சனி தோஷத்தால் அவதியா? நளன் கதையை படித்தால் போதும், தோஷம் குறையும்! ஏன் தெரியுமா?

அன்னப்பறவை தூது முதல் பாம்பின் சாபம் வரை! நளன் வாழ்வில் விளையாடிய சனி பகவான்! சனி தோஷத்தால் அவதிப்படுகிறீர்களா? இந்த ஒரு கதையை படித்தால் போதும்... உடனே நடக்கும் அதிசயம்!
Nala Damayanti
Nala Damayanti sani dosham storyImage credit: AI Image
Updated on
Deepam strip
Deepam strip

படித்தாலோ கேட்டாலோ சனி தோஷம் குறையும் நள தமயந்தியின் (Nala Damayanti sani dosham story) கதை:

நெடுத நாட்டு மன்னன் வீரசேனனின் மகன் நளன். நளன் மிகுந்த அழகு, அறிவு, வீரம் உடையவனாக இருந்தான். அவன் அரண்மனை தோட்டத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு அழகான அன்னப்பறவையைப் பார்த்தான். நளனை மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் அந்த அன்னப்பறவை நளனிடம் வந்து பொன்மொழிகளால் பேச ஆரம்பித்தது.

இதனைக் கேட்ட நளன் மிகுந்த அதிர்ச்சியுடன் அன்னப்பறவையுடன் பேச ஆரம்பித்தான். அதற்கு அன்னப்பறவை, "நீங்கள் மிகவும் அழகு, அறிவு மற்றும் வீரம் உடையவராக உள்ளீர்கள். உங்களை மணக்கவிருக்கும் பெண்ணும் அழகும், அறிவுடையவளாக இருக்க வேண்டும்" என்று கூறியது.

மேலும் அந்த அன்னப்பறவை, தமயந்தி என்ற ஓர் பெண் இருப்பதாகவும் அவள் அழகு, அறிவு மற்றும் வீரத்தில் தங்களுக்கு இணையானவள் என்றும் நளனிடம் கூறியது. இதனை கேட்ட நளனுக்கு தமயந்தியை பார்க்காமேயே அவள் மீது காதல் ஏற்பட்டது.

இதனை அறிந்த அன்னப்பறவை நளனிடம், "நான் தங்களின் காதலுக்காக தமயந்தி இடம் தூது செல்லலாமா?" என்று கேட்டது. நளனும், "சரி" என்று கூற, அந்த அன்னப்பறவை தமயந்தியை தனிமையில் சந்தித்து நளனின் வீரத்தையும், அறிவையும், அழகையும் பற்றி எடுத்துக் கூற தமயந்திக்கும் நளன் மீது காதல் ஏற்பட்டது.

இவ்வாறு இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே காதல் கொண்டனர். அதேசமயம் தமயந்தியின் தந்தை அவளுக்கு சுயம்வர ஏற்பாடு செய்தார். அச்சுயம்வரத்தில் தேவர்களும், சனி பகவானும் பங்கு கொண்டனர். தமயந்தி ஏற்கனவே நளனை காதலிப்பதை அறிந்த தேவர்கள் அனைவரும் நளனின் வேடத்தில் இருந்தனர்.

இதையும் படியுங்கள்:
நாகங்கள் தோலுரித்து அதை இறைவனின் திருமேனி மீது மாலையாக விட்டுச் செல்லும் அதிசயம்!
Nala Damayanti

இதனைப் பார்த்த தமயந்தி நளனைப் போன்றே ஆறு பேர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தாள். இருப்பினும் கற்ற கல்வி அவளுக்கு அங்கு உதவியது. தேவர்கள் கண் இமைக்க மாட்டார்கள் என்ற ஞானம் அவளுக்கு ஞாபகம் வந்தது.

இதனால் ஆறு பேரில் ஆறாவதாக இருக்கும் நபர் கண்களை இமைத்ததால் அவனே நளன் என்று அறிந்து அவனுக்கு மாலை சூட்டினாள். இவ்விருவருக்கும் திருமணம் நல்முறையில் நடந்தது. ஆனால், திருமணத்திற்கு வந்த தேவர்கள் ஏமாற்றத்தினால் மிகுந்த கோபம் அடைந்திருந்தனர். அதில் சனிபகவானால் இந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் எப்படியாவது நளனை பழிவாங்க வேண்டும் என்று அவர் தக்க சமயத்திற்காக காத்திருந்தார்.

நளனும் தமயந்தியும் நெடுத நாட்டிற்குச் சென்றனர். நளனின் தந்தை நளனுக்கு பட்டாபிசேகம் சூட்டினார். நளன் சிறந்த மன்னனாக ஆட்சி செய்து மக்களுக்கு நல்லாட்சியை கொடுத்தான். இருப்பினும் காத்திருந்த சனி பகவானுக்கு நல்லதோர் சந்தர்ப்பம் கிட்டியது. நளன் ஒரு கோவிலுக்கு செல்லும்போது கால்களை நன்கு கழுவாமல் கோவிலுக்குள்ளே சென்றான்.

தன்னுடைய கால்களையே ஒழுங்காக கழுவ தெரியாத ஒருவனால் எவ்வாறு மக்களுக்கு நல்லாட்சியை கொடுக்க முடியும் என்று எண்ணி அந்த சந்தர்ப்பத்தை சனி பகவான் பயன்படுத்திக் கொண்டார். சனி பகவான் நளனின் காலை பற்றி கொண்டான். அன்று முதல் நளனுக்கு சனி திசை ஏற்பட தொடங்கியது. இதனால் நளன் பல துன்பங்களை அடைந்தான்.

இதையும் படியுங்கள்:
பிரம்ம முகூர்த்தத்துக்கும் பினியல் சுரப்பிக்கும் என்ன சம்பந்தம்? இது ஆன்மிகமா? அறிவியலா?
Nala Damayanti

நளனுக்கு சூது விளையாடும் பழக்கம் இருந்தது. இதனை நன்கறிந்த நளனின் அமைச்சரான புட்கரன் அவனை சூதாட்டத்தில் ஏமாற்றி தோற்கடித்து ராஜ்யத்தையும் அரண்மனையையும் பற்றிக் கொண்டார். பின் நளனும் தமயந்தியும் காட்டில் வனவாசம் சென்றனர். அப்பொழுது தமயந்தி தன்னை விட்டு பிரிந்து செல்ல மாட்டாள் என்று நினைத்த நளன் அவள் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவளைஅங்கேயே விட்டுச் சென்றான்.

தமயந்தியும் எழுந்து நளன் இல்லாததை பார்த்த உடனேயே தன்னுடைய தந்தை வீட்டிற்கு சென்று விட்டாள். நளனும் காட்டில் தனித்து நடந்து கொண்டிருக்கும்போது, "என்னை காப்பாற்றுங்கள்" என்ற குரல் கேட்டது. உடனே நளன் சென்று பார்த்த போது, காட்டில் மரங்கள் எரிந்து கொண்டிருந்தன. அதில் ஒரு பாம்பு (கார்கோடன்) தீ பற்றி எறிந்து கொண்டிருந்தான். நளன் அப்பாம்பை காப்பாற்றினான்.

அப்பொழுது அந்த பாம்பு அவனுக்கு ஓர் வரம் அளித்தது. மறைந்து வாழும் உனக்கு நான் வயதான முதியவர் போன்று கூன் விழுந்த ஓர் உருவத்தை தருகிறேன். நீ இந்த உருவத்திலேயே நாட்டிற்குள் சென்று வாழலாம். உன்னை யாரும் அடையாளம் காண முடியாது. மேலும் ஒரு உடையையும் அவனுக்குத் தந்தது.

உனக்கு எப்பொழுது பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது இந்த உடையை அணிவாய் என்று நளனிடம் கொடுத்துச் சென்றது. பின் நளன் அயோத்தி நாட்டிற்குச் சென்று அங்கு ஓர் அரசனுக்கு தேரோட்டியாக இருந்தார். அவன் அந்த அரசனுக்கு தேரோட்டும் வித்தையை கற்றுக்கொடுத்தான்.

அந்த அரசனும் நளனுக்கு ஒரு மரத்தில் இருக்கும் இலைகளை எவ்வாறு விரைவாக எண்ண வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். பல நாட்கள் நளனை பிரிந்த தமயந்தி அவனை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய தந்தையிடம் மீண்டும் தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.

இதையும் படியுங்கள்:
இறைவனின் இல்லம் 'கபா'; வற்றாத 'ஜம் ஜம் கிணறு'... வியக்கத்தக்க தகவல்கள்!
Nala Damayanti

இதனால் பீமனும் தன்னுடைய மகளான தமயந்திக்கு திருமண ஏற்பாடு செய்தார். இத்திருமண அழைப்பு அனைத்து நாட்டு மன்னர்களையும் அடைந்தது. நளனும் அந்த திருமணத்தில் பங்கு கொண்டான். தன்னுடைய மனைவியின் திருமணத்தை பார்த்தபோது அவனுடைய தற்போதைய தோற்றத்தை விடுத்து உடையை அணிந்து தன்னுடைய உண்மையான ரூபத்தில் தமயந்தியை மீண்டும் திருமணம் செய்து கொண்டான்.

திருமணம் நன்றாக முடிந்த பிறகு தமயந்தியின் தந்தை நளனிடம் உங்களுக்கு சீர்வரிசையாக என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு நளன் உங்களுடைய படைகளை கொடுங்கள். என் நாட்டில் புட்கரன் அதர்மமான ஆட்சியைப் புரிந்து மக்களை துன்பத்தில் வாட்டுகிறான்.

பீமனும் தன்னுடைய படையை கொடுத்தான். நளன் புட்கரன் மீது போர் தொடுத்து நாட்டை மீட்டு மீண்டும் நல்லாட்சியை செய்தான். சந்தோசமான வாழ்க்கையில் நளனும் தமயந்தியும் மீண்டும் இணைந்தனர். அவர்கள் ஓர் கோவிலுக்கு சென்ற போது அங்கு சனிபகவான் இருந்தார்.

அவர் நள தமயந்தியிடம் மன்னிப்பு கேட்டார். "நானே உங்களை அதிக துன்பத்தில் ஆழ்த்தினேன். உங்களுக்கு ஏதேனும் வரம் வேண்டுமா?" என்று கேட்டார். அதற்கு நளன் தன்னுடைய இன்பத்தை பார்க்காமல், "இனி இது போல் யாருக்கும் நடக்கக்கூடாது" என்ற வரத்தை கேட்டான். அந்த வகையில், நள தமயந்தி கதையைப் படிப்பவர்களாக இருந்தாலும் கேட்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சனி தோஷம் குறைய வேண்டும் என்ற வரத்தையும் கேட்டான்.

இதன் படியே இக்கதையை படிப்பவர்களாக இருந்தாலும் கேட்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சனி தோஷம் குறையும் என்ற நம்பிக்கை உண்டு.

logo
Kalki Online
kalkionline.com