அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணிக்குள் எழுந்தால் உடம்பில் என்ன நடக்கும்? அறிவியல் தரும் விளக்கம்!

சூரியனின் அற்புதக் கதிர்களும், பீனியல் சுரப்பியின் இயக்கமும் தரும் புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கிய ரகசியங்கள்.
பிரம்ம முகூர்த்தம் - Brahma Muhurtham Science
பிரம்ம முகூர்த்தம் - Brahma Muhurtham Science
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on: 

பிரம்ம முகூர்த்த  நேரத்தில் அதிகாலை 3.30 மணி முதல் 5.30 வரை எழுந்தால் பல அற்புத நன்மைகள் நிகழ்வதாக சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன.

சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புத்துயிர் கிடைக்கிறது. உற்சாகத்தையும்,  சுறுசுறுப்பையும் வழங்குகிறது. கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையும்  பெறுகின்றன. அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிக சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

பிரார்த்தனைகள் நிறைவேறும்

அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டை செய்தால் ,அன்று முழுவதும் வெற்றி தான். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம்  சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.

குறிப்பிட்ட  நேரத்தில் ஓய்வு எடுத்து உறங்கவேண்டிய நேரத்தில் விழித்திருந்தால்  நோய்கள் வரும், அதனால் தான் பெரியோர்கள் எழவேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் நாம் வேண்டிய அனைத்து வித பிரார்த்தனைகள் நிறைவேறும்.

அதிகாலையில் நீராடுவது

உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதுதான்.

'உஷஸ் ' என்னும் பெண் தேவதை பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயம் ஆகிறான். இந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவது விசேஷமான பலன்கள் தரும்.

பிரம்ம முகூர்த்தம் பெயர் வந்தது எப்படி?

சிருஷ்டி தொழிலை செய்பவர் பிரம்மா என்பதால் பிரம்மாவின் பெயரைக் கொண்டே அதிகாலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுகின்றனர்.

பிரம்ம முகூர்த்தம் - Brahma Muhurtham Science
பிரம்ம முகூர்த்தம் - Brahma Muhurtham Science

இந்த பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வாரம், நட்சத்திரம், யோகம், தோஷம் எதுவும் கிடையாது. அதனால், இந்த பிரம்ம முகூர்த்த நேரம் என்பது எப்போதும் சுபவேளையாகவே கருதப்படுகிறது.

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பிரம்மனை முறையாக வழிபடுபவர்களுக்கு கோடீஸ்வர யோகமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
திருமலையில் இன்றும் தொடரும் முத்து ஆரத்தி அதிசயம்! யார் இந்த தரிகொண்டா வெங்கமாம்பா?
பிரம்ம முகூர்த்தம் - Brahma Muhurtham Science

தெய்வங்களின் அருள்

பிரம்மமுகூர்த்தத்தில் தேவர்கள் ,தேவதைகள். சிவபெருமான், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, பிரம்மா ஆகியோர் அருள்புரிவதாக ஐதீகம். இந்த நேரத்தில் தெய்வங்களின் பார்வை படும்போது துன்பங்கள் அனைத்தும் மறைந்துவிடும்.

வீட்டில் இருந்த கஷ்டம், கடன் தொல்லை தீரும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

கணவன் மனைவி இடையே ஒற்றுமையை அதிகரிப்பதுடன் பல மடங்கு புண்ணியத்தையும் கொடுக்கும்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிரம்மனை முறையாக வழிபடுபவர்களுக்கு கோடீஸ்வர யோகம், திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதிகாலை நேரத்தில் பிரம்ம தேவருடைய காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த மந்திரத்தை தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து 108 முறை உச்சரித்து வந்தால் கேட்ட வரம் கேட்டபடி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பிரம்ம காயத்ரி மந்திரம்

ஓம் வேதாத் மகாய வித்   மஹே 

ஹரண்ய கர்ப்பாய வித்மஹே

தன்னோ பிரஹ் மஹ்

ப்ரசோதயாத்!!

சூரிய உதயத்திற்கு முன்பாக காலை நாலரை மணி முதல் ஆறு மணி வரை, பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வாய் கொப்பளித்து, முகம் கழுவி, வாசல் பெருக்கி கோலமிட்டு பின் பூஜை அறையில் அமர்ந்து ரொம்ப காயத்ரி மந்திரத்தை 108 முறை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும் இந்த மந்திரத்தை உச்சரித்து முடிக்கும் வரை பிரம்ம தேவரை நினைத்து வேண்டிக்கொண்டால் வேண்டியது கிடைக்கும்.

சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த பிரம்ம முகூர்த்த வழிபாட்டை செய்து வர தலையெழுத்து விரைவில் மாறும். இதை அனுபவித்து தெரிந்து கொள்ளலாம்.

இதனால் மன தெளிவு, அமைதி, உடல் ஆரோக்கியம் சாஸ்திரங்களின்படி இந்த நேரத்தில் சாத்வீக குணம் மேலோங்கி இருக்கும். தியானம், மந்திர ஜபம் மற்றும் பிராணாயாமம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பக்தர்களின் வேண்டுதலை அன்னையிடம் சேர்க்கும் அற்புத கிளி: திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில் ரகசியம்!
பிரம்ம முகூர்த்தம் - Brahma Muhurtham Science
logo
Kalki Online
kalkionline.com