கிரகதோஷப் பரிகாரக் கோயில்கள் - 2: திங்களூர் கைலாசநாதர் கோயில்!

கைலாசநாதர் கோயில் (Thingalur Kailasanathar Temple) தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திங்களூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 33 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
Thingalur Kailasanathar Temple - Kiragathosa parihara kovilgal
Thingalur Kailasanathar Temple
பிரபு சங்கர்

About 55 years of experience in journalism, writing and taking photographs. Contributed to all the Tamil magazines of all periodicities. Developed skill through the guidance of Sri Savi, Editor, Dinamani Kadir. Have written hundreds of articles on various subjects; nearly 300 short stories; 12 novels and published hundreds of photographs. Have brought out 30 books, Worked as 1. Sub Editor in Ambalam, Net magazine under Sri Sujatha and Sri Thiruppur Krishnan; 2. Sub Editor in Kumudam Bhakthi Special and 3.Editor-in-Charge for Dinakaran Aanmigam magazines.

Updated on
deepam strip
Deepam

இன்று திங்கட்கிழமை. சந்திரனுக்கு உரிய நாள். இந்நாளில் சந்திரன் அருள் புரியும் திங்களூர் (கும்பகோணத்திலிருந்து 33 கி.மீ.) கோயிலுக்குப் போய் வரலாமா?

திங்களூரில் வாழ்ந்து வந்த அப்பூதியடிகள், தான் நேரில் சந்திக்காத, அப்பர் என்ற திருநாவுக்கரசரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டவர். ஒருமுறை திருநாவுக்கரசர் அந்த ஊருக்கு வந்தபோது அங்கே அப்பூதியடிகளால் அமைக்கப்பட்டிருந்த தர்மசாலைகள் பலவற்றில் தன் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது கண்டார். ‘‘உங்கள் பெயரை வைத்துக் கொள்ளாமல் யார் பெயரையோ வைத்திருக்கிறீர்களே, ஏன்?‘‘ என்று அப்பர் கேட்டார்.

கேட்டது திருநாவுக்கரசர் என்று அறியாது கடுங்கோபமுற்ற அப்பூதி அடிகள், ‘‘அவர் என் மானசீக குரு. சிவனடியாராக வந்ததால் இவ்வாறு கேட்ட உம்மைச் சும்மா விடுகிறேன்,‘‘ என்று உரத்த குரலில் சொன்னார். உடனே அப்பர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே, அடிகள் அவர் அடி பணிந்தார். தன் குருநாதருக்கு விருந்து படைக்க விரும்பி, தோட்டத்திலிருந்து வாழையிலை பறித்து வருமாறு தன் மகனை அனுப்பி வைத்தார். சென்ற மகன் அரவம் தீண்டி இறக்க, விவரம் தெரிந்த அப்பர் உடனே அவனுடலை அவ்வூரிலிருந்த கயிலைநாதர் கோயிலுக்கு எடுத்துச் சென்றார். இறைவனைப் போற்றிப் பாட, பாலகன் உறக்கம் கலைந்தவன் போல எழுந்தான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com