நீதி தவறினால் சனி பகவானுக்கும் தண்டனை உண்டு... பிப்லாட் அவதாரத்தின் அதிரடி கதை!

Pippalada Avatar
lord shivacredit pinterest
Published on
deepam strip
deepam strip

டவுளின் அவதாரம் என்றாலே, விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களையே அனைவரும் அறிவர். காக்கும் கடவுளான விஷ்ணு பகவான், பூமியில் தர்மத்தை நிலைநாட்ட ஒன்பது அவதாரங்கள் எடுத்தார். ஆனால், அழிக்கும் கடவுளான சிவபெருமான் எடுத்த அவதாரங்கள் அவ்வளவு அறியப்படவில்லை. சிவபெருமானும் அதர்மத்திற்கு எதிராக அவதாரங்கள் எடுத்திருப்பதை இக்கதையில் பார்க்கலாம்.

சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் உள்ளன. சிவபெருமான் எடுத்த 19 அவதாரங்களில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; இதுவே சிவபெருமான் எடுத்த முதல் அவதாரமாகும்.

ஒரு காலத்தில் தாதிச்சி முனிவர் மற்றும் அவருடைய மனைவி சுவர்ச்சலா ஆகிய இருவருக்கும் மகனாகப் பிறந்தார் சிவபெருமான். அக்குழந்தைக்கு 'பிப்லாட்' என்று பெயரிட்டனர். பிப்லாட் பிறப்பதற்கு முன்பாக தாதிச்சி முனிவர் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார்.

பிப்லாட் வளர்ந்து வரும்போது தன் தாயிடம், "என் தந்தை என்னை ஏன் பிரிந்து சென்றார்?" என்று கேட்டான். அதற்குத் தாயார், "நீ குழந்தையாகக் கருவில் இருக்கும்போதே உனக்குச் சனி திசை நடப்பதை அறிந்த உன் தந்தை, அதன் தாக்கத்தினால் வீட்டை விட்டு வெளியே சென்றார்," எனக் கூறினார்.

இவ்வாறு பிப்லாட், குழந்தைப் பருவத்திலேயே தனது தந்தையின் அன்பை இழந்து வளர்ந்தான். சனி திசை காரணமாகவே தனது தந்தை தன்னை விட்டுப் பிரிந்து சென்றதை அறிந்த பிப்லாட், இதனால் கோபமடைந்து, சனி பகவானைச் சபித்தான். அந்த சாபத்தின் காரணமாக, சனி பகவான் விண்ணில் கிரக நிலையை விடுத்து மண்ணில் விழுந்தார்.

பின்னர் பிப்லாட், சிவபெருமானின் அவதாரம் என்று உணர்ந்து சனி பகவான் அவரிடம் மன்னிப்பு கோரினார். சிவபெருமானும் அவரை மன்னித்து, "இனி 16 வயது பூர்த்தி அடைவதற்குள் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது!" என்ற நிபந்தனையோடு சனி பகவானின் சாபத்தைப் போக்கினார். சனி பகவான் மீண்டும் கிரக நிலையை அடைந்தார்.

பிப்லாட் கடவுளை வணங்குவதன் மூலம் சனி பகவானின் தொந்தரவுகள் நீங்கும். இந்த பிப்லாட் வழிபாடு வட மாநிலங்களிலேயே அதிகமாகக் காணப்படுகிறது.

எப்பாவமும் அறியாத கருவில் இருக்கும் குழந்தையைச் சனி பகவான் தாக்கியதன் காரணமாக, அக்குழந்தை வளர்ந்து வரும் வரை தனது தந்தையின் அன்பை இழந்தே வளர்ந்தது. இந்நிலைக்குச் சனி பகவானே காரணம்; கடவுளாகவே இருந்தாலும் சில சமயங்களில் நீதி தவறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
100 முறை திருப்பதி போன புண்ணியம் வேண்டுமா? இந்த ரகசிய இடத்திற்கு போங்க!
Pippalada Avatar

சிவபெருமானின் இந்த அவதாரம் சனீஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கும், சனியைத் தண்டிப்பதற்காகவும் எடுக்கப்பட்ட அவதாரமாகும். சனி பகவானின் தாக்கத்தைக் குறைப்பதற்குச் சிவபெருமான், ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் வழிபாடு உகந்தது. மேலும் சிவ வழிபாடு அனைத்துத் துன்பங்களிலிருந்தும் முக்தியைத் தந்து மன அமைதியைத் தரவல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com