மஹாபாரதத்தில் கர்ண பர்வத்தில் எழுபத்திரண்டாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தர்மத்தைப் பற்றி விளக்கும் அருமையான சம்பவம் இடம் பெறுகிறது.
“தர்மம் என்பது சூட்சுமமானது. மீறக் கூடாதது. அதன் கதியை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.” - தர்ம ரகசியத்தை இப்படி விளக்கிய கிருஷ்ணர், “சத்தியத்தை உரைப்பது நலம். சத்தியத்தை விட மேலானது இல்லை. அந்த சத்தியமானது உள்ளபடி அறியப்படுவது மிக்க கஷ்டம் என்பது என்னுடைய அபிப்ராயம்” என்று தெரிவிக்கிறார்.
“எப்போது உண்மையானது பொய்யின் பயனைத் தருமோ அப்போது உண்மையைச் சொல்லக் கூடாது. அப்போது பொய் சொல்லலாம்.”
இதைச் சொல்லி விட்டு கிருஷ்ணர் ஐந்து இடங்களில் பொய்யைச் சொல்லலாம் என்கிறார்.
1. விவாக காலத்திலும்
2. ஒரு பெண்ணை உறவு கொள்ளும் போதும்
3. உயிருக்கே ஆபத்து என்ற நிலை நேர்ந்த போதும்
4. எல்லாச் சொத்துக்களும் கொள்ளை போகும் தருணத்திலும்
5. பிராமணனுக்கு உபகாரம் செய்ய வேண்டிய விஷயத்திலும்
"ஆக இந்த ஐந்து சமயங்களில் பொய் சொல்லலாம். அது மெய்யாகவே கருதப்படும். எல்லாப் பொருள்களும் களவு போகும் சமயத்தில் பொய் சொல்லத்தக்கதாக ஆகும். அச்சமயத்தில் பொய் உண்மையாகும். சில சமயங்களில் சத்தியமும் பொய் ஆகும். எவனால் சத்தியமானது நிச்சயிக்கப்படவில்லையோ அப்படிப்பட்ட அறிவில்லாதவன் நாசம் செய்யப்படுகிறான். மெய்யையும் பொய்யையும் நன்றாக நிச்சயித்த பிறகே தர்மங்களை ஒருவன் அறிந்தவன் ஆகிறான்."
இப்படி விளக்கிய கிருஷ்ணர் உதாரணமாக பலாகன் என்பவன் ஒரு பிராணியைக் கொன்றதால் அதிகமான புண்ணியத்தை அடைந்தான் என்று கூறவே, ஆர்வம் கொண்ட அர்ஜுனன் பலாகன் யார், அந்த விவரம் என்ன என்று கேட்கிறான்.
கிருஷ்ணர் பலாகனைப் பற்றிய கதையைக் கூறுகிறார்.
"பலாகன் என்று மிருகங்களை வேட்டையாடும் வேட்டைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் தன் பிள்ளைகள், பெண்கள், மனைவியைக் காப்பாற்றவே மிருகங்களைக் கொன்று வந்தான். மனப்பூர்வமாக அந்தக் கொலைகளை அவன் செய்யவில்லை. அவன் பொறாமை இல்லாதவன். தான் கொன்ற மிருகங்களின் மாமிசத்தை தினந்தோறும் நன்றாகப் பகிர்ந்து வயது முதிர்ந்த தாய் தந்தையர், தன்னை அடுத்திருக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்து அவர்களையும் காப்பாற்றி வந்தான்.
ஒருநாள் அவன், பெரியதும் மூக்கையே கண்ணாகக் கொண்டதுமான ஒரு துஷ்ட மிருகத்தைக் கண்டான். அப்படி ஒரு பிராணியை அவன் இதுவரை பார்த்ததில்லை.
இப்படிக் கூறி நிறுத்திய கிருஷ்ணர், இன்னொரு சம்பவத்தையும் அர்ஜுனனுக்குக் கூறுகிறார்.
அது கௌசிகன் என்ற அந்தணன் ஒருவனைப் பற்றியதாகும்.
"கௌசிகன் என்பவன் நதிகள் சேரும் இடத்தின் அருகில் உள்ள ஒரு வனத்தில் வசித்து வந்தான். எப்போதும் சத்தியமே பேச வேண்டும் என்ற விரதத்தைக் கொண்டவன் அவன். சத்யவாதி என்று அவனை எல்லோரும் புகழ்வார்கள்.
ஒரு சமயம் திருடர்களைக் கண்டு பயந்த சிலர், அவனது வனத்தில் புகுந்தனர். அவர்களைத் தேடி வந்த திருடர்கள் கௌசிகன் இருந்த வனத்திலும் தேட ஆரம்பித்தனர். கௌசிகனை அங்கு கண்ட திருடர்கள், “ஜனங்கள் எந்த வழியில் சென்றார்கள்?” என்று கேட்டனர்.
சத்திய விரதம் மேற்கொண்ட கௌசிகன், “இதோ இந்தப் பக்கம்” என்று உண்மையைச் சொல்லி விட்டான். திருடர்கள் அந்த மக்களைக் கண்டுபிடித்துக் கொன்று விட்டார்கள்.
தர்மத்தின் சூட்சுமத்தை அறியாததால் மற்றவர்களின் மரணத்திற்குக் காரணமான அவன் மிகவும் கஷ்டமான நரகத்தை அடைந்தான். தர்மத்தை நன்கு அறியாதவன் குருடன் குழியில் விழுவது போல விழுகிறான்” என்று கூறி முடித்தார் கிருஷ்ணன்.
அதை அவன் கொன்றான். கண் இல்லாத பொட்டையாக இருந்த அதை அவன் கொல்லவே, அந்தச் சமயத்தில் ஆகாயத்திலிருந்து பூமாரி பொழிந்தது. அவனை அழைத்துச் செல்வதற்காக அப்ஸரஸ் ஸ்தீரிகளுடைய கானங்களாலும் நானாவித வாத்திய கோஷங்களாலும் ஒலிக்கப்படும் மனோகரமான விமானம் ஒன்று சொர்க்கத்திலிருந்து புறப்பட்டு வந்தது.
அந்த மிருகமானது எல்லா மிருகங்களையும் நாசம் செய்வதற்காக தவம் இருந்து வரத்தைப் பெற்ற மிருகம். பிரம்மாவினால் அது குருடாக்கப்பட்டது.
எல்லா மிருகங்களையும் கொல்ல தவம் புரிந்த அதைக் கொன்றதால் பலாகன் சொர்க்க லோகத்தை அடைந்தான்.
ஆக இப்படியாக தர்மமானது எளிதில் அறியப்பட முடியாத ஒன்று."