ஆன்மீகச் சிறுகதை: சிறந்த தர்மம்!

வைரத்தை விட விலைமதிப்பற்றது பக்தி மனம் என்பதை உணர்த்தும் ஆன்மீகச் சிறுகதை
ஆன்மீகச் சிறுகதை | poor woman vs Rich woman
ஆன்மீகச் சிறுகதை | poor woman vs Rich womanImage credit: Chatgpt
Updated on: 
Deepam strip
Deepam strip

தஞ்சை மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு சிவன் கோயிலில், அழகாகப் பெருக்கி நீர் தெளித்து கோலமிட்டு, பூக்களைப் பறித்து வந்து கொடுத்து, எல்லா கைங்கரியமும் செய்கிறாள் பூங்குழலி. அதுமட்டுமா? ஓதுவார் பாடல்கள் பாடுகிறாள்.

'தோடுகடைய செவியன்

விடையேறியோர் தூவெண் மதிசூடி

காடுடைய சுடலைப் பொடிபூசியன்

உள்ளம் கவர் கள்வன்' பாடிக்கொண்டே இருக்கும்பொழுது, தர்ஷாயினி காரில் வந்து இறங்குகிறாள். தர்ஷாயினியின் கணவர் பரமசிவன்.

இருவரும் நிறைய பைகளைக் கொண்டு வருகிறார்கள். அர்ச்சனை, ஆராதனைகள் அமர்க்களமாய் நடக்கிறது கோயிலில். மாலை மரியாதையோடு கிளம்பும்போது, ஒரு லட்ச ரூபாய்க்கு செக் எழுதிக் கொடுத்துவிட்டு கிளம்ப இருக்கிறாள் அவள்.

"இந்த அம்மாவுக்கு ஏதாவது செய்யணுமா?" என்று கேட்கிறாள், கோயில் அர்ச்சகரைப் பார்த்து.

"அம்மாவுக்கு செய்யணுமா? என்ன கேட்கிறீர்கள்?" என்று கேட்கிறார் அர்ச்சகர், இவர்களுக்கு ஒன்றும் விஷயம் தெரியாது என்று நினைத்து.

"ஆமாம், இவர்கள் பாவம் இங்கே நின்றுகொண்டு பாடிக்கொண்டிருக்கிறார்கள். சாதாரண உடை, சாதாரண நடையுடை பாவனை. இவர்களுக்கு ஏதாவது தரலாமா?" என்று கேட்கிறீர்.

"உங்கள் மனம் விருப்பப்பட்டால் எது வேண்டுமானாலும் செய்யுங்கள்," என்று கூறுகிறார் அர்ச்சகர், நம்மிடம் சிரிப்புடன்.

இதையும் படியுங்கள்:
ஆன்மீக கதை: பக்தனின் வடிவில் பக்தருக்காகச் சென்ற ஸ்ரீராமபிரான்!
ஆன்மீகச் சிறுகதை | poor woman vs Rich woman

அந்த அம்மாவும் கிட்டே சென்று, அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறாள். "ஒன்றும் வேண்டாம். அந்த சிவபெருமானுடைய அருளே எனக்குப் போதும்" என்கிறாள் அந்த அம்மையார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

அந்த அம்மாவிற்கு ஒரு 5000 ரூபாயை, கேஷாக எடுத்துக் கொடுக்கிறாள் தர்ஷாயினி. அதை அவள் நன்றியோடு பெற்றுக்கொள்கிறாள். அர்த்த புஷ்டியோடு பார்க்கிறார் அந்த பரமசிவத்தை.

என்ன அர்த்தம்? யாருக்குத் தெரியும்? அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அவள் மகள் ஓடிவருகிறாள்.

"அம்மா, நீ இதுவரை சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் எடுத்து வந்து, அன்னைக்கிதான் அர்ச்சகர் மாமாகிட்ட கொடுத்தேன் என்கிறாள். சேர்த்து வைத்திருந்த பணமா? என்ன கொடுத்தாள் அர்ச்சகர் மாமாவிடம்?" என்று கேட்கிறாள் தர்ஷாயினி.

"அதை ஏன் கேட்கிறீர்கள்? இந்த அம்மா ஓதுவார் பாடல்களைத் தினமும் பாடிக்கொண்டிருப்பார். யாராவது வந்து கையில் திணித்துவிட்டு செல்வார்கள் பணத்தை.

இவர்கள் சொந்தமாக, சந்தோஷமாக, நிம்மதியாக கணவர் இறந்தபிறகு, ஒரே மகள் தன்னை நன்றாக பார்த்துக் கொள்வதால் ஒரு மகிழ்ச்சியோடு சிவபெருமானுக்கு வந்த கோயிலில் பாடி வரும் பணத்தை அவருக்கே அளித்துவிட்டாள். இந்த வருடம் கும்பாபிஷேகம் விமரிசையாக நடக்க இந்த அம்மாவும் ஒரு காரணம்."

"என்ன?" என்று திகைக்கிறாள் தர்ஷாயினி.

ஆன்மீகச் சிறுகதை | poor woman vs Rich woman
ஆன்மீகச் சிறுகதை | poor woman vs Rich womanImage credit: Chatgpt

"ஆமாம், ஆமாம். இந்த வருடம் கும்பாபிஷேக செலவு எக்கச்சக்கமாகக் கூடிவிட்டது. விலைவாசி ஏற்றம் அல்லவா? இந்த அம்மா மட்டும் இல்லைன்னா நாங்க அவ்வளவுதான். 50,000 ரூபாய்க்குச் சொச்சம் துண்டு விழும் பணத்தை இந்த அம்மாதான் கொடுத்தா. ஒரு பானையிலேயே சேர்த்து வைத்திருந்தாள் பூங்குழலி. பசங்க கசங்கின நோட்டு எல்லாவற்றையும் அவளுக்குப் இரண்டு பேரன் எல்லாரும் பேரப்பசங்க ரெண்டு பேரு எல்லாரும்மாக அதை எண்ணுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. இந்த பணத்தை எண்ணிக்கொண்டு வந்து கொடுத்தாள். 50,000-க்கு சொச்சம் இருந்தது அம்மா," என்கிறார் தர்ஷாயினியிடம் அர்ச்சகர்.

"அப்படியா? அப்படியா?" என்று விதுவிதுத்துப் போகிறாள் தர்ஷாயினி.

"ஆமாம். தர்ஷாயினி நினைத்ததுபோல் வைரமும் காசுமாலையும் பகட்டாக வந்திருப்பவர்களுக்கு மட்டுமே பணம் இருப்பதில்லை. சில பேரிடம் மனம் இருக்கிறது, பணம் இல்லை. அந்தப் பணத்தை அடைந்த விதத்தையும், அந்தப் பணத்தை எப்படி உபயோகிக்கிறோம் என்பதைப் பற்றியும் பகவான் முடிவெடுக்கிறான். இறைவனால் படைக்கப்பட்டது எல்லாம் இறைவனுக்கே சொந்தம்" என்று கொள்கை உடையவர் பூங்குழலி. இறைவன் இந்தக் கோயிலில் தான் வந்து பாட ஆரம்பித்தவுடன் ஒரு அமைதியான மனநிலை, நிம்மதியான ஒரு சிறு எளிய வாழ்க்கை எனக்கு அது போதும் என்று நிறைவு கொண்டு அவள் இப்பொழுது மிகவும் சந்தோஷமாக வாழ்வதாக நினைக்கிறாள். அவள் மற்றவர்களுடைய ஆடை அலங்காரங்களைப் பார்ப்பதில்லை, எளிமையான நூல் சேலையைக் கட்டுவாள். தர்ஷாயினிக்கு விதுவிதுத்தது. இப்படி எல்லாம்கூட மனிதர்கள் இருக்கிறார்களா? ஆமாம், இருக்கிறார்கள்.

எப்படி தர்மம் செய்கிறோம் என்பது பெரிதல்ல. எப்படி எப்படி வருமானத்தில் தர்மம் செய்கிறோம், தர்மம் செய்யப்படுகிறது என்பது பெரிய விஷயம்.

அந்த விஷயத்தில், பூங்குழலி எங்கே இருக்கிறாள்? தர்ஷாயினி எங்கே இருக்கிறாள்? எங்கோ இருக்கிறாள். தர்ஷாயினிக்கு நிறைய, அவள் கணவர் இண்டஸ்ட்ரியலிஸ்ட், நிறைய பணம் வருகிறது. அவள் அதில் தர்மம் செய்கிறாள்.

பூங்குழலி எளிமையான நடத்தையாலே, அடுத்தவர்களைப் பார்த்து ஏக்கம் உற்று வாழும் நடத்தை எல்லாம் வாழவில்லை. அவள் சிறப்புடைய மனத்தைப் பெற்றிருந்தாள். சிவனுக்குத் தொண்டு செய்து, அந்தக் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக வேண்டிக்கொண்டு, உலகச் சேமத்திற்காகவும் வேண்டிக்கொண்டு அவள் எளிமையாக வாழ்ந்து வருகிறாள்.

அவள் மனம் நிறைவடைகிறது. மனம் எதனால் நிறைவடைகிறது என்பது அவரவர்கள் சிந்தனையைப் பொருத்ததல்லவா?

இதையும் படியுங்கள்:
ஆன்மீக கதை: பசும்பாலுக்காக தவம் இருந்த குழந்தை உபமன்யூவின் புராண வரலாறு!
ஆன்மீகச் சிறுகதை | poor woman vs Rich woman

அந்த விஷயத்தில், பூங்குழலியைப் பற்றி என்ன சொல்வது என்றே தர்ஷாயினிக்குத் தெரியவில்லை.

"இதோ பாருங்கோ, இந்த அம்மா நல்லா இருக்கணும்னு நம்ம தினம் பிரார்த்தனை பண்ணுவோம். இந்த ஊர்ல, இந்தக் கோயிலுக்கு இவ்வளவு தொண்டு செய்யும் இந்த அம்மா ரொம்ப ஷேமமா இருக்கணும். பேரப்பிள்ளைகள் நன்றாக இருக்கணுமா?" என்று வாழ்த்திவிட்டு காரில் ஏறச் செல்கிறாள்.

"அம்மா, ஒரு நிமிஷம்" என்கிறாள் பூங்குழலியின் பெண்.

"என்ன?" என்று கேட்கிறாள் அவள்.

"உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றினால், இந்த ஊரில் நிறைய குழந்தைகள் கல்வி அறிவுக்காகத் தவிக்கிறார்கள் அம்மா. இந்த ஊருக்கு வெளியே சென்று படிக்கிறார்கள். அந்தப் படிப்பிற்காக ஒரு கல்விச்சாலையை ஏற்படுத்திக் கொடுங்கள்" என்று கேட்டுக்கொள்கிறாள் பூங்குழலியின் பெண் வந்தனா.

அதன்படியே செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு கிளம்புகிறாள் தர்ஷாயினி பரமசிவத்தோடு.