மஹாளய அமாவாசை: முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய எந்தெந்த தீர்த்தங்களுக்கு செல்ல வேண்டும்?

உங்கள் குடும்பத்தில் பித்ரு தோஷம் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெருக ஏற்ற 17 சிறப்புத் தலங்கள்.
மஹாளய அமாவாசை - Mahalaya Amavasya
மஹாளய அமாவாசை - Mahalaya AmavasyaImage credit: Gemini
மகாலெட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on: 

தர்ப்பணம் செய்வது அவர்களது ஆசியைப் பெற்றுத்தரும். சில நேரங்களில் எல்லா மாதமும் முடியாவிட்டால் கட்டாயம் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை இவற்றில் நம் பித்ருக்களுக்கு படையலிட்டு அவர்களுக்கு திதி கொடுக்க வேண்டியது அவசியம்.

மஹாளய அமாவாசையில் நம் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் திதி தீர்த்தமானது அவர்களை இன்புறச் செய்து நமக்கு, நம் குடும்பத்துக்கு பல்வேறு ஆசிகளை பெற்றுத்தரும் என்பது ஐதீகம்.

நம் பாரத நாடு பல்வேறு நதிகளுக்கும், ஆறுகளுக்கும் பெயர் போனது. கோவில் குளக்கரைகளும் திதிக் கொடுக்க உகந்தது. இந்த மஹாளய அமாவாசையில் நம் பித்ருக்களுக்கு திதி கொடுக்க ஏற்ற சில தீர்த்தங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

அளகாபுத்தூர் படிக்காசு நாதர் கோயிலில் முருகன் சங்கு, சக்கரத்துடன் அருள்கிறார். அங்கு நவக்கிரக சன்னதியில் சூரியனும், சந்திரனும் எதிரெதிரே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளனர். இதனால் மஹாளய பட்சத்தன்று அங்கு நீத்தார் கடனை நிறைவேற்ற அவர்களது ஆசி கிடைக்கும்.

திருவையாற்றுப் படித்துறையில் மஹாளய அமாவாசையன்று முன்னோர்க்கு பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுக்க அவர்களது நல்லாசி கிட்டும்.

ராமேஸ்வரத்தில் 64தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அவற்றில் அக்னி தீர்த்தம் எனப்படும் கட்டத்தில் மஹாளயத்தன்று நீராடி தர்ப்பணம் செய்ய சகல பாவங்களும் நீங்கும்.

இதையும் படியுங்கள்:
பித்ருதோஷம் போக்கும் மஹாளய பட்சம்: குடும்ப வளம் பெருக என்ன செய்ய வேண்டும்?
மஹாளய அமாவாசை - Mahalaya Amavasya

திருச்சிக்கு அருகே பூவாளூர் திருமூலநாதர் ஆலயத்திற்கு அருகே ஓடும் பங்குனி ஆற்றின் கரையில் மஹாளய பட்ச தர்ப்பணம் செய்தால் திதி கொடுக்கத் தவறிய தோஷங்கள் நீங்கி, முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.

கும்பகோணம் நன்னிலம், பூந்தோட்டத்திற்கு அருகில் திலதைப்பதி எனும் திலதர்ப்பணப்புரியில் மஹாளய அமாவாசையன்று தர்ப்பணம் செய்து வழிபட முன்னோர்கள் ஆசி கிடைக்கும். ராமபிரான் தன் தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இது.

ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் உள்ள குப்த கங்கையில் மஹாளய அமாவாசையன்று புனித நீராடி நீத்தார் கடனை நிறைவேற்றினால் மகத்தான புண்ணியம் கிட்டும்.

சேலத்தில் உள்ள சுகவரனேஸ்வரர் ஆலய நந்தனவனத்தின் பின்பகுதியில் மஹாளய‌ அமாவாசையன்று ஏராளமான பக்தர்கள் தம் முன்னோர்கள் கடன் செய்து பலன் பெறுகின்றனர்.

காஞ்சிபுரம் அருகில் உள்ள திருட்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில் ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடன் நிறைவேற்றினார். அத்தலத்தில் மஹாளய பட்சத்தன்று நீத்தார் கடனை நிறைவேற்றிட முன்னோர்களின் ஆசியும்,திருமாலின் திருவருளும் கிட்டும்.

கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் மஹாளய அமாவாசையன்று அங்கு அருளும் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பின் அங்கு குளக்கரையில் முன்னோர் வழிபாடு நடத்தி அருள் பெறுகின்றனர்.

திருப்பூவனம் பூவன நாதர் ஆலயத்தில் சூரியனால் உண்டாக்கப்பட்ட மணி கன்னிகை தீர்த்தக் கரையில் மஹாளய அமாவாசையன்று தர்ப்பணாதி காரியங்களை புரிபவர்கள் முன்னோர்களின் ஆசியைப் பெறுவர்.

மஹாளய அமாவாசை - Mahalaya Amavasya
மஹாளய அமாவாசை - Mahalaya AmavasyaImage credit: Gemini

ராமேஸ்வரத்தில் 64தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அவற்றில் அக்னி தீர்த்தம் எனப்படும் கட்டத்தில் அமாவாசையன்று நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய சகல பாவங்களும் நீங்கும்.

பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தின் அருகே கூடுதுறையில் மகாளய பட்சத்தன்று ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு சிரார்த்தம் கொடுத்து மங்கலங்கள் பெறுகின்றனர்.

கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடி, படித்துறையில் மகாளய அமாவாசையன்று முன்னோர்க்கு பூஜைகள் செய்து அங்குள்ள ஆலமரத்தடியில் தான தர்மங்கள் செய்ய நினைத்தது நிறைவேறும்.

வேதாரண்யத்தில் ஆதிசேது எனும் கோடியக்கரை தீர்த்தக் தரையில் மூழ்கி மஹாளய அமாவாசையன்று திதி கொடுத்து பக்தர்கள் வாழ்வில் வளம் பெறுகின்றனர்.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சந்திர தீர்த்தம் அருகே உள்ள ஆலமரத்தடியில் ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அங்கு மஹாளய பட்ச தர்ப்பணம் செய்வது நல்லது. பல புண்ணியங்களை தந்து நலம் தரக்கூடியது.

விருத்த காசி எனப்படும் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகேயே ஓடும் மணிமுத்தாறு நதி தீரத்திலும் நீத்தார் கடனை மக்கள் நிறைவேற்றுகிறார்கள்.

கங்கையில், மகாளய அமாவாசையன்று தர்ப்பணம், பூஜைகள் செய்வதை சாஸ்திரங்கள் பெருமையுடன் பேசுகின்றன.

இதுபோன்று எண்ணற்ற நதி தீர்த்தங்கள் முன்னோர் வழிபாட்டுக்கு உகந்ததாக தர்ப்பணம் தந்து நம் வாழ்வில் வளம் சேர்க்க துணைபுரிகின்றன.

இதையும் படியுங்கள்:
பக்தர்களின் வேண்டுதலை அன்னையிடம் சேர்க்கும் அற்புத கிளி: திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில் ரகசியம்!
மஹாளய அமாவாசை - Mahalaya Amavasya
logo
Kalki Online
kalkionline.com