தீராத விளையாட்டு பிள்ளை..!

கிருஷ்ணர் ஒரு 'மாயக் கண்ணன்' என்பதால், அவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
krishna in bama rukmani
krishna in bama rukmaniImage credit- AI Image
Updated on
Deepam strip
Deepam strip

பகவத் கீதை படிக்கவில்லை என்றாலும் உத்தவ கீதையை படிக்காமல் தவற விட்டு விடாதீர்கள்.

ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகா வந்து பல மாதங்கள் ஆகி விட்டன.

இன்று அவர், அவரது தேரோட்டி உத்தவருக்கு உபதேசம் செய்து விட்டு அரண்மனை வந்தார்.

ஓய்வு எடுக்க தனது அறைக்கு சென்றார்.

அப்போது பாமா வந்து காலை சிற்றுண்டி என்ன வேண்டும் என்று கேட்க,

“உன் இஷ்டம்… !” என்றார்.

பாமா போனதும் ருக்மணி வந்தார். அவரும் "என்ன சிற்றுண்டி வேண்டும்?" என்று கேட்டார்.

“உன் இஷ்டம்… !” என்றார் கிருஷ்ணர்.

பாமா, ருக்மணி இருவரும் போட்டி போட்டு கொண்டு சமைத்தார்கள்.

வெல்ல சீடை, கார சீடை, இனிப்பு அவல் (ஸ்ரீ கிருஷ்ணர் விரும்புவது) மற்றும் பருப்பு அடை மற்றும் வெண்ணெய் ஒரு கவளம் என்று செய்து இருந்தார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணர் சாப்பிட வந்தார். அவருக்கு நன்கு புரிந்து விட்டது. எனவே இரண்டு பேர் செய்ததையும் சாப்பிட்டார்.

பாமா, ருக்மணி சந்தோஷம் அடைந்தனர். அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் “ஏன்… ? நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து சமைக்க கூடாது… ?” என்று கேட்டார்.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை: உத்தவ கீதை ஏன் அவசியம்? ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது என்ன?
krishna in bama rukmani

இருவரும் “சரி… !” என்றனர்.

சமையல் அறையில் பாமா, ருக்மணி இருவரும் இணைந்து சமையல் செய்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு உள்ளே சண்டை ஆரம்பித்தது.

பாமா, "ஸ்ரீ கிருஷ்ணர் இன்று இரவு என் அறையில் தான் படுக்க வேண்டும்," என்று திட்டவட்டமாக சொன்னார்.

ஆனால் ருக்மணி சம்மதிக்கவில்லை. தனது அறையில் தான் படுக்க வேண்டும் என்று சொன்னார்.

மதியம்.

ஸ்ரீ கிருஷ்ணர் விரும்பி சாப்பிட்டார். அப்போது பாமா ருக்மணி இருவரும் தங்கள் விருப்பத்தை ஸ்ரீ கிருஷ்ணரிடம் சொன்னார்கள். இரவு தங்கள் அறையில் தான் படுக்க வேண்டும் என்று உறுதியாக சொன்னார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு புன்னகை மட்டுமே பதில்.

மாலை வந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் ஊஞ்சல் ஆடினார். பாமா ருக்மணி இருவரும் ஊஞ்சல் ஆட்டினார்கள்.

அப்போது பாமா கேட்டார்..

“இரவு என் அறையில் தானே.?"

ஸ்ரீ கிருஷ்ணர் மெல்லிய புன்னகை செய்தார். அடுத்து ருக்மணி அதே விஷயத்தை கேட்டார். அதற்கும் மெல்லிய புன்னகை தான் பதில்.

ஸ்ரீ கிருஷ்ணர் எதுவும் பேச வில்லை.

பாமா ருக்மணி இருவரும் சோர்வு அடைந்தார்கள்.

இரவு வந்தது.

பாமா அறைக்கு ஸ்ரீ கிருஷ்ணர் வந்தார். பாமாவுக்கு ஒரே சந்தோஷம், குஷி, பேரின்பம்.

ஸ்ரீ கிருஷ்ணர் குடிக்க மோர் கேட்டார். பாமா சில நொடிகளில் கொண்டு வந்தார்.

ஸ்ரீ கிருஷ்ணர் தூங்கலாமா என்று கேட்டார்.

இருவரும் நெருக்கமாக இருந்தனர்.

அதே வேளையில்...

ருக்மணி அறையில் ஸ்ரீ கிருஷ்ணர் இருந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு குவளை மோர் கேட்டார்.

ருக்மணி அவசர அவசரமாக கொண்டு வந்து கொடுத்தார்.

“சரி.. தூங்கலாமா… ?” என ஸ்ரீ கிருஷ்ணர் கேட்டார்.

“ம்ம்… !” என்று ருக்மணி சொல்லி விட்டு ஸ்ரீ கிருஷ்ணர் அருகே நெருங்கி உட்கார்ந்தார்.

இரவு முழுக்க முழுக்க பாமாவுடன்…

அதேபோல்… இரவு முழுக்க முழுக்க ருக்மணி உடன்…

இது எப்படி சாத்தியம்… ?

ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு மாய கண்ணன் என்று சொல்லப்படுவார்.

அவனது லீலைகள் கொஞ்சம் இல்லை. மிகவும் அரிதான விஷயத்தை கூட நிறைவேற்றி விடுவார்.

ஆம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; இன்றும் நேற்றுத்தான்!
krishna in bama rukmani

இரண்டு அறையிலும்

ஸ்ரீ கிருஷ்ணர் தான்… !

அவன் மாயக் கண்ணன்.!!

logo
Kalki Online
kalkionline.com