சித்தர்களின் ரகசிய கேசரி முத்திரை: மனித உடலை சிலையாக மாற்றும் லம்பிகா யோகம்!

மரணமில்லா பெருவாழ்வு பெற சித்தர்கள் கையாண்ட அரிய உள் யோகப் பயிற்சியின் ஆன்மீக அறிவியல்!
கேசரி முத்திரை - Khechari Mudra,
கேசரி முத்திரை - Khechari Mudra,
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ம்பிகா யோகம் அல்லது கேசரி முத்திரை (Khechari Mudra) என்பது சித்த மருத்துவத்திலும் யோகக் கலையிலும் மிக ரகசியமாகவும், உயர்நிலையாகவும் கருதப்படும் ஒரு உள் யோகப் பயிற்சியாகும். மானிட தேகத்தைச் சிலையாக மாற்றுவது மற்றும் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வது போன்ற ஆன்மீக சித்துகளுக்கு இந்த யோகமே அடிப்படையாகக் கூறப்படுகிறது. மனித உடலை அசையாத சிலை போல மாற்றும் ஆற்றல் கொண்ட, சித்தர்களால் ஆன்மீகப் பயிற்சிகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு மிகக் கடினமான மற்றும் ரகசியமான யோக முறை இது.

சமஸ்கிருதத்தில் லம்பிகா என்றால் 'மென்மையான அண்ணம்' (Soft Palate) என்று பொருள்.

லம்பிகா யோகம் என்றால் என்ன?

இந்த யோக முறையில் மனிதன் தன் நாக்கை உள்நோக்கி மடக்கி அண்ணத்தின் மேல் துவாரத்தில் பொருத்த வேண்டும். நாக்கின் நுனியால் அண்ணத்தின் உச்சிப்பகுதியைத் தொட்டு பிராண வாயுவை அதாவது மூச்சுக்காற்றை மேல் நோக்கி செலுத்தும் பயிற்சியாகும்.

இந்தப் பயிற்சியில் நாக்கை உள்நோக்கி மடித்து, அதன் நுனியை மேல் அண்ணத்தின் உள் துவாரத்தில் வைப்பார்கள். யோக நூல்களில் இது கேசரி முத்திரை அல்லது கேசரி யோகம் என்றும் அழைக்கப்படுகிறது.

'சிலையாக மாற்றுதல்' என்பதன் பின்னணியில் உள்ள அறிவியல் & ஆன்மீகம்:

சித்தர் மரபில் மானிட தேகத்தை சிலையாக மாற்றுவது என்பதன் உண்மையான அர்த்தங்கள்:

கேசரி முத்திரை - Khechari Mudra,
கேசரி முத்திரை - Khechari Mudra,Image credit: Gemini

ஜீவசமாதி நிலை:

சித்தர்கள் பல ஆண்டுகள் மூச்சையும், இதயத் துடிப்பையும் நிறுத்தி ஜீவசமாதி அடையும்பொழுது இந்த லம்பிகா யோகத்தின் மூலமே உடலை அழியாத ஒரு சிலை போன்ற நிலைக்குக்கொண்டு செல்கிறார்கள்.

பசி, தாகம் மற்றும் சுவாசமற்ற நிலை:

நாக்கை மேல் அண்ணத்தில் மடக்கிக் கொள்ளும் போது சுவாசம் முற்றிலும் ஒடுங்கிவிடும். இதனால் உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) நின்றுவிடுகிறது. தவளைகள், பாம்புகள், அரணை மற்றும் உடும்பு போன்ற சில உயிரினங்கள் இயற்கையாகவே குளிர்கால உறக்கத்தின் பொழுது (Hibernation) உணவின்றி கல்லாய் சமைந்து கிடப்பதைப் போன்ற நிலைதான் இது.

அமுத சக்தி (சோம ரசம்):

இந்த நிலையில் அண்ணப் பகுதியில் சுரக்கும் "அமிர்தம்" எனப்படும் திரவத்தை உறிஞ்சுவதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. இதனால் பசி, தாகம் மற்றும் தூக்கம் முற்றிலும் நீங்குகிறது. மூச்சுக்காற்றின் வேகம் குறைந்து, உடலின் இயக்கங்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் பொழுது ஒருவரது தேகம் வெளிப்புற பார்வைக்கு ஒரு கல் சிலை போல அசையாமல் மாறிவிடுகிறது. சித்தர்கள் எப்போதும் இளமையுடனும், நோயற்ற வாழ்வுடனும், நீண்ட காலம் ஜீவசமாதி நிலையிலும் வாழ இந்த காயகல்ப யோக முறையைப் பயன்படுத்தினர்.

இதையும் படியுங்கள்:
அடேங்கப்பா.. பாம்பு கொட்டாவி விட இதுதான் காரணமா. இத கட்டாயம் படிங்க!
கேசரி முத்திரை - Khechari Mudra,

இந்த யோகத்தை முறையாகச் செய்யும்போது கபாலத்தின் உச்சி வழியே 'அமிர்தம்' சுரக்கும் என இடைக்காட்டு சித்தர் தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். இந்த அமுதை உண்பதால் உடல் முதுமை அடையாமல், நோய் நொடியின்றி இரும்பு அல்லது கல் போன்ற நரைதிரையற்ற காயகல்ப தேகமாக மாறுகிறது.

யோக நூல்களின்படி, லம்பிகா யோகம் அல்லது கேசரி முத்திரை என்பது தகுந்த குருவின் நேரடி வழிகாட்டுதல் இன்றி செய்யக்கூடாத மிகக் கடுமையான மற்றும் ஆபத்தான ஒரு பயிற்சியாகும். நாக்கை சரியாகக் கையாளாவிட்டால் மூச்சுத்திணறல் அல்லது நரம்பு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

திருமூலர் தனது திருமந்திரத்தில் இந்த லம்பிகா யோகத்தின் சிறப்புகளையும், அமிர்தம் உண்ணும் முறையையும் பல பாடல்களில் விளக்கியுள்ளார். இந்த யோக நிலை கைவரப் பெற்றவர்களுக்கு பசி, தாகம் ஏற்படாது.

உணவோ, நீரோ இன்றி பல ஆண்டுகள் உயிர் வாழமுடியும். உடலின் செல்கள் அழியாமல் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் உடல் கல்லைப் போல, சிலையைப்போல (காயகல்ப நிலை) உறுதியாகும். சுவாசம் மிகக் குறைந்து அல்லது முற்றிலும் நின்று, யோகிகள் ஜீவசமாதி நிலையை அடைய இதுவே அடித்தளமாக அமைகிறது.

இதையும் படியுங்கள்:
ஆண்கள் விளக்கேற்றலாமா? தீப வழிபாட்டில் நீங்கள் அறியாத ரகசியங்கள்!
கேசரி முத்திரை - Khechari Mudra,
logo
Kalki Online
kalkionline.com