

இசக்கி அம்மன் ஆலமரத்தடியில் எழுந்தருளி, ஆள் தாரை இசக்கியாக நாகர்கோவில் செட்டித்தெருவில் அருள் பாலிக்கும் வரலாறு இந்தக் கதையில் கூறப்படுகிறது. செட்டியாரால் வஞ்சிக்கப்பட்டு ஏழு ஜென்மங்களில் பழி வாங்கும் விதமாக பிறப்பெடுத்து, சிவபெருமானிடம் வரம் பெற்று, நாகராஜரின் உதவியுடன் செட்டியாரை கொன்றதும், கர்ப்பிணி மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்கி குழந்தையை வெளியே எடுத்து குடலை மாலையாக்கிக் கழுத்தில் அணிந்ததுமே கைக்குழந்தையோடு காட்சியளிக்கும் காரணமாக விளக்கப்படுகிறது.
இசக்கி அம்மன் சிவப்பு உடை உடுத்தி கையில் ஒரு குழந்தையை ஏந்தியபடி காட்சி தருகிறார். அவள் ஆலயத்தைச் சுற்றி பாலகள்ளு என்ற பெயரில் சில செடிகளைக் கிள்ளினால் வெள்ளை நிறத்தில் பால் வடியும் அதுவே இசக்கி அம்மன் உள்ளாள் என்பதற்கு அடையாளம். ஒரு தாயைப் போன்றவள் இசக்கி அம்மன்.
ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தலில் மக்கள் குறைதீர்க்கும் இசக்கியம்மன் கோவில் புகழ்பெற்றதது. குழந்தை வரம் அளித்து மக்கள் பிணிகளை இந்த அம்மன் களைகிறாள்.
இசக்கி அம்மன் வரலாறு
இந்த அம்மனைக்குறித்து 2 கதைகள் உள்ளன. ஒரு கிராமத்தில் அம்பிகா என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். சோம ஷர்மா அவள் கணவர். 2 குழந்தைகளும் உண்டு. ஒருமுறை அவர்கள் வீட்டில் இறந்து போனவர்களுக்கான சடங்கு நடந்தது. சோமசர்மா குளித்துவிட்டு வருவதற்காக நதிக்குச் சென்றார். அம்பிகா சமைத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளிடம் வயதான துறவி பிச்சை கேட்டார். சமைத்த உணவிலிருந்து அவருக்கு சிறிது கொடுத்தாள்.
அப்போது திரும்பி வந்த சோமசர்மா சடங்கு முடிவதற்கு முன்னரே அபசாரம் செய்துவிட்டாள் என்று கோபமுற்று மனைவியை குழந்தைகளுடன் அடித்துத் துரத்திவிட்டார். அழுதுகொண்டு சென்ற அவள் காட்டில் அமர்ந்துகொண்டாள்.
சோம சர்மா தன் தவறை உணர்ந்து அவளிடம் மன்னிப்பு கேட்க அவளைத்தேடி வந்தார். தூரத்தில் கணவர் வருவதைப் பார்த்த அவள் தன்னைக் கொல்ல வருகிறான் என எண்ணி தற்கொலை செய்துகொண்டாள். அங்கிருந்த யட்சிணிகளுடன் வாழ்ந்து இரத்தத்தைக் குடித்து தானும் யட்சிணியானாள் பின் சிவபெருமானின் ஆசியுடன் மனித உருவெடுத்து தன் குழந்தைகளை காப்பாற்றினார்.
முற்பிறப்பில் யட்சிணியாக இருந்ததால் அந்த இடத்திலேயே குடும்பத்தைக் காக்கும் தேவதையாக மாறினாள் குடும்பத்தைக் காப்பாற்றும்பவளாக இருந்ததால் இயக்கி என்ற பெயரைக் கொண்டாள். பிறகு காலப்போக்கில் இசக்கியானாள்.
இரண்டாவது கதை
இசக்கி அம்மன் மானிட உருவெடுத்து பூமிக்கு வந்தபோது அவளை வஞ்சித்துக் கொன்றுவிட்ட ஒரு செட்டியாரைப் பழி வாங்கும் விதத்தில் ஏழு ஜென்மத்திலும் பிறப்பெடுத்த தானே அவனை அழிக்க சிவனிடம் வரம் வேண்டினாள். ஆறு ஜென்மங்களிலும் அவளும் செட்டியாரும் பிறப்பெடுத்து ஆறு ஜென்மத்திலும் பல வழிகளில் அவரைக் கொன்றாள். ஏழாவது ஜென்மம் பிறந்தபோது இசக்கி காட்டில் சிவபெருமானைத் தேடினாள். அப்போது ஒரு சித்தரைத் கண்டாள்.
அவர் இசக்கிக்கு சிவபெருமானும் பார்வதியும் இருந்த இடத்தைக் காட்டினார் அதன்படி அவர்களிடம் சென்று வரத்தைப் பெற்றாள். அவளுக்குத் துணையாக பார்வதி நாகராஜரையும் அனுப்பி வைத்தாள். வழியில் ஒருவரைப்பார்த்த நாகராஜன் அவர்தான் செட்டியார் என அடையாளம் காட்டினார். இசக்கி அவரிடம் சென்று தனக்கு வேலை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டாள் அவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் இசக்கியை வேலையில் அமர்த்தினார்.
ஒருநாள் செட்டியார் வெளியே சென்றபோது அவனை நாகராஜனை அனுப்பி கொலை செய்தாள் இசக்கி. இசக்கி ஒருபெண் தெய்வமாகவே இருக்க வேண்டும் என்பதை ஊகித்து செட்டியாரின் மனைவி கணவன் இறந்த பின் தான் உயிர் வாழக்கூடாது என்று எண்ணி இசக்கியிடம் தன் வயிற்றில் உள்ள குழந்தையை வெளியே எடுத்து அவள் குடலை எடுக்கக் கூறினாள். அவள் வேண்டுகோளை ஏற்று அந்தப்பெண்ணினா குழந்தையை வெளியே எடுத்து அவள் குடலை மாலையாக்கி கழுத்தில் அணிந்து கொண்டாள்.
அவளே இசக்கி அம்மன் என்ற பெயருடன் ஒரு ஆலமரத்தடியில் ஏழுந்தருளி அருள் பாவித்து வருகிறாள். ஆள் தாரை இசக்கி அம்மனாக செட்டித்தெரு, நாகர் கோவிலில் அருள் பாலிக்கிறார்.. கிராம தேவதை ஆலயங்களில் இசக்கி அம்மன் சிலைகள் பெரும்பாலும் காணப்படும்.
இந்தத் தொகுப்பைப் படிப்பதன் மூலம் கிராமக் காவல் தெய்வமான இசக்கி அம்மனின் தோற்றப் பின்னணி, அவள் அருள்புரியும் முப்பந்தல் தலத்தின் மகிமை மற்றும் குடும்பத்தைக் காக்கும் தேவதையின் வழிபாட்டுச் சிறப்புகளைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.