

கேரளாவில் ஆண்டு முழுவதும் நீரால் சூழப்பட்ட கோவில் உள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் அரக்குப்பரம்பா என்ற இந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் சக்திவாய்ந்த கோவிலாகும். இந்து ஆன்மிகத்தில் ஒரு அரிய மாணிக்கமாகத் திகழ்கிறது இக்கோவில்.
இங்கு பிரதக்ஷிணம் பாதையும் கருவறையும் எப்போதும் நீரால் சூழப்பட்டிருக்கும். மலைக்கோவில், குகைக்கோவில், குடைவரைக் கோவில்கள் என இந்து மதத்தில் பல வழிபாடுகள் செய்யும் தலங்களில் இது தண்ணீர் கோவிலாகத் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.
இத்தலத்தில் ஒரு யோகி சிவபெருமானையும் பார்வதியை யும் ஒன்றாகக் கண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இக்கோவிலின் பிரதான தெய்வம் சுயம்புவாக தன் தோன்றியதாக அறியப்படுகிறது
சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வரர் உருவம் ஆண் பெண் சங்கமத்தில் ஒரு அற்புதமான அம்சமாகும். இந்த உருவம் பிரபஞ்சத்தில் ஆண் மற்றும் பெண் தத்துவங்களின் பிரிக்கமுடியாத தன்மையை வலியுறுத்தி ஆழ்ந்த தத்வார்த்த குறியீட்டைக் கொண்டுள்ளது.
சிவபெருமானின் இவ்வடிவத்திற்கு இக்கோவில் தன்னை அர்ப்பணித்த இருப்பது அதன் ஆன்மிக முக்கித்துவத்தை வெளிப்படுத்துகிறது.
பிரபஞ்சமே முரண்பட்ட ஆற்றல்களின் இணக்கமானக் கலவை என்று பக்தர்களை சிந்திக்க வைக்கிறது. இந்த அர்த்தநாரீஸ்வரர் ஆண்டு முழுவதும் நீர் சூழ்ந்து இருந்தாலும் வருடத்தில் ஒருநாள் சிவராத்திரி அன்று நீர்வற்றச் செய்யப்படுகிறது. சிவலிங்கத்தை நேரடியாக தர்சனம் செய்யும் வாய்ப்பை பக்தர்களுக்கு வழங்குவதால் இது பக்தியுடனும் உத்சாகத்துடனும் கொண்டாடப் படுகிறது.
இங்கு கொண்டாடப்படும் சிவராத்திரி வேறு எதனுடனும் ஒப்பிட முடியாத ஆன்மிக அனுபவமாகும். சிவபெருமானின் தெய்வீக ஒளியில் திளைத்து சிந்திக்கக்கூடிய தருணமாகும்.
தெய்வீக சடங்குகள்
மார்கழி மாதத்தில் மகம் நட்சத்திர நாளில் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கொடியேட்டு எனப்படும் விழா நடைபெறுகிறது. ஐந்தாம் நாளில் நடைபெறும் இரண்டும் சடங்கு கெண்டாட்டத்தின் விளைவைக் குறிக்கிறது.
ஜுன் முதல் ஜுலை மாதம் வரை வரும் மிதுன மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் மற்றொரு பெரிய நிகழ்வு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் மூன்றுநாள் களம் பாட்டு நடத்தப்படுகிறது. கேரளாவின் இந்தக் கோவிலில் பக்தர்கள் நேரடியாக ஈடுபடக்கூடிய ஜல அபிஷேகம் எனப்படும் புனிதப் சடங்கின் ஒரு பகுதியாக கோவிலில் வழிபடப்படும் மரியாதைக்குரிய தேவிகளுக்கு 1000குடங்கள் நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
காலப்போக்கில் கோவில் சிதிலமடைந்தது இறுதியில் கருவறை, பீடம், சிவலிங்கம் நமஸ்காரமண்டபம் அனைத்தும் பூமியில் புதைந்தன. 1983ம் ஆண்டில் மஞ்சேரி சிவசங்கர் மாஸ்டரின் தலைமையில் கோவில் வளாகத்தில் இருந்த காடுகள் அகற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. 2007ம் ஆண்டில் கோவில் புனரமைப்பு செய்யப்பட்டது.
இத்தலத்தில் உமாமகேஸ்வரி பூஜையும் நடைபெறுகிறது. இது திருமணம் தொடர்பான தடைகளை நீக்குவதாக கருதப்படுகிறது. ஆண் பெண் இருவருக்கும் நல்ல வரன்கள் அமைய இந்தப்பூஜை ஒரு பரிகாரமாகும் கருதப்படுகிறது. இக்கோவிலில் வழிபடப்படும் முக்கிய உப தெய்வங்கள்.
திருமந்திரம் குன்றில் அம்மா மற்றும் திருவளையநாடு பகவதி ஆகும். எங்கு பார்த்தாலும் பச்சை போர்வை போர்த்தியது போன்று காணப்படும்.
அர்த்தநாரீஸ்வரர் கருவறை மற்றும் சுற்றி வரும்பாதை நீர் சூழ்ந்து இருப்பதால் கண்களுக்கு குளிர்ச்சி விருந்து அளிக்கிறது. அனைவரும் அவசியம் தரிசிக்கவேண்டிய புண்ணியத்தலமாகும்.
இந்தக் கட்டுரையை முழுமையாக வாசிப்பதன் மூலம், கேரளாவின்hidden gem-ஆக விளங்கும் தண்ணீர் கோவிலின் வரலாறு, ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சிவராத்திரி நீர் வற்றும் அதிசயம் மற்றும் திருமணத் தடைகளை நீக்கும் ஆன்மிக வழிமுறைகளைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.