புரட்டாசி சனிக்கிழமை மட்டுமே திறக்கப்படும் ரகசிய பெருமாள் கோவில்: 5300 அடி உயரத்தில் ஒரு பரவச பயணம்!

கோவை ஆனைக்கட்டி வனப்பகுதியில் அமைந்துள்ள அபூர்வ சுயம்பு பெருமாள் கோவில் வழிபாட்டு வழிகாட்டி.
பெருமாள் முடி - Perumal Mudi Temple
பெருமாள் முடி - Perumal Mudi Temple
ரேவதி பாலு

சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. சமீபத்தில் ஒரு நாடகம் மெரீனா தியேட்டர்ஸால் மேடையேற்றப்பட்டது. சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து 'நகர்வலம்' நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.

Updated on

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி அருகில் செம்புகரை கிராமம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,300 அடி உயரத்தில் அமைந்துள்ளது பெருமாள் முடி கோவில்.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில் அதுவும் சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறையினரால் அனுமதிக்கப்படுகிறது. இங்கு செல்ல வருடத்திற்கு 5 புரட்டாசி சனிக்கிழமைகள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஆகவே, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்று சுயம்பு வடிவில் உள்ள பெருமாளை சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம்.

இதற்கு எப்படி செல்லவேண்டும் என்றால் முதலில் கோவையிலிருந்து ஆனைக்கட்டி வரை செல்லவேண்டும். பிறகு அங்கேயுள்ள மாங்கரை வனச் சோதனை சாவடிக்கு செல்லவேண்டும். அங்கே அதிகாலை வேளையில் யானை நடமாட்டம் இருக்கும் என்பதால் காலை 7 மணிக்கு மேல்தான் மேலே மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

அங்கிருந்து 4 கி. மீ தொலைவு சென்றால் செம்புக்கரை செல்லும் சாலையை அடையலாம். அந்த இடத்தில் வைத்துள்ள தடுப்புகளை நீக்கி விட்டு நாம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்திவிட்டு நம்மை தொடர்ந்து செல்ல அனுமதிக்கிறார்கள் வனத் துறையினர். பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

கரடுமுரடான பாதையில் பயணிக்கும்போது, அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் பச்சை பசேல் என கடல் மட்டத்தில் இருந்து 5300 அடி உயரத்தில் இருக்கும் பெருமாள் மாலை பிரமிக்க வைக்கிறது. ஊரின் மையப் பகுதியில் இருந்து ஒரு ஒத்தையடி பாதையில் சிறிது தூரம் சென்றவுடன் மரத்தடியில் உள்ள விநாயகர் கோவில் தெரிகிறது. அங்கே எல்லோரும் பயபக்தியுடன் சாமி கும்பிட்டுவிட்டு மலையேற ஆரம்பிக்கிறார்கள்.

பெருமாள் முடி - Perumal Mudi Temple
பெருமாள் முடி - Perumal Mudi Temple

ஆரம்பத்தில் மண் சாலையில் துவங்கி மேலே செல்ல செல்ல பாறைகள் நிறைந்த செங்குத்தான பாதை வரும். பாதை செங்குத்தாக இருப்பதால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே ட்ரெக்கிங் உடையில் கையில் ஸ்டிக் உதவியோடு மலை ஏறி வருகிறார்கள். வயதானவர்கள் மஞ்சள் வேட்டியுடன், கையில் சாமிக்கு பூக்களை எடுத்துக்கொண்டு மெதுவாக ஏறி வருகிறார்கள். சில இடங்களில் தழ்ந்து கூட ஏற வேண்டியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
பக்தனுக்காக தலைசாய்த்த பெருமாள்! கரூரின் அதிசயம் - தான்தோன்றிமலை திருத்தலம்!
பெருமாள் முடி - Perumal Mudi Temple

சுமார் ஒருமணி நேரம் மலை ஏற்றத்திற்கு பிறகு சமதளமான ஒரு பாறை வரும். தூரத்தில் மலை முழுவதும் புற்கள் ஆக்கிரமித்து மிக ரம்மியமான காட்சி நம்மை மெய்மறக்க செய்யும் . கடைசி மலையான கிரி மலையை அரைமணி நேர பயணத்திற்கு பிறகு அடையலாம். அங்கே சுமார் 40 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய பாறையில் நாமம் வரையப்பட்டு அதற்கு சுற்றிலும் வேல்கள் நடப்பட்டிருக்கின்றன. அங்கு பக்தர்கள் பால், பன்னீர் ஊற்றி வழிபாடு செய்து, கோவிந்தா... கோவிந்தா... என முழக்கம் எழுப்பி பக்தி பரவசத்தோடு மனம் உருக பெருமாளை வழிபடுகிறார்கள்.

“இங்கு பெருமாள் முடி கோயில் என கூறப்படுவது ஒரே பாறையில் பெருமாள் வீற்றிருக்கும் அழகிய கோலம் தான். இதை சுயம்பு வடிவம் என கூறுகிறார்கள்” என்கிறார் ஒரு உள்ளூர்க்காரர்.

பாறை மேல் வரையப்பட்டுள்ள நாமத்திற்கு பெருமாளைப் போல பூக்களைக் கொண்டு அழகாக அலங்காரம் செய்து வழிபாடு நடக்கிறது.

பக்தியோடு புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை பார்க்க வருபவர்களைத் தவிர, அடர்ந்த வனம், பச்சை பசேலேன்ற சுற்றுப்பகுதி, உயரமான மலை என்று கண்ணுக்கு மிக ரம்யமாக ஒரு சுற்றுலா தலம் போல காட்சி தரும் இந்த இடத்திற்கு ஆர்வமாக மக்கள் வருகின்றனர்.

இந்த வழிகாட்டியைப் படிப்பதன் மூலம் வனத்துறையின் கட்டுப்பாடுகள், முறையான பயணக் கட்டுப்பாடு நேரங்கள் மற்றும் கரடுமுரடான மலைப் பாதையில் பாதுகாப்பாக ஏறிச் சென்று அபூர்வ சுயம்பு பெருமாளை தரிசிப்பதற்கான முழுமையான திட்டமிடலை நீங்கள் பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
அறுபடை வீடு செல்ல இலவச ஆன்மீகப் பயணம்! அரசு தரும் அரிய வாய்ப்பை பெறுவது எப்படி?
பெருமாள் முடி - Perumal Mudi Temple
logo
Kalki Online
kalkionline.com