நவகிரகங்களில் இராகு-கேதுவுக்கு ஏன் கிழமை இல்லை? தெரிந்து கொள்ளுங்கள் ஆன்மீகக் கணிதம்!

நிழல் கிரகங்களின் 21 மணி நேர ரகசியம் மற்றும் ஜோதிடத்தின் வியக்க வைக்கும் சமன்பாடு.
நவகிரகங்கள் - Astrology Secret
நவகிரகங்கள் - Astrology Secret
அகிலா சிவராமன்

அகிலா சிவராமன் 1995 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். கட்டுரைகளும் கதைகளும் கிட்டத்தட்ட 500க்கும் மேல் வெளி வந்துள்ளன. இறைவன் மீது பல பாடல்களை எழுதியுள்ள இவரது முதல் சிறுகதை 'புயலின் மறுபக்கம்' 2025 ஜனவரியில் மங்கையர் மலரில் வெளியானது. தொடர்ந்து கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். 'கல்கியில் எழுத ஆரம்பித்த பிறகு தான் என்னுடைய திறன் என்னவென்று எனக்கே தெரிய ஆரம்பித்தது' என்று கூறும் அகிலா, சமூக நலன் அடிப்படையிலும், தேச நலன் அடிப்படையிலும் தனது படைப்புகள் அமைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர்.

Updated on: 

நம்முடைய இந்து சாஸ்திரத்தின் படி ஒன்பது கிரகங்கள் அதாவது நவகிரகங்கள் இருக்கின்றன. அறிவியல் பூர்வமாகவும் ஒன்பது கோள்கள் இருக்கின்றன. அந்த ஒன்பது கோள்களின் அடிப்படையில் தான் இந்த கிரகங்களும் இருக்கின்றன.

ஒன்பது கிரகங்களின் பெயர்:

1. சூரியன்

2. சந்திரன் (திங்கள்)

3. செவ்வாய்

4. புதன்

5. குரு / வியாழன்

6. சுக்கிரன் (வெள்ளி)

7. சனி

8. ராகு

9. கேது

இந்த கிரகங்களின் பெயரில்தான் நாட்களின் பெயர்களும் இருக்கின்றன.

ஆனால் ஒரு வாரத்தில் ஞாயிறு முதல் சனி வரை ஏழு நாட்கள் மட்டுமே உள்ளன. ஏழு கிரகங்களுக்குத் தனித்தனி கிழமைகள் இருக்கும்போது, இராகுவுக்கும் கேதுவுக்கும் ஏன் நாட்கள் ஒதுக்கப்படவில்லை? இது இறைவனின் பாரபட்சமா என்று கேட்டால் முற்றிலும் இல்லை. காரணத்தை பார்க்கலாமா..?

மற்ற கிரகங்கள் எல்லாம் வெளிப்படையாக தெரிவது போல இந்த ராகுவும் கேதுவும் வெளிப் படையாக தெரியாது. அந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சரி, முக்கியமான காரணத்தை பார்க்கலாம்.

ஒரு நாளைக்கான மொத்த நேரம் = 24 மணி நேரம். அப்படி என்றால் ஒரு வாரத்திற்கு = 7 நாட்கள் × 24 hours = 168 hours.

இந்த ஏழு கிரகங்களும் தங்களுக்குரிய 24 மணி நேர ஆதிக்கத்திலிருந்து தலா 3 மணி நேரத்தை இராகு மற்றும் கேதுக்காக ஒதுக்கி இருக்கின்றன.

அவ்வாறு ஏழு கிரகங்களும் கொடுத்த மொத்த நேரம் = 7 கிரகங்கள் × 3 hours = 21 hours

இந்த 21 மணி நேரத்தைதான் கடவுள் இராகுவுக்கும் கேதுவுக்கும் சரி சமமாகப் பிரித்து தந்துள்ளதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அதாவது ஒரு வாரத்திற்கு இராகுவின் பங்கு 10.5 hours ஆகவும் கேதுவின் பங்கு 10.5 hours ஆகவும் பிரிக்கப் பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தரும் ஆயுஷ் ஹோமம்: எப்போது, எப்படி செய்ய வேண்டும்?
நவகிரகங்கள் - Astrology Secret

இந்த 10.5 மணி நேரத்தை வாரத்தின் 7 நாட்களுக்கும் சமமாகப் பிரித்தால் ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் வரும். அதாவது தினமும் இராகுவிற்கு 1.5 மணி நேரமும் கேதுவிற்கு 1.5 மணி நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால்தான் ஒவ்வொரு நாளும் இராகுவிற்கான ஒன்றரை மணி நேரத்தை “இராகு காலம்" என்றும், கேதுவின் அம்சமான குளிகனுக்கான ஒன்றரை மணி நேரத்தை "குளிகை காலம்" என்றும் கூறுகிறார்கள்.

ஒரு நாளின் 24 மணி நேரமும் 24 ஹோரைகளாகப் பிரிக்கப்பட்டு சனி, குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன் என ஏழு கிரகங்களுக்கும் சுழற்சி முறையில் சமமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆகவே, அதன் அடிப்படையில்தான் இந்த ஞாயிறு முதல் சனி வரை ஏழு கிரகங்களின் ஆளுமையும் சமமாகச் சுழல்கின்றன. இராகு கேதுவுக்குத் தனி நாள் இல்லாதது பாரபட்சம் அல்ல, அது காலத்தின் சமச்சீரான கணித தத்துவமாகும்.

இதையும் படியுங்கள்:
காலையில் கண்விழித்ததும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்... சீக்கிரமே வயதான தோற்றம் வந்துவிடும்!
நவகிரகங்கள் - Astrology Secret

இந்த தத்துவத்தின் மூலமாக, நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு சில நேரத்தில் சில விஷயங்களை கடவுள் நமக்கு கொடுக்க மறுக்கப்படுவது போலத் தோன்றினாலும், கடவுள் நமக்கு வேறு ஒரு வழியில் மிகச் சரியான மற்றும் தேவையானதை கண்டிப்பாக வைத்திருப்பார் என்பதை நாம் தெள்ள தெளிவாக புரிந்து கொள்ளலாம்.