

பூமியில் தண்ணீர் குடிக்காமலேயே உயிர் வாழும் விசித்திர விலங்குகள் எவை? அவற்றின் உடல் இயக்கம் மற்றும் உயிர்வாழும் ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்நாள் முழுதும் தண்ணீரை திரவமாக நேரடியாக உட்கொள்ளாத உயிரினங்கள் நம் பூமியில் இருக்கின்றன என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். அது உண்மை. இவ்வகை உயிரினங்கள் தங்களுக்கு தேவையான நீரை தாங்கள் உண்ணும் இலை தழைகளிடமிருந்தோ அல்லது காற்றில் உள்ள ஈரத்தன்மைகளிலிருந்தோ பெற்றுக்கொள்கின்றன. உதாரணமாக முற்றிலும் வறண்ட பிரதேசங்களில் வாழும் கங்காரு எலி, கோலாஸ் போன்றவை தண்ணீர் தேடி அலைவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தங்கள் உடம்பிலிருந்தே தண்ணீர் எடுக்கும் ஜெகஜால மிருகங்களும் உண்டு.
கங்காரு எலியை எடுத்துக்கொண்டால், இவ்வகை பாலைவன எலிகள் ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கொரு முறை தான் தண்ணீரில் வாய் வைக்கின்றன. இந்த எலிகள் தங்கள் உணவை ஜீரணிக்கும் போது உணவில் இருக்கும் ஹைட்ரஜனை கொண்டு தண்ணீர் தயாரித்து விடுகின்றன. இவற்றின் வயிறு பரிசோதனை கூடமாக மாறிவிடுகிறது.
முள் மூர்க்கன் (Thorny Devil) தண்ணீர் தயாரிக்கும் முறையே தனி. தனது தோலை உபயோகித்து காற்றிலுள்ள ஈர பசையை தண்ணீராக மாற்றிவிடுகிறான் இந்த கில்லாடி. நாக்கை தொங்க போட்டு கொண்டு தண்ணீர் தண்ணீர் என்று இவன் அலைந்ததில்லை. மண்ணில் புரண்டு மணலிலிருந்து தண்ணீரை உறிஞ்சி விடுவான் இந்த வில்லாதி வில்லன்.
சாண்ட் காஸேல் இன்னொரு பலே பாண்டியன். தான் சாப்பிடும் தாவரங்களிலிருந்து தண்ணீரை எடுப்பது மட்டுமன்றி தனது சுவாசத்தை கட்டுப்படுத்தியும் உடலின் தண்ணீர் தேவையையும் தண்ணீர் வீண்ணாவதையும் கட்டுக்குள் வைக்கிறான்.
அடுத்தது ஜெரபாவோ என்ற சிறிய கொறித்துண்ணி அதாவது RODENT. இவனது கிட்னியை தண்ணீர் தயாரிக்கும் ப்ளண்ட்டாக வேலை செய்கிறது.
Freshwater Fish தூய தண்ணீரிலேயே கிடந்தாலும் வாய் வழியே தண்ணீர் குடிப்பதில்லை. தனது செதில்களின் மூலம் osmosis முறையில் தண்ணீரை உடலுக்குள் செலுத்திக்கொள்கிறது
இந்த வகை உயிரினங்கள் எப்படி தண்ணீர் இல்லாமல் காலம் தள்ளுகின்றன என்று கேட்டால் அதற்கு பதில் இதுதான்.
1. இந்த வகை பிராணிகள் தங்கள் உணவை கொழுப்பு கார்போஹைட்ரேட் என பிரித்து தண்ணீர் உற்பத்தி செய்கின்றன.
2. இவற்றின் சிறுநீரகங்கள் தனித்தன்மை வாய்ந்தவை.. இவற்றிலிருந்து கொஞ்சத்தில் சிறுநீர் வராது. வந்தாலும் அது மிகவும் கான்சண்ட்ரேட்டட் ஆக இருக்கும். ஒன்றோ இரண்டோ சொட்டு தான் வெளிவரும் என்றால் பாருங்களேன்.
3. மூன்றாவதாக வரும் காரணம் இவ்வகை பிராணிகள் சாப்பிடும் தாவரங்கள் நீர் சத்து மிகுந்து காணப்படுவதாகும்.
4. இவ்வகை பிராணிகள் அதாவது தண்ணீரை திரவமாக குடிக்காத உயிரினங்கள் முக்கால் வாசி இரவில் நடமாடும் பிராணிகளாக இருப்பதுதான். சூரிய ஒளியினால் உஷ்ணத்தால் இவை உடலில் உள்ள நீர் தன்மையை இழப்பதில்லை. எந்த கடுமையான சூழ்நிலைகளில் பிறப்பிக்கபட்டாலும் இப்படி பட்ட உயிரினங்களுக்கு அவற்றிற்கு தேவையான அடிப்படை தேவைகளை கடவுள் ஏதாவது ஒரு வழியில் தந்து விடுகிறார் வாழ்த்துவோம் அவரை..
இயற்கையின் விசித்திரமான படைப்புகளை அறிந்துகொள்வதன் மூலம், நமது பூமியின் சூழலியல் அற்புதங்களைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற்று, இயற்கை மீதான உங்கள் வியப்பையும் அறிவையும் பன்மடங்கு பெருக்கிக் கொள்ளலாம்.