ஆன்மீக கதை: பசும்பாலுக்காக தவம் இருந்த குழந்தை உபமன்யூவின் புராண வரலாறு!

பசும்பாலுக்காக சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து பாற்கடலை பரிசாகப் பெற்ற சிறுவன் உபமன்யூவின் ஆன்மீக வரலாறு பற்றிய ஆன்மீக கதை!
ஆன்மீக கதை | Lord shiva and Parvati and small boy
ஆன்மீக கதை | Lord shiva and Parvati and small boyImage credit: Gemini AI
ஆ.நர்மதா

வணக்கம்! என்னுடைய பெயர் ஆ.நர்மதா. நான் ஒரு முதுநிலை வேதியியல் பட்டதாரி. விருதுநகர் அருகில் இருக்கும் பாளையம்பட்டி என்னும் கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது இருந்தே எனக்கு தமிழின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தமிழின் மீது இருந்த ஆர்வத்தினால் கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் எழுத கற்றுக் கொண்டேன்.இந்த சமுதாய சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் என்னுடைய எழுத்துக்கள் எப்போதும் வீரியத்துடன் இருக்கும். இல்லத்தரசியாக இருந்து கொண்டு என்னுடைய எழுத்தாற்றலை படைத்து வருகிறேன்.

Updated on: 
Deepam strip
Deepam strip

தேவர்களும் அசுரர்களும் எம்பெருமானை நினைத்து கடும் தவம் புரிந்து அழியாத வரம் மற்றும் ஆயுதம் போன்ற பல பெரிய விஷயங்களை வரமாக பெற்றனர் என்பது புராணங்கள் வழியாக நமக்குத் தெரியும். இருப்பினும் ஒரு பச்சிளம் குழந்தை பசும்பாலுக்காக எம்பெருமானை நினைத்து தவம் புரிந்த கதை பலருக்கும் தெரியாத ஒன்று.

முன்பொரு காலத்தில் வியாக்ரபாத முனிவரும் அவருடைய மனைவியும் மகன் உபமன்யூவும் காட்டின் வசித்து வந்தனர். அவர்கள் கடும் வறுமையினால் அவதிப்பட்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

உபமன்யூவிற்கு பால் கூட வாங்க முடியாத அளவிற்கு கடும் வறுமை அவர்களை வாட்டிக் கொண்டிருந்தது. இதனால் உபமன்யூவின் தாயார் அவனுக்கு அரிசி மாவை நீரில் கலந்து பசும்பால் என்று கொடுத்து விடுவார்கள். உபமன்யூவும் அதனை உண்மையான பசும்பால் என்று நம்பி தினமும் அருந்தி விடுவான். இவ்வாறு பல நாட்கள் அவர்கள் வறுமையில் வாடிக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் உபமன்யூவும் அவனுடைய தாயாரும் அவர்களுடைய உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்பொழுது உபமன்யூவிற்கு உண்மையான பசும்பால் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஆன்மீக கதை: டார்வினின் பரிணாம வளர்ச்சியும், பெருமாளின் தசாவதாரமும்!
ஆன்மீக கதை | Lord shiva and Parvati and small boy

அந்த உண்மையான பசும்பாலை முதல் முறையாக பருகிய உடன் உபமன்யூ அதனுடைய சுவையை மறக்காமல் மனதில் வைத்திருந்தான். அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பினர். பசி என்று கூறிய உபமன்யூவிற்கு அவனுடைய தாயார் தினமும் வழங்குவதைப் போலவே பச்சரிசியை நீரில் கலந்து பசும்பால் என்று கொடுத்தால். ஆனால் அவன் அதனை பருக மறுத்தான்.

ஆன்மீக கதை | Lord shiva and Parvati and small boy
ஆன்மீக கதை | Lord shiva and Parvati and small boyImage credit: Gemini AI

தனக்கு உறவினர் வீட்டில் கொடுத்தது போல பசும்பால் வேண்டும் என்று தாயிடம் கேட்டு அடம்பிடித்தான். ஆனால் வறுமையின் காரணமாக உபமன்யூவின் தாயினால் உண்மையான பசும்பாலை அவனுக்கு கொடுக்க முடியவில்லை. இருப்பினும் தன்னுடைய மகனின் துயர துடைக்க வேண்டும் என்று எண்ணி அவள் உபமன்யூவிடம் நீ எம்பெருமானை நினைத்து தவம் புரிவாய்.

அவர் உனக்கு பசும்பால் கொடுப்பார் என்று உபதேசம் கூறினாள். உபமன்யூவும் தாய் கூறியபடியே காட்டில் ஒரு சிவபெருமானை பிரதிஷ்டை செய்தான். தினமும் அந்த சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து தவம் புரிந்தான். எம்பெருமான் உபமன்யூவின் தவத்தை சோதிக்கும் விதமாக அவன் முன் இந்திரன் வடிவத்தில் தோன்றினார்.

இந்திரன் வடிவத்தில் தோன்றிய சிவபெருமான் உபமன்யூவிடம் உனக்கு என்ன வரம் வேண்டுமோ அதை என்னிடம் கேள் நான் அதனை நிறைவேற்றி வைக்கிறேன்.

இதையும் படியுங்கள்:
ஆன்மீக கதை: பக்தனின் வடிவில் பக்தருக்காகச் சென்ற ஸ்ரீராமபிரான்!
ஆன்மீக கதை | Lord shiva and Parvati and small boy

சிவபெருமான் உனக்கு வேண்டியதை தர மாட்டார் என்று எம்பெருமான இகழ்ந்து கூறினார். உபமன்யூவிற்கு இந்திரன் கூறிய வார்த்தைகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. தான் வழங்கிய தெய்வத்தை அவதூறு கூறுகிறார்கள் என்று எண்ணி அவன் வாழ விரும்பாமல் உயிர்விட தயாரானான். அப்பொழுது உபமன்யூவின் பக்தியை கண்ட எம்பெருமான் தன்னுடைய இந்திர உருவத்தைக் கலைத்து உண்மையான எம்பெருமான் உருவத்தில் பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் உபமன்யூவிற்கு காட்சியளித்தார்.

அவர் உபமன்யூவை தன்னுடைய மடியில் அமர்த்திக் கொண்டு உன்னுடைய தவத்தை கண்டு நான் மன மகிழ்ச்சி அடைந்தேன். பசும்பால் கேட்டு தவம் புரிந்த உன் கலங்கமில்ல மழலை மனதிற்காக பாற்கடலை உனக்கு நான் அளிக்கிறேன் என்று கூறி அவனுக்கு என்றும் அழியாத இளமை மற்றும் சிவஞானத்தை வழங்கி ஆசீர்வதித்தார். இவ்வாறு உபமன்யூ தன்னுடைய குழந்தை பருவத்திலேயே தாய் கூறியபடி எம்பெருமானை நினைத்து தவம் புரிந்து “சிவத்தை உணர்ந்து வரத்தை பெற்ற” மாமனிதன் ஆவான்.

logo
Kalki Online
kalkionline.com