ஹாய் குட்டீஸ்!🤩 ஆப்பிரிக்க நெட்டிசன் ஒட்டகச்சிவிங்கியைப் பற்றித் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
ஒட்டகச்சிவிங்கிதான் உலகில் மிகவும் உயரமான விலங்கு. நன்கு வளர்ந்த ஒரு ஆண் ஒட்டகச்சிவிங்கியின் உயரம் சுமார் 18 அடி வரை இருக்கும்.
ஒட்டகச்சிவிங்கியின் இதயம் மிகவும் பெரியதும், வலிமையானதும் ஆகும். இதன் எடை சுமார் 11 கிலோகிராம் மற்றும் சுற்றளவு 2 அடி வரை இருக்கும்!
அதன் உயரத்தின் காரணமாக, புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக இரத்தத்தை அதன் தலை வரை அனுப்ப வேண்டிய அவசியத்திற்காகவே இவ்வளவு எடையும் சக்தியும் வாய்ந்த இதயம் அதற்குத் தேவைப்படுகிறது.
ஆண் ஒட்டகச்சிவிங்கிகள் ஒன்றோடு ஒன்று தங்கள் கழுத்துகளால் தாக்கிக் கொண்டுதான் சண்டையிடும். அதன் சக்தி அதன் கழுத்திலும் கால்களிலும்தான் உள்ளது.
ஒவ்வொரு ஒட்டகச்சிவிங்கியின் தோலில் உள்ள புள்ளிகளும் வேறுபடும். இவை மனிதர்களின் கைரேகைகளைப் போல தனித்துவமானவை.
ஆண் ஒட்டகச்சிவிங்கிகள் ஒவ்வொன்றும் தனக்கென்று ஒரு எல்லையை (Territory) நிர்ணயித்துக் கொள்கின்றன. மற்ற ஆண் சிவிங்கிகள் அந்த எல்லையை மீறினால், கடுமையாகச் சண்டையிடுகின்றன.
ஒட்டகச்சிவிங்கிக் கன்று பிறக்கும்போதே சுமார் ஆறடி உயரமும் 68 கிலோகிராம் எடையும் கொண்டு அசத்துகிறது.
தாய் ஒட்டகச்சிவிங்கிகள் 'இது என் குட்டி, அது உன் குட்டி' என்று பார்க்காமல், கன்றுகளை கூட்டாகப் பால் கொடுத்துப் பாதுகாக்கும். இதை ஆங்கிலத்தில் நர்சரி ஹெர்ட் (Nursery Herd) என்று அழைக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் கங்காரு இருப்பது போல, ஒட்டகச்சிவிங்கி ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டுமே காணப்படும் ஒரு விலங்கு ஆகும்.
சண்டைக்கான பிரதான சக்தியும் வலிமையும் அதன் கழுத்து மற்றும் கால்களில்தான் குவிந்துள்ளது.