத்தி ஏத்துற பழக்கம் இருக்கா? அப்போ இத மொதல்ல படிங்க!
செய்வினை கோளாறு - Kuladeivam Worship

எலுமிச்சை மாலையை அருகில் உள்ள துர்க்கை அல்லது காளிக்கு சமர்ப்பித்து அதில் இருந்து ஒரு பழத்தை எடுத்து வந்து வீட்டில் ஒரு பக்கத்தில் வைக்க வேண்டும். அந்தப் பழம் சில நாட்கள் கழித்து காய்ந்து போனால் பிரச்னை இல்லை. அந்த எலுமிச்சம் பழம் அழுகிப்போனால் தீயசக்திகள் இருக்கிறது என்பதை அறியலாம்.

செய்வினை உள்ளவர்கள் அருகிலுள்ள குளக்கரை அல்லது ஆற்றிற்குச் சென்று ஒரு எலுமிச்சையை எடுத்து தன் தலையை சுற்றி இடது புறமாக நீரில் வீசவேண்டும். செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி மணி முதல். 1:30 மணி வரை துர்க்கையை வழிபட்டால் இதற்கு தகுந்த நிவாரணம் கிடைக்கும். செய்வினை என்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது.

செய்வினை பாதிக்கப்பட்ட வீட்டில் கடல் நீரை தெளிக்கலாம்.

அவ்வாறு கடல் நீர் கிடைக்காதபோது தண்ணீரில் கல் உப்பை கரைத்து அதனை வீடு முழுவதும் தெளிக்கவேண்டும். இது ஒரு சிறந்த பரிகாரமாகும். செய்வினை கோளாறு உள்ளவர்கள் திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதரை வழிபாடு செய்யலாம். இந்த கோவில் செய்வினை கோளாறுகளை நீக்குவதற்காக உள்ள கோவிலாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சுகப்பிரசவம், மக்கட்பேறு அருளும் தமிழக அம்மன் கோவில்கள்: வழிபாட்டின் அதிசயங்கள்!
செய்வினை கோளாறு - Kuladeivam Worship

வெண்கடுகு, நாய் கடுகு, மருதாணி விதை, அருகம்புல் பொடி, வில்வ இலை பொடி, வேப்ப இலை பொடி இவற்றுடன் சாம்பிராணி சேர்த்து செவ்வாய் வியாழக்கிழமைகளில் தூபம் காட்ட வேண்டும். மேற்கண்ட பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

இவ்வாறு செய்யும்போது வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் தீய சக்திகள் வெளியேறும் இந்த ஏழு பொருட்களும் தெய்வத்தன்மை உடையது.

logo
Kalki Online
kalkionline.com