குருவின் மகனை மீட்க பெருமாள் செய்த அற்புதம்: குருவித்துறை தல வரலாறு தெரியுமா?

வைகைக்கரையில் யோக குருவாக வீற்றிருக்கும் குரு பகவானையும் பெருமாளையும் தரிசித்து சகல நன்மைகளையும் பெறுங்கள்!
குருவித்துறை கோவில் - Kuruvithurai Guru Temple,
குருவித்துறை கோவில் - Kuruvithurai Guru Temple, -
கோவீ.ராஜேந்திரன்

கோவீ.ராஜேந்திரன், அடிப்படையில் ஒரு ஆட்டோமொபைல் இன்ஜினியர். தமிழகத்தின் முன்னணி இதழ்களில் 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளும், பொது அறிவு சார்ந்த 12 புத்தகங்களும் எழுதியுள்ளார். கல்கி ஆன்லைனில் 300-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி, வித்தியாசமான தகவல்களை வழங்கி வருகிறார்.

Updated on: 

தேவலோகத்திலிருந்த குரு பகவான் பூலோகத்துக்கு வந்து, வைகைக் கரையில் துறை அமைத்து தவம் இருந்தார். குருவின் தவத்துக்கு இரங்கி, பெருமாள் காட்சி கொடுத்ததோடு அசுரர்களிடம் சிக்கிக்கொண்ட குரு பகவானின் மகன் கசனை மீட்கச் சக்ரத்தாழ்வாரை அனுப்பி, குருவின் மகன் கசனை மீட்டுத் தந்து குருவுக்கு அருளினார்.

குரு பகவான் வீற்றிருந்து பெருமாளைத் தரிசித்த இடம் என்பதால், 'குரு வீற்றிருந்த துறை' என ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு, பின்னாளில் அதுவே மருவி, 'குருவித்துறை கோவில்' ஆனது. குருவிற்கு பெருமாள் காட்சி தந்த இடமே சித்திர ரத வல்லப பெருமாள் கோயில். இது மதுரையிலிருந்து 35 கிமீ தொலைவிலும், சோழவந்தானிலிருந்து 12 கிமீ தொலைவிலும் உள்ளது.

பெருமாள், சித்திரங்கள் வரையப்பட்ட ரதம் (தேர்) ஒன்றில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சி கொடுத்தார் என்பதால் இந்தப் பெருமாளுக்கு 'சித்திர ரத வல்லப பெருமாள்' என்று திருநாமம் ஏற்பட்டது. இந்தப் பெருமாளுக்கு இந்தத் திருநாமத்தைச் சூட்டியவரே குரு பகவான்தான் என்கிறது தல புராணம். குரு பகவானுக்குப் பெருமாள் காட்சி கொடுத்தது- சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர தினம் என்று சொல்லப்படுகிறது.

தனக்குத் தரிசனம் தந்த பெருமாள் என்றென்றும் இங்கேயே இருந்து பக்தர்களின் குறைகளையும் களைய வேண்டும் என குரு பகவான் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்க... சித்திர ரத வல்லப பெருமாள் இங்கேயே கோயில் கொண்டு, இங்கே வரும் பக்தர்களுக்குச் சகல வளங்களையும் அளித்துக்காக்கிறார்.

இங்குள்ள சித்திர ரத வல்லபபெருமாள் சந்தன மரசிலையால் ஆன மூர்த்தியாக திகழ்கின்றார். மூன்று பிராகாரங்களைக் கொண்ட விரிவான இந்தக் கோயிலில், தூண்கள் நிறைந்த பிரமாண்ட மண்டபம், முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்று பிரமாண்டமாக அமைந்துள்ளது.

கருவறையைச் சுற்றி ஒரு பிராகாரம். முன் மண்டபத்தில் துவார பாலகர்கள். முதல் பிராகாரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள், யோக நரசிம்மர், விஷ்வக்சேனர் போன்ற விக்கிரகங்கள். 2-ஆம் பிராகாரத்தில் கம்பத்தடி மண்டபம், மடப்பள்ளி, ஏகாதசி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. பன்னிரு ஆழ்வார்ளும் ஒருசேர இக்கோயிலில் தனி சன்னதியில் வீற்றிருப்பது வேறெந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.

குருவித்துறை கோவில் - Kuruvithurai Guru Temple,
குருவித்துறை கோவில் - Kuruvithurai Guru Temple,

சென்பகவல்லித்தாயார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். செண்பகவல்லித் தாயார். சந்நிதியும் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்று காணப்படுகிறது. தாயார் தாமரை மலர்கள் ஏந்தி, அபயம் வரம் அருளும்படி உள்ளார். தாயார் இங்கு படி தாண்டா பத்தினி. திருக்கல்யாண காலத்தில் கூட பெருமாளிடம் இருந்து பெற்று வந்த திருமாங்கல்யத்தை இங்கே உள்ளே கொண்டு வந்துதான் கட்டுவார்கள் பட்டாச்சார்யர்கள். .3-ஆம் பிராகாரத்தில் காவல் தெய்வமான பூதத்தான் எனப்படும் கருப்பசாமி கோயில் உள்ளது.

குருவித்துறை சித்தர் ரத வல்லப பெருமாள் தீபாவளி அன்று தேவியருடன் தைல காப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் மூலவர் ஸ்ரீ தேவி,பூ தேவி, பெருமாள் 7 அடி உயரத்தில் ஒரே சந்தன மரத்தால் எழுந்தருளியுள்ளனர். எனவே மூலவருக்கு அபிஷேகம் நடப்பதில்லை. தீபாரதனைகள், பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன.

இதையும் படியுங்கள்:
திருமணத் தடைகள் நீக்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்!
குருவித்துறை கோவில் - Kuruvithurai Guru Temple,

ஆண்டு தோறும் தீபாவளிக்கு முதல் நாள் சுவாமிக்கு தைல காப்பு அலங்காரம் நடக்கும் 108 மூலிகைகள் கலந்த சாம்பிராணி தைல காப்பு அலங்காரம் நடக்கும். அந்த கோலத்தில் வைகுண்ட ஏகாதசி வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தீபாவளி அன்று பக்தர்களுக்கு தைலம் வழங்கப்படுகிறது.

இத்தலத்து பெருமாளை வணங்கினால் குழந்தை பாக்கியம், திருமணத் தடைகள் நீங்குதல் மற்றும் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் தோஷங்கள் நீங்க இங்கு சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

பெருமாளை தரிசனம் செய்யச் செல்வதற்கு முன் வெளியே குரு பகவானின் திருச்சந்நிதி. பெருமாள் கிழக்கு நோக்கிக் காட்சி தர, அவரை தரிசிக்கும் கோலத்தில் மேற்கு நோக்கிக் காணப்படுகிறார் குரு. இவருக்கு அருகே ஸ்ரீசக்கரத்தாழ்வார் எழுந்தருளியிருக்கிறார். இங்கே குரு பகவான், யோக குருவாகக் காட்சிகொடுக்கிறார். கைகளை நெஞ்சில் குவித்து வணங்கும் பாவனையில் காட்சி தருகிறார்.

இக்கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். பொதுவாக, சிவாலயங்களில் குரு பகவான் எழுந்தருளி இருப்பது சாதாரணமாகப் பார்க்கக் கூடிய ஒன்று. ஆனால், வைணவத் தலம் ஒன்றில் குருபகவான் எழுந்தருளி இருப்பது, தனிச்சிறப்பு.குருவித்துறை ஆலயத்தின் மூலவர் ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள்.

இதையும் படியுங்கள்:
திருமணத் தடைகள் நீக்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்!
குருவித்துறை கோவில் - Kuruvithurai Guru Temple,

ஆனால், இங்கு செல்வாக்கு மிக்கவராக குருபகவானே இருக்கிறார்.தன்னை வழிபடுகிறவர்களுக்கு குரு உயர் பதவிகளையும், மன மகிழ்ச்சி, திருமணப்பேறு, புத்திரப்பேறு, செல்வம் முதலியவற்றை கொடுப்பவர் குரு பகவான்.

கோயில் எங்குள்ளது? மதுரையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் இருக்கிறது சோழவந்தான். இங்கிருந்து தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம் வழியாக சுமார் 12 கி.மீ. தொலைவு பயணித்தால் வரும் கிராமம் குருவித்துறை. அங்கிருந்து சுமார் இரண்டு கி.மீ. தொலைவு நடந்து செல்லலாம். அல்லது ஆட்டோக்களில் சென்றால் சித்திர ரத பெருமாளை தரிசிக்கலாம்.

எப்படிப் போவது?: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து எண் 68, நேரடியாக குருவித்துறை செல்கிறது. குருவித்துறைப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு ஆட்டோவில் செல்லாம். வியாழக்கிழமைகளில் மட்டும் 'எண் 68'- நகரப்பேருந்து, கோயில் வாசல் வரை செல்லும்.

குருவித்துறைக்கு நேரடியாக பஸ்கள் செல்வது குறைவு. எனவே அடிக்கடி செல்லும் சோழவந்தான் சென்று அங்கிருந்து ஆட்டோவில் கோயிலுக்கு செல்லலாம்.தரிசன நேரம்: காலை 9:00- 12:30. மாலை 3:30- 5:30.

ஊர் எல்லையில்- காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் கோயில் என்பதால் மாலை சீக்கிரமாகவே நடை சாத்தி விடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
பழனி முருகன் கோவில் முதலிடம் பிடிக்க இதுதான் காரணமா? திருக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புகள்!
குருவித்துறை கோவில் - Kuruvithurai Guru Temple,