பில்டிங் பிளாக்ஸ் (Building Blocks) பற்றி நீங்கள் அறிந்திராத ரகசியங்கள்!

Building Blocks
Building Blocks
Published on

ஹாய் குட்டீஸ்! உங்களுக்கு பில்டிங் பிளாக்ஸ் (Building Blocks) பிடிக்கும் தானே? அந்தச் சின்னச் சின்ன பிளாஸ்டிக் துண்டுகளை வைத்து, பெரிய பெரிய கோட்டைகளையும், கப்பல்களையும், ரோபோக்களையும் உருவாக்குவது எவ்வளவு ஜாலியான விஷயம்.

இன்று உலகப் புகழ்பெற்ற விளையாட்டுப் பொருள்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள இந்த பில்டிங் பிளாக்ஸின் (Building Blocks) சுவாரஸ்யமான வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்.

  • பில்டிங் பிளாக்ஸுக்கு (Building Blocks) லெகோ (LEGO) என்ற பெயர் உண்டு. லெகோ என்பது டென்மார்க்கைச் சேர்ந்த 'தி லெகோ குரூப்' (The LEGO Group) என்ற நிறுவனத்தின் வணிகப் பெயர் ஆகும். இது 1932 ஆம் ஆண்டு ஓலே கிர்க் கிறிஸ்டியன்சென் (Ole Kirk Christiansen) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. முதலில், இது மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளைத் தயாரிக்கும் ஒரு சிறிய நிறுவனம் ஆகும்.

  • LEGO என்ற பெயர், டென்மார்க் மொழியில் உள்ள 'leg godt' என்ற வார்த்தைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. இதன் பொருள் 'நன்றாக விளையாடு' (Play Well) என்பதாகும்.

  • லெகோ என்ற வார்த்தைக்கு லத்தீன் மொழியில் 'நான் ஒன்றிணைக்கிறேன்' அல்லது 'நான் அசெம்பிள் செய்கிறேன்' என்ற அர்த்தமும் இருக்கிறதாம்.

  • 1949-ல் தான் லெகோ நிறுவனம் முதல் பில்டிங் பிளாக்ஸ் கட்டைகளை (Automatic Binding Bricks) செய்ய ஆரம்பித்தது. இதுதான் தற்போது நாம் விளையாடும் லெகோவுவின் முதல் வடிவம்.

  • செங்கலின் கீழே உள்ள உள்ளீடற்ற குழாய்கள் (hollow tubes) கொண்ட வடிவமைப்பு 1958-ல் தான் காப்புரிமை (Patent) பெறப்பட்டது. இந்த வடிவம்தான் லெகோ துண்டுகள் கெட்டியாக ஒட்டிக்கொள்ள உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
உடைந்த பொருட்களால் உருவான உலக அதிசயம்! அது என்னனு தெரியுமா குட்டீஸ்?
Building Blocks
  • இவற்றில் ஆச்சரியம் என்னவென்றால், 1958-ல் செய்யப்பட்ட லெகோ துண்டுகளும், தற்போது நாம் வைத்திருக்கும் புதிய லெகோ துண்டுகளும் சரியாகப் பொருந்தும். லெகோ நிறுவனம் அதன் தரத்தை எப்போதும் மாற்றுவதில்லை.

  • லெகோ நிறுவனம்தான் தான் உலகிலேயே அதிகமான டயர்களை (சக்கரங்கள்) தயாரிக்கும் நிறுவனம். உண்மையான கார்களுக்கான டயர் கம்பெனிகளை விட, லெகோ பொம்மை கார்களுக்கான டயர்களை அதிகமாகத் தயாரிக்கிறது.

  • லெகோ நிறுவனத்தால் இதுவரை 4 பில்லியனுக்கும் அதிகமான சிறிய பொம்மை மனித உருவங்கள் (Minifigures) தயாரிக்கப்பட்டுள்ளன. இது உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகம்.

இதையும் படியுங்கள்:
பைனாகுலரை விட சக்தி வாய்ந்த பார்வை யாருக்கு?
Building Blocks
  • 2x4 அளவுடைய 6 ஆறு லெகோ செங்கற்களைக் கொண்டு, 900 மில்லியனுக்கும் அதிகமான வழிகளில் ஒட்டி வைக்க முடியுமாம். எவ்வளவு படைப்பாற்றல் திறன் கொண்டது.

  • ஒவ்வொரு ஆண்டும் விற்கப்படும் லெகோ துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கினால், அது பூமியை ஐந்து முறை சுற்றி வருவதற்குச் சமமாம்.

  • லெகோ துண்டுகள் மிகவும் கெட்டியாக ஒட்டிக் கொள்வதற்கு, அவை ஒன்றாக இணைக்கப்படும்போது உள்ளே ஏற்படும் சிறிய அழுத்தம்தான் காரணம். அதை அவர்கள் 'Clutch Power' என்று அழைக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மின்மினிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் கண்மணிகளே!
Building Blocks
  • லெகோ பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் விழுந்தால், அது முழுவதுமாக சிதைந்து (Breakdown) போக 1300 வருடங்களுக்கும் மேல் ஆகுமாம். அதனால் தான் லெகோவை மறுசுழற்சி (Recycle) செய்வது ரொம்ப முக்கியம்.

  • இது வெறும் பொம்மை அல்ல. லெகோவை வைத்து விளையாடுவது குழந்தைகளின் கற்பனைத் திறனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறனை (Problem Solving Skills) வளர்க்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆப்பிள் ஏன் நீரில் மிதக்கிறது? 99% யாருக்கும் தெரியாத உண்மை!
Building Blocks
  • லெகோவில் சாதாரணச் செங்கற்கள் மட்டுமின்றி, பெரிய குழந்தைகளுக்காக 'டெக்னிக் (Technic)' போன்ற நுணுக்கமான பாகங்களும், மிகச் சிறிய குழந்தைகளுக்காகச் சாதாரண செங்கற்களை விட இரண்டு மடங்கு பெரிய 'டூப்ளோ (Duplo)' செங்கற்களும் உள்ளன.

லெகோவை வைத்து விளையாடுவது மட்டுமில்லாமல், அதன் வரலாற்றையும் தெரிந்துகொள்வது ஜாலியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது இல்லையா? இந்தச் சின்னச் சின்ன பிளாஸ்டிக் துண்டுகளுக்குப் பின்னாடி எவ்வளவு பெரிய கதை இருக்கு பாத்தீங்களா குட்டீஸ்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com