திருப்பதி லட்டு இப்படித்தான் செய்யப்படுகிறதா? யாருக்கும் தெரியாத வியப்பூட்டும் உண்மைகள்!

விறகு அடுப்பு முதல் அமுல் நெய் வரை: திருப்பதி லட்டின் சுவாரஸ்யமான ஆன்மீக வரலாறு!
திருப்பதி லட்டு - Tirupati Laddu,
திருப்பதி லட்டு - Tirupati Laddu,
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on: 

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு, ஸ்ரீவாரி லட்டு என்ற பெயரில் தனித்துவமான ஆன்மீக முக்கியத்துவம் கொண்டது. திருப்பதி கோவிலில் 1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் வழக்கம் தொடங்கியது

ஆரம்பத்தில் பூந்தி லட்டு வழங்கப்பட்டு, பின்னர் 1803 இல் லட்டு வடிவம் விற்கப்பட்டது. 2009இல் இந்த லட்டுவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. திருமலையில் லட்டு போடு எனப்படும் சிறப்பு மடப்பள்ளியில் இந்த லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. சாதாரணமான பக்தர்களுக்கு 175 கிராம் லட்டு வழங்கப்படுகிறது.

கல்யாண உற்சவ லட்டு 750 கிராம் எடை கொண்டது. ஆஸ்தான லட்டு என்பது உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. கடலை மாவு சர்க்கரை நெய் முந்திரி ஏலக்காய் திராட்சை பனங்கற்கண்டு ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. தினசரி மூன்றரை லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இவை பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

ஸ்ரீவாரி லட்டு என்பது திருப்பதி பெருமாளுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் 90 மில்லியன் லட்டுகள் தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இந்த லட்டுகளை வாங்குவதற்கு பக்தர்கள் பெரிய வரிசையில் நின்று வாங்க வேண்டும். தற்போது நிறைய கவுண்டர்கள் வந்துள்ளது. திருப்பதியில் லட்டுக்கு இணையாகாது.

லட்டு தயாரிப்பதற்கு பிரத்தியேக வழிமுறைகள் உள்ளன. இது ஒரு தனித்துவமானது. உலகில் வேறு எங்கும் இதுபோன்ற நடைமுறை கிடையாது. தினமும் மூன்றரை லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் மேலாக இந்த லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு மூன்றே பொருட்கள்... வாயில் கரையும் சுவையில் பாசிப்பயறு லட்டு!
திருப்பதி லட்டு - Tirupati Laddu,

ஆரம்பகாலத்தில் லட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த லட்டுகள் எளிதில் கெட்டுப்போகாது. இந்த லட்டின் வடிவம் ஆறுமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

175 கிராம் லட்டுவிற்கு கல்யாண லட்டு என்று பெயர். திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் நபர்களுக்கு இந்த லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக விறகு அடுப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

லட்டின் தரத்தை ஆராய ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து கழகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது.

சமீபகாலமாக பிரத்தியேக இயந்திரங்கள் மூலம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. திருவிழா நேரங்களில் நாலு லட்சத்துக்கு அதிகமாக லட்டுகள் தயாரிக்கப்படுகிறது.

லட்டு தயாரிப்பதற்கு தினமும் 500 கிலோ நெய், 750 கிலோ முந்திரி, 500 கிலோ உலர்திராட்சை 200, கிலோ ஏலக்காய் பயன்படுத்தப் படுகிறது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை 5 லட்சம் கிலோ நெய் வாங்கப்படுகிறது. சமீபகாலமாக ஆந்திராவில் உள்ள அமுல் நிறுவனத்தில் இருந்து நெய்டெண்டர் மூலம் வாங்கப்படுகிறது.

திருப்பதி லட்டு - Tirupati Laddu,
திருப்பதி லட்டு - Tirupati Laddu,

இந்த லட்டுகள் தயாரிப்பதற்கு தினமும் இரண்டு ஷிப்டுகளில் 600 சமையல் நிபுணர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் லட்டு ஏழுமலையான் தாயார் வகுள மாதாவிற்கு வழங்கப்பட்டு அதன் பின்னர் ஏழுமலையானுக்கு படைக்கப்பட்டு அதன் பின்னர் தான் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த லட்டு தயாரிப்பில் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள்.

லட்டு தயாரிப்பவர்கள் மொட்டை அடித்தும் இடுப்பில் ஒரு வேட்டி மட்டும் அணிந்துகொண்டு பணியில் ஈடுபடு கிறார்கள். ஆரம்ப காலத்தில் பணியாரம் அப்பம் வடை அதிரசம் என்று மனோகரபடி என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. 1803 இல் இருந்து பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.

ஒரு லட்டு தயாரிக்க பயன்படும் 51 பொருட்களை ஒரு படி என்கின்றனர். ஒரு படிக்கு 5100 லட்டுகள் தயாரிக்கலாம். 5200 லட்டுகள் தயாரிக்க 852 கிலோ எடை உள்ள பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு மூன்று கோடிக்கு மேல் உண்டியல் வருமானம் கிடைத்து வருகிறது. முதன்முதலில் லட்டு பல்லவர் காலத்தில் தோன்றியது.

திருப்பதி லட்டுவை வடிவமைத்தவர் லட்டு அரசர் என அழைக்கப்படும் கல்யாண அய்யங்கார் ஆவார். அவர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் ஆரம்பகாலங்களில் லட்டுக்களை தயாரித்து வந்தனர். தற்போதும் பரம்பரை பரம்பரையாக லட்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பாட்டி வீட்டுச் சுவை மாறாத தட்டைப்பயறு வடை மற்றும் தயிர் வடை ரெசிபி!
திருப்பதி லட்டு - Tirupati Laddu,
logo
Kalki Online
kalkionline.com